Thursday, June 30, 2011

இன்றைய ஜோதிடக்குறிப்பு: ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 02


ஒரு வீட்டில் இரண்டு விளக்குகள் ஏற்றி வழிபடலாமா? - பாகம் 02

கேள்வி: விளக்கு ஏற்றும் போது என்னென்ன மந்திரங்கள் சொல்லலாம்?

பதில்: “ஸர்வ மங்கள் மாங்கல்யே” என்று தொடங்கும் மந்திரம் சொல்லலாம். “ஓம் நமசிவாய” என்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லலாம்.  “ஓம் நமோ நாராயணாய” என்ற எட்டெழுத்து மந்திரம் சொல்லலாம். “தனந்தரும் கல்வி தரும்” என்று தொடங்கும் அபிராமி அந்தாதி சொல்லலாம். ஒன்றுமே தெரியாவிட்டால் “ஓம் சக்தி பராசக்தி” என்று சொல்லியும், உள்ளார்ந்த அன்புடனும் விளக்கு ஏற்றி வழிபடலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றுவதில் ஆண்-பெண் பேதம் இருக்கிறதா?

பதில்: விளக்கு ஏற்றுவது கண்டிப்பாக பெண்கள் வீட்டில் இருந்தால் பெண்கள்தான் ஏற்ற வேண்டும். இரவு தூங்க செல்லும் முன் விளக்கை குளிரூட்டுவதற்கு கொஞ்சம் பாலை நிவேதனம் செய்த பின் அணைக்கலாம். விளக்கை வாயால் ஊதி அனைத்தல் கூடவே கூடாது. விசிறியின் மூலமாகவோ அல்லது ஏதேனும் பேப்பர் அட்டையினைக் கொண்டோ அனைக்கலாம். பெண்கள் சில நாட்களில் வீட்டில் இல்லாத சமயங்களில் ஆண்கள் இந்த வேலைகளை செய்யலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றுவதால் என்ன பயன்?

பதில்: நமது முன்னோர்கள் எதையுமே ஆழ்ந்து சிந்தித்துதான் சொல்லியுள்ளனர். நமது வீட்டினில் இருக்கும் எதிர்மறையான அலைகளை இந்த விளக்கின் மூலம் ஏற்படும் அலைகள் நேர்மைறையான அலைகளாக மாற்றும். அதனால்தான் கோவில்களில் இருக்கும் விளக்குகள் அளவில் பெரியதாக இருக்கும்.

கேள்வி: கண்டிப்பாக பஞ்சமுக (ஐந்து முக) விளக்குதான் ஏற்ற வேண்டுமா?

பதில்: பஞ்ச முக விளக்குதான் ஏற்ற வேண்டும் என்பது இல்லை. அதுவும் வெள்ளியில்தான், பஞ்சலோகத்தில்தான், பித்தளையில்தான் இருக்க வேண்டும் என்ற எந்த ஒரு நிபந்தனையும் இல்லை.  அகல்சட்டி விளக்கு கூட ஏற்றுவது நன்மையைத் தரும். கல் விளக்கும் நன்மையை தரும். மேலும் நீங்கள் எந்த விளக்கு பயன்படுத்துகிறீர்களோ அதை குறைந்தது வாரத்திற்கு ஒரு முறையாவது சுத்தம் செய்வது உத்தமம்.

கேள்வி: நாங்கள் இருப்பது ஒரு சிறிய அறை கொண்ட வீடுதான், அதில் எப்படி விளக்கு ஏற்றுவது?

பதில்: இன்றைய சூழ்நிலையில் இதே போன்ற அமைப்புடன் தான் பல வீடுகள் உள்ளன. எனினும் விளக்கு ஏற்றுவது உடலுக்கும் மனதுக்கும் நல்லது ஏற்படுத்தும். எனவே அறை சிறியதாக இருந்தாலும் விளக்கு கட்டாயம் ஏற்ற வேண்டும்.

கேள்வி: எங்கள் வீட்டினில் எனக்கு என் அம்மா கொடுத்த விளக்கு உடைந்து விட்டது. அதை மறுபடியும் பயன்படுத்தலாமா?

பதில்: கூடவே கூடாது. எனினும் சிறிய குறையாக இருந்து சரி செய்யக்கூடிய குறையாக இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம். பொதுவில் பின்னம் ஏற்பட்ட விளக்கினை பெரியவர்கள் பயன்படுத்தியதில்லை.


.முற்றும்.
------------------------------------------------

இனி வரும் நாட்களில் வரப்போகும் கேள்விகள்:

[1] ஸ்ரார்த்த விதிமுறைகளை கூறவும் - திரு.பஞ்சாபகேசன், சென்னை
[2] ஒரே வீட்டில் இரண்டு சிவலிங்கங்கள், இரண்டு சாளக்கிராமங்களை வைத்து வழிபடலாமா? - திரு.மூர்த்தி, நெல்லை.
[3] அதிர்ஷ்டக்கல் அணிந்தால் பலன் தருமா? - செல்வி.ஹேமா, சென்னை
[4] எனக்கு ஜோதிடப்படி எந்த திசையில் வீட்டின் வாசல் இருக்க வேண்டும்? - திரு.மகேந்திரன், படப்பை
[5] எனது பெயரை எண் கணிதப்படி மாற்றியமைக்கலாமா? - திரு.ஜான், திருச்சி.
------------------------------------

1 comment:

Anonymous said...

தங்களது பதில்கள் மிகச் சிரத்தையுடன் எழுதப்படுகின்றன!! விளக்கு ஏற்றுவது குறித்து ஒரு புத்தகத்தில் ஜோதிட சம்பந்தமான படித்தது: நமது பூர்வ ஜன்ம கர்மாக்களை அறிந்து பரிகாரம் செய்வது கஷ்டம். எனவே நாம் எந்த தேவதைக்கு பரிகாரம் செய்ய வேண்டும் என்று தெரியாமலேயே, கோவில்களில் நாம் ஏற்றும் தீபம் நமது கோரிக்கையை அந்த சரியான தேவதையிடம் கொண்டு சேர்க்கும் என்று கூறப்பட்டு இருந்தது.. இந்த கமெண்ட் ஒரு தகவலுக்காக மட்டுமே!!