Saturday, March 21, 2026

வர்க்கோத்தமம் - கிரகங்களின் பலம்

 🤔 வர்க்கோத்தமம் - கிரகங்களின் பலம்


ஜோதிடத்தில் வர்க்கோத்தமம் என்பது ஒரு கிரகம் ராசி சக்கரத்திலும் - நவாம்ச சக்கரத்திலும் - ஒரே ராசியில் இருப்பதைக் குறிக்கும் யோகம். இது அந்தக் கிரகத்துக்கு சிறப்பு வலிமை அளித்து, அதன் பலன்களை இரட்டிப்பாக்கும்.


வர்க்கோத்தமம் ஏற்படும் இடங்கள்:

👍ராசி நட்சத்திர பாதங்களின் அடிப்படையில் வர்க்கோத்தமம் உண்டாகும்:

மேஷம் - அஸ்வினி 1

ரிஷபம் - ரோகிணி 2

மிதுனம் - புனர்பூசம் 3

கடகம் - புனர்பூசம் 4

சிம்மம் - பூரம் 1

கன்னி - உத்திரம் 2 

துலாம் - சித்திரை 3 

விருச்சிகம் - அனுஷம் 4 

தனுசு - உத்திராடம் 1 

மகரம் - உத்திராடம் 2 

கும்பம் - சதயம் 3 

மீனம் - ரேவதி 4






👍 இந்தப் பாதங்களில் கிரகம் இருந்தால், நவாம்சத்திலும் அதே ராசியில் இருக்கும்.


கிரகங்களின் பலன்கள்

சூரியன்: அரசு - அரசாங்கம் - ஆட்சி - அதிகாரம் - தந்தை - ஆன்மா சம்பந்தப்பட்ட ஆய்வு, தொடர்பு

​சந்திரன்: மன வலிமை - கற்பனை - தாயார் வழி 

​செவ்வாய்: தைரியம் - ராணுவம்/காவல் - சொத்து - வாகனம் - அதிகாரம் - கோபம் - மருத்துவம்

​புதன்: பேச்சுத் திறன் - எழுத்து திறன் - கணிதம் - வியாபாரம்

குரு: ஞானம் - ஆன்மிகம் - போதனை - குலதெய்வம் - குழந்தை

சுக்கிரன்: அழகு - கலை - சுவை - தாம்பத்யம் - வாழ்க்கைத்துணை

சனி: பொறுமை - ஆயுள் - தொழில் - வெற்றி - கர்மா சம்பந்தப்பட்ட விஷயங்கள்

​ராகு: தந்தை வழி விஷயங்கள் - தோல் சம்பந்தப்பட்ட விஷயங்கள் - பெரிய அளவிலான வெற்றிகள்

கேது: தாய் வழி விஷயங்கள் - ஆன்ம பலம் - உடல் அமைப்பு

👍 லக்னம் வர்க்கோத்தமமாக இருந்தால் நீண்டாயுள், செல்வம் உண்டு. 

👍 சுபகிரகங்களுக்கு நல்லது

👍 பாபகிரகங்களுக்கு அதிக தீமை.


உதாரணம்:

குழந்தை பிறந்த தேதி: 15.05.1990; காலை 6.45; சென்னை

பெண் குழந்தை


இந்த ஜாதகத்தில் லக்னம் - சந்திரன் - சனி ஆகியோர் வர்க்கோத்தமம் அடைந்திருக்கிறார்கள்.

லக்னம் வர்க்கோத்தமம் என்பதால் மிகுந்த தன்னம்பிக்கை கொண்டவர்.

சந்திரன் அஷ்டம ஸ்தானத்தில் வர்க்கோத்தமம் என்பதால் சந்திரன் தசையில் மிகுந்த சிரமத்திற்கு உள்ளானார்.

பாக்கிய ஸ்தானத்தில் சனி வக்ர நிலை வர்க்கோத்தமம். தந்தை வழியில் கர்மா அதிகம் கொண்டவர். தந்தை வழி சொத்துக்கள் எதுவும் இவருக்கு வந்து சேரவில்லை. அதே வேளையில் இவர் சுயம்புவாக உழைத்து மிக நல்ல நிலையில் இருக்கிறார்.



🙏 அடியேன் தாசன் 

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

பரம்பரை ஜோதிடர்

+91 78 45 11 95 42


No comments: