Monday, September 8, 2014

இன்றைய கோட்சார பொது பலன் - 08-09-2014

தின பலன்: 08-09-2014
திங்கட்கிழமை


 
நன்றி: தினமணி
கணிப்பு: பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

மேஷம்
கிரக நிலை:
சுகஸ்தானத்தில் குரு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ரண ருண ரோகஸ்தானத்தில் புதன், ராகு - ஸப்தம களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் செவ்வாய் - லாபஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வலம் வருகின்றன.


பலன்:
இன்று தொழில் வியாபாரத்திற்கு தேவையான பண உதவி கிடைக்கும். எதிர்பார்த்த லாபம் வரும். தொழில் போட்டிகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வாக்குவன்மையால் காரிய வெற்றி பெறுவார்கள். குடும்பத்தில்  வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  திடீர் கருத்து  வேற்றுமை ஏற்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9










ரிஷபம்
கிரக நிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் குரு - சுகஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் புதன், ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் - லாபஸ்தானத்தில் கேது என கிரகங்கள் வீற்றிருக்கிறார்கள்.




பலன்:
இன்று நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். பணவரத்து அதிகரிக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்ற முயல்வீர்கள். உத்தியோகத்தில் இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். நீண்ட நாட்களாக  முடிக்க முடியாமல் இருந்த ஒரு காரியத்தை செய்து முடிப்பீர்கள். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய வேலைகள் திருப்திகரமாக நடந்து முடியும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 7








மிதுனம்
கிரக நிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சுகஸ்தானத்தில் புதன், ராகு - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி (வ) - ரணருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் -  பாக்கியஸ்தானத்தில் சந்திரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் கேது என கிரகங்கள் அமர்ந்து அருள்கிறார்கள்.




பலன்:
இன்று தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். வியாபாரத்தில் இருந்த பணபிரச்சனை குறையும். தொழில் விரிவாக்கம் பற்றிய சிந்தனை அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களுக்கு வேலை பார்க்கும் இடத்தில் இருந்த பிரச்சனை குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். சுபகாரிய நிகழ்ச்சிகள் நடைபெறும். திருமண காரியங்கள்  கைகூடும்.  கணவன் மனைவிக்கிடையே மகிழ்ச்சி நிலவும்.
அதிர்ஷ்ட நிறம்: ஆரஞ்சு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3, 9









கடகம்
கிரக நிலை:
ராசியில் குரு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் புதன், ராகு - சுகஸ்தானத்தில் சனி(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய் - ஆயுள்ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கியஸ்தானத்தில் கேது என நவக்கிரகங்களின் இருப்பு இருக்கிறது.



பலன்:
இன்று தடைபட்டு வந்த காரியங்கள் தடை நீங்கி சாதகமாக நடந்து முடியும்.  முக்கிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். அதனால் நன்மை உண்டாகும். ராசியாதிபதி சந்திரன் தனஸ்தானத்தைப் பார்க்கும் பார்வை பணம் சம்பாதிக்கும் திறமையை  அதிகப்படுத்தும்.  ராசியில் சஞ்சரிக்கும் குருவால் உடல் நலம் சீரடையும். மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 2, 7







சிம்மம்
கிரக நிலை:
ராசியில் ஆட்சியாக ராசிநாதன் சூர்யன், சுக்கிரன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், ராகு - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி(வ) - சுகஸ்தானத்தில் செவ்வாய் - சப்தம களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - ஆயுள் ஸ்தானத்தில் கேது - அயன சயன ராசியில் குரு -  என நவக்கிரகங்கள் அதிகாரம் செலுத்துகிறார்கள்.


பலன்:
இன்று அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் சாதகமாக நடக்கும். ஆர்டர்கள்  பெறுவதில் இருந்த சிக்கல்கள்  தீரும்.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் குறையும்.  மற்றவர்கள் மூலம்  உதவி கிடைக்கும். ராசிநாதன் சூரியனின் சஞ்சாரத்தால் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை  வாங்கி மகிழ்வீர்கள்.  கணவன், மனைவிக்கிடையில் இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, வெளிர் சிவப்பு
அதிர்ஷ்ட எண்கள்: 1, 3








கன்னி
கிரக நிலை:
ராசியில் புதன், ராகு - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோகஸ்தானத்தில் சந்திரன் - ஸப்தம களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் குரு - விரைய ராசியில் ஆட்சியாக சூர்யன், சுக்கிரன் என கிரகங்களின் இருப்பு இருக்கிறது.




பலன்:
இன்று குடும்பத்தில் சந்தோஷம் அதிகரிக்கும்.   பிள்ளைகளால் கவுரவம் அந்தஸ்து உயரும். துக்கமும், துன்பமும் நீங்கும். தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடந்து  முடியும்.  குழந்தைகளின் எதிர்கால கல்வி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். தேவையற்ற மருத்துவ செலவு ஏற்படக்கூடும். வீடு, பூமி மூலம் வரவேண்டிய வருமானம் தாமதப்படலாம்.
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6












துலாம்
கிரக நிலை:
ராசியில் சனி(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சந்திரன் - ரணருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் குரு - லாபஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - அயன சயன போக விரைய ராசியில் புதன், ராகு என கிரகங்களின் வலம் வருகிறார்கள்.



பலன்:
இன்று வாழ்க்கை துணையுடன் விவாதம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் அவசர முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலையும் காரிய தாமதத்தையும் சந்திக்க வேண்டி இருக்கும்.  தொழில் வியாபார போட்டிகள் குறையும். பணவரத்து இருக்கும். புதிய நபர்களின் அறிமுகம் உண்டாகும். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். உறவினர்கள் வருகை இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 9







விருச்சிகம்
கிரக நிலை:
ராசியில் செவ்வாய் - சுகஸ்தானத்தில் சந்திரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் கேது - பாக்யஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - லாபஸ்தானத்தில் புதன், ராகு - விரையஸ்தான ராசியில் சனி(வ)  என கிரகங்களின் இருப்பு இருக்கிறது.


பலன்:
இன்று குடும்ப செலவு அதிகரிக்கும். வெளியூர் பயணங்களின்போது கவனம் தேவை. அடுத்தவர்களுக்காக பொறுப்புகளை ஏற்கும்போது ஒரு முறைக்கு பலமுறை யோசித்து முடிவு எடுப்பது நல்லது. பணவரத்து திருப்தி தரும். வெளியூர் பயணங்கள் செல்ல நேரிடலாம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. புதிய நபர்களிடம் எச்சரிக்கை தேவை. வீண் அலைச்சலை குறைத்துக்கொண்டு வேலைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெரியோர்களின் உதவியும் கிடைக்கும். மனதில் தைரியம் தன்னம்பிக்கை உண்டாகும். துணிச்சலுடன் எந்த காரியத்திலும் ஈடுபட்டு சாதகமாக செய்து முடிப்பீர்கள்.
அதிர்ஷ்ட நிறம்: வெளிர் மஞ்சள், நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9







தனுசு
கிரக நிலை:
தைரிய வீர்ய ஸ்தானத்தில் சந்திரன் - சுகஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் குரு - பாக்யஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் புதன், ராகு - லாபஸ்தான ராசியில் சனி(வ) - விரைய ஸ்தானத்தில் செவ்வாய் என கிரகங்களின் அமர்வு இருக்கிறார்கள்.


பலன்:
இன்று புண்ணிய தலங்களுக்கு யாத்திரை செல்ல வேண்டி வரலாம்.  பணவரத்து திருப்திகரமாக  இருக்கும். பலவகையிலும் பிறர் உதவி கிடைக்க பெறுவீர்கள். புத்திசாதூர்யம்  அதிகரிக்கும்.  யாருக்கும் வாக்குறுதிகள் கொடுப்பதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். புதிய ஆர்டர்கள் பெறவும், வாடிக்கையாளர்களை திருப்தி செய்யவும் அலைய வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள்  மற்றவர்களுக்காக பொறுப்புகள் ஏற்கும் போது மிகவும் கவனமாக  இருப்பது வீண்பழி  ஏற்படாமல் தடுக்கப்படும்.  
அதிர்ஷ்ட நிறம்: நீலம், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 2, 5, 9







மகரம்
கிரக நிலை:
தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் கேது - ஸப்தம களத்திர ஸ்தானத்தில் குரு - ஆயுள் ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - பாக்யஸ்தானத்தில் புதன், ராகு - தொழில் கர்ம ஜீவன ஸ்தான ராசியில் சனி(வ) - லாபஸ்தானத்தில் செவ்வாய் என நவக்கிரகங்கள் வலம் வருகிறார்கள்.



பலன்:
இன்று உங்கள் புத்தி சாதுரியத்தால்  புகழையும், செல்வத்தையும் பெறுவீர்கள். எண்ணிய காரியங்களை  திறமையாக செய்து முடிப்பீர்கள். பணவரவும் இருக்கும். எதிர்பார்த்த  இடமாற்றம் கிடைக்கும். பயணம் செல்ல வேண்டி இருக்கும்.  சில முக்கியமான  முயற்சிகள் அதிக உழைப்பின் பேரில் செய்ய வேண்டி இருக்கும். சொத்துக்கள் மீது கவனம் தேவை.
அதிர்ஷ்ட நிறம்: பழுப்பு, நீலம்
அதிர்ஷ்ட எண்கள்: 5, 6









கும்பம்
கிரக நிலை:
ராசியில் சந்திரன் - தனஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - சப்தம களத்திர ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - பாக்கிய ஸ்தான ராசியில் சனி(வ) - தொழில் கர்ம ஸ்தானத்தில் செவ்வாய் என விண்மீன்கள் வலம் வருகிறார்கள்.



பலன்:
இன்று தொழில், வியாபாரம் செய்பவர்கள் தங்களது திறமையை வெளிபடுத்தி வியாபாரம் செய்ய வேண்டி இருக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஆர்டர் வந்து சேரும். பழைய பாக்கிகள் வசூல் தாமதமாக இருந்தாலும் பணம்  வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் கிடைக்க லாம்.  வேலை தொடர்பாக வெளியூரில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் நடக்க வேண்டிய காரியங்கள் தாமதப்படும்.
அதிர்ஷ்ட நிறம்: அடர்நீலம், வெள்ளை
அதிர்ஷ்ட எண்கள்: 6, 9





மீனம்
கிரக நிலை:
ராசியில் கேது - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் குரு - ரணருண ரோக ஸ்தானத்தில் சூர்யன், சுக்கிரன் - சப்தம ஆயுள் ஸ்தானத்தில் புதன், ராகு - ஆயுள் ஸ்தான ராசியில் சனி(வ) - பாக்யஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போகஸ்தானத்தில் சந்திரன் என விண்மீன்கள் வலம் வருகிறார்கள்.


பலன்:
இன்று ராசிக்கு 6ல்  சுக்கிரன் இருப்பதால் வாழ்க்கை துணைக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். கணவன், மனைவிக்கிடையில் அன்பு அதிகரிக்கும். அக்கம், பக்கத்தினரிடம் கவனமாக பேசுவதும் வாக்கு வாதத்தை தவிர்ப்பதும் நல்லது. வெளியூர் பயணம் செல்ல நேரிடும். மாணவர்கள் கல்வி தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: மஞ்சள், வெளிர் பச்சை
அதிர்ஷ்ட எண்கள்: 3, 9

No comments: