Saturday, June 28, 2014

இறைவன் அருளால்...

எமது ஆதிகுரு பெருங்குளம் ஸ்ரீகுப்பு ஜோஸ்யரின் ஆசீர்வாதத்தாலும், எமது குரு பெருங்குளம் ஸ்ரீவெங்கடாஜல ஜோஸ்யரின் கிருபையாலும், இன்று மாலை 3 முதல் 7 மணி நெமிலிச்சேரி ஸ்ரீவேம்புலியம்மன் கோவிலில் ஜாதகம் மற்றும் பிரஸ்னம் சேவை செய்ய வருகிறோம்.
ரூட்மேப் இணைத்திருக்கிறேன்.
கோவில் இருக்கும் இடம்:
[1] பல்லாவரம் - துரைப்பாக்கம் பைபாஸ் - போலீஸ் செக்போஸ்ட் - வேல்ஸ் யுனிவர்சிடி - எதிரில் ஒரு பள்ளம் இறங்கும் - அங்கு வந்து நெமிலிச்சேரி வேம்புலியம்மன் கோவில் என்று கேட்டால் வழி சொல்வார்கள்.

[2] குரோம்பேட்டை ரயில் நிலையத்தில் இறங்கி ராதாநகர் செல்லும் வழியில் ஆட்டோ பிடித்து நெமிலிச்சேரி வேம்புலியம்மன் கோவில் என்று சொன்னால் இறக்கி விடுவார்கள்.
நன்றி:
நேரில் வருபவர்கள் வழி தெரிய சிரமப்பட்டால் போன் செய்யவும்: 7845119542
பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்.


Sunday, June 15, 2014

ராகு கேது பெயர்ச்சி 2014 - ஹோமம் - இலவசம்

ராகு கேது பெயர்ச்சி 2014 - ஹோமம்:


நிகழும் மங்களகரமான 1189ம் ஆண்டு ஜய வருடம் உத்தராயணம், க்ரீஷ்ம ரிது ஆனி மாதம் 7ம் நாள் (21-06-2014) கிருஷ்ண பக்ஷ நவமியும் ரேவதி நக்ஷத்ரமும் அதிகண்ட யோகமும் பத்ரை கரணமும் சித்தயோகமும் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி காலை சுமார் 11.12 மணி    [நாழிகை 13.12] அளவில் கன்னி ராசிக்கு ராகுவும், மீன ராசிக்கு கேதுவும் பெயர்ச்சி ஆகின்றனர். இந்த ராசிகளில் சுமார் ஒன்றரை வருடம் தங்கிப் பலன் புரிவார்கள்.


உத்தம பலன் பெறும் ராசிகள்: மேஷம், மிதுனம், துலாம், தனுசு

மத்யம பலம் பெறும் ராசிகள்: ரிஷபம், கடகம், சிம்மம், கும்பம்

அதம பலம் பெறும் ராசிகள்: கன்னி, விருச்சிகம், மகரம், மீனம்



இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம்.

மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் ராகு - கேது திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் அஸ்வதி, மகம், மூலம், திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம், கார்த்திகை, விசாகம் நக்ஷத்திரத்தில் பிறந்தவர்கள் ஆகிய நபர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் கால சர்ப்ப தோஷம், நாக தோஷம், களத்திர தோஷம், பிதுர் தோஷம் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க கலந்து கொள்ளுங்கள்.    இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 21-06-2014 அன்று குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது. 

அன்று மஹாகணபதி ஹோமம், நவக்ரஹ ஹோமம், ராகு கேதுப் பெயர்ச்சி சிறப்பு ஹோமம் மற்றும் பரிகார பூஜையும் நடைபெறுகிறது.

இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்கு மட்டும் இலவசம். ஹோமத்தன்று சரியாக காலை 7 மணி முதல் ஸங்கல்பம் ஆரம்பிக்கப்படும்.ஒவ்வொருவரையும் தனித்தனியாக உட்கார வைத்து ஸங்கல்பம் செய்யப்படும்.

பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். இதில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கூரியர் கட்டணத்தை மட்டும் அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்: 

தினமணி, தினகரன் மற்றும் ஞான ஆலயம் புகழ் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.


பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்

பிரசாத செட்:
[1] தாங்கள் தினமும் அணிந்து கொள்ளத்தக்க ஸ்ரீசக்கரம் டாலர்
[2] ஹோம ரக்ஷை
[3] ஹோம பிரசாத கயிறு
[4] ஹோமத்தில் இடப்பட்ட நாணயம் ஒன்று
[5] அக்ஷதை
[6] குங்குமம்



அனைத்து விபரங்களையும் அனுப்பி வைக்க வேண்டிய Email: ramjothidar@gmail.com

குறிப்பு:
[1] முகவரி மற்றும் Cell Number இல்லாத மின்னஞ்சல் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
[2] பிரசாதம் தபால் மூலமாக அனுப்பப்படும்.
[3] பிரசாதம் ஜூலை 3ம் தேதிக்கு்ள் அனுப்பி வைக்கப்படும்.
[4] தொடர்புக்கு: 7845119542


***************************************************************************************

Sunday, April 20, 2014

இன்று எமது பிறந்தநாள்.

இன்று எமது பிறந்தநாள்.

எமது குலதெய்வம் ஸ்ரீசொரிமுத்தையனார், ஸ்ரீமாயக்கூத்தர், ஸ்ரீபத்திரகாளியம்மன், திருச்செந்தூர் முருகன், ஏழுமலையாண்டவர், என்னப்பன் அருணாசலேஸ்வரர் ஆகியோருக்கு வணக்கம்.

எமது ஆதிகுரு பெருங்குளம் ஸ்ரீகுப்பு ஜோஸ்யர், எமது வளர்ப்பு பெற்றோர் பெருங்குளம் ஸ்ரீவேங்கடாசல கண்ணாமணி ஜோஸ்யர் - கற்பககோமதி, எமது பெற்றோர் மற்றும் எமது குருமார்கள் எமது சித்தப்பா அம்மன் அருள் பெருங்குளம் ஸ்ரீகுருநாத ஜோஸ்யர், கருங்குளம் பிரம்மஸ்ரீ அனந்தாச்சாரியார், பாலக்காடு மகாதேவ அய்யர் ஆகியோருக்கு அநேக நமஸ்காரங்கள்.

Sunday, March 30, 2014

ஜய வருடம் யாருக்கு எப்படி? - பாகம் ஒன்று

ஜய வருடம் யாருக்கு எப்படி?

ஜய என்றால் வடமொழியில் வெற்றி என்று பொருள். வெற்றிகளை அள்ளித் தரும் ஜய வருடம் தமிழ் வருடமான 60 வருடங்களில் 28-வது ஆண்டாக வருவது ஆகும். கலி பிறந்து 5115-வது வருடமாகும். சாலிவாகன ஆண்டு 1935-36-வது ஆண்டாகும்.  ஆங்கில வருடம் 2014-2015. பசலி 1423-1424 ஆகவும், கேரளாவில் அனுஷ்டிக்கப்படும் கொல்லம் ஆண்டு 1189-1190 ஆகவும் முகமதியர் ஆண்டான ஹிஜிரி ஆண்டு 1434-35 ஆகவும் வருகிறது. இதேபோன்று விக்ரம காப்தம் (வட இந்தியாவில் கணக்கிடப்படுவது) 2071-72  ஆகவும் வள்ளுவர் ஆண்டு 2045-2046 ஆகவும் வருகிறது.



நிகழும் மங்களகரமான 1189ம் ஆண்டு ஜய வருஷம் உத்தராயணம் சித்திரை மாதம் 1ம் தேதி 14.04.2014 திங்கட்கிழமையும் சுக்லபக்ஷம் சதுர்தசியும் ஹஸ்தம் நக்ஷத்ரமும் வியாகாத நாமயோகமும் வணஜீ நாமகரணமும் சித்தயோகமும் கூடிய சுபதினத்தில் உதயாதி காலை மணி 6.05க்கு  இராஜஸ மேஷ லக்னத்தில் கன்னியா ராசியில் சந்திரன் ஹோரையில் ஸ்ரீஜய வருஷம் பிறக்கிறது.



நவநாயகர்:
ஜய வருடத்திற்கு ராஜா- சந்திரன், மந்திரி- சந்திரன், சேனாதிபதி - சூரியன், அர்க்காதிபதி- சூரியன், ஸஸ்யாதிபதி-குரு, தான்யாதிபதி- செவ்வாய், ரஸாதிபதி-சனி, நீரஸாதிபதி-புதன், மேகாதிபதி- சூரியன் இந்த ஆண்டு தேவதை- சாத்தான், பசுநாயகர்-கோபாலன்.


கலிவெண்பா
ஜய வருடதன்னிலே செய் புவனங்கள் எல்லாம்
வியனுரவே பைங்கூழ் விளையும் - நயமுடனே
அக்கம் பெரிதா மளவில் சுகம் பெருகும்
வெக்குவார் மன்னரிறை மேல்.

என்பது இடைக்காடர் எழுதிய ஜய வருஷத்திய பலன் வெண்பா. இதன் பலன் உலகத்தில் எல்லா இடங்களிலும் சூறாவளி காற்றுடன் மற்றும் இடி மின்னலுடன் நல்ல மழையும், கடலில் குறைந்த அளவு மழையும் பொழியும். நஞ்சை புஞ்சைகளில் தானியங்கள் நன்கு விளைந்து அறுவடை சிறக்கும். கோச்சார ரீதியாக ஜெகத் உலக ஜாதகத்தில் ஏழரை சனி நடப்பதால் உலகில் பல இடங்களில் பிரளயம் ஏற்படும். நாடுகளுக்குள்  போர் அபாயம் ஏற்படும்.

ஆதாயம், விரயம்

இந்த  ஆண்டின் ஆதாயம் விரயம் எவ்வளவு என்று பார்த்தால் மேஷ விருச்சிக ராசியினருக்கு 05 ஆதாயம், 11 விரயமாகும்.  ரிஷபம், துலா ராசியினருக்கு 14 ஆதாயம் 02 விரயமாகும். மிதுனம், கன்னிராசியினருக்கு 02 ஆதாயம் 02 விரயமாகும். கடகராசியினருக்கு 02 ஆதாயம் 08 விரயமாகவும் தனுசு, மீன ராசியினருக்கு 08 ஆதாயம் 02 விரயமாகவும், மகரம், கும்ப ராசியினருக்கு 11 ஆதாயம் 04 விரயமாகவும் உள்ளது.

ஆதாயம் என்பது வரவு விரயம் என்பது செலவு என்று பொருள். மொத்தத்தில் 56 ஆதாயமும் 37 விரயமாகவும் வருவதால் நாட்டில் சேமிப்பு அதிகரிக்கும் என்று கூறலாம்.

நக்ஷத்ர கந்தாய பலன்கள்:
கந்தாய பலன்களின் அடிப்படையில் அஸ்வினி, ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், ஆயில்யம், மகம், உத்திரம், ஸ்வாதி, விசாகம், மூலம், திருவோணம், சதயம், பூரட்டாதி, ரேவதிக்கு வருடம் முழுவதும் உத்தம பலன்களாகும். பரணி, பூரம், சித்திரை, அனுசம், பூராடம், உத்திரட்டாதிக்கு இரண்டாம் நான்கு மாதங்கள் (ஆவணி – கார்த்திகை வரை) மத்திம பலன்கள் ஆகும். ஏனைய மாதங்கள் உத்தம பலன்கள் ஆகும். உத்திராடத்திற்கு சித்திரை முதல் ஆடி வரை மத்திம பலன் ஏற்பட்டு பின் உத்தமமாகும். மிருகசீரிஷம், பூசம், ஹஸ்தம், அவிட்டம் ஆகிய நட்சத்திரங்களுக்கு வருடம் முழுவது சற்றேறக்குறைய மத்திம பலன்களே கிட்டும். இருப்பினும் அவிட்டம் முதல் நான்கு மாதங்கள் நன்றாக இருக்கும். ஹஸ்தம் இரண்டாம் நான்கு மாதங்கள் நன்று என அறியவும்.




இந்த ஆண்டில் வரும் பெயர்ச்சிகள்:

குரு ஜய ஆண்டு வைகாசி மாதம் 30ம் தேதி (13-06-2014) வெள்ளிக்கிழமை மாலை மணி 06:03க்கு புனர்பூசம் நட்சத்திரம் 4ம் பாதம் கடக ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பின் கார்த்திகை மாதம் 17ம் தேதி (03-12-2014) புதன் கிழமை மாலை 05:10க்கு மகம் நட்சத்திரம் 1ம் பாதம் சிம்ம இராசிக்கு அதிசார பலம் பெற்று பெயர்ச்சி அடைகிறார். பின் மார்கழி மாதம் 07ம் தேதி (22-12-2014) திங்கள் கிழமை பகல் 12:19க்கு ஆயில்யம் 4ம் பாதம் கடக ராசிக்கு வக்ரம் அடைந்து பெயர்ச்சி அடைகிறார்.

சனி ஜய ஆண்டு மார்கழி மாதம் 01ம் தேதி (16-12-2014) செவ்வாய்கிழமை பகல் 02:17க்கு விசாகம் நட்சத்திரம் 4ம் பாதம் விருச்சிக இராசிக்கு பெயர்ச்சி அடைகிறார்.

ராகு ஆனி மாதம் 07ம் தேதி (21-06-2014) சனிக்கிழமை பகல் 11:18க்கு சித்திரை நட்சத்திரம் 2ம் பாதம் கன்னி இராசிக்கும், கேது பகவான் அதே நாள் அதே நேரத்தில் ரேவதி நட்சத்திரம் 4ம் பாதம் மீனம் ராசிக்கும் பெயர்ச்சி அடைகிறார்கள்.

Monday, February 24, 2014

முன்னோடி

இலவசமாக நல்ல விஷயம் ஒன்று மக்களுக்கு வழங்குவதற்காக ஒரு புகழ் பெற்ற நிறுவனத்தில் இருக்கும் ஒருவருக்கு போன் செய்தோம், கொஞ்சமும் கவலைப்படாமல் எம்மை உதாசீனப்படுத்தியதோடு மட்டுமல்லாமல் கேவலப்படுத்தினார். கேவலமும், அவமானமும் எம்மை ஒன்றும் செய்து விடப் போவதில்லை.

இன்னும் வளருவதற்கு அது எம்மை பக்குவப்படுத்தும். அவ்வளவே.

ஆனால் ஒன்று அந்த நிறுவனத்தில் இருந்து அந்த நபர் வெளியே வந்து விட்டால் அவர் கதி அதோ கதிதான். பெரிய நிறுவனங்களுக்கு கெட்ட பெயர் வாங்கிக் கொடுப்பதற்கே சிலர் வேலை செய்வார்கள். அதில் இவர் முன்னோடி.

Tuesday, February 4, 2014

வேலூர் கும்பாபிஷேகம்


அடுத்த வேலைப் பளு நிகழ்ச்சி நிரல் ஆரம்பம். நேற்று ஒரு நாள் மட்டும் ஓய்வு. இன்றும் நாளையும் தூத்துக்குடி, வியாழன்று காட்பாடி. வெள்ளி மீண்டும் தூத்துக்குடி. அடியேனுடைய சகோதரன் சிரஞ்.நாகராஜன் விவாஹம், திங்களன்று. பின் 12ம் தேதிதான் சென்னை திரும்புதல்.

Saturday, February 1, 2014

காட்பாடி வட்டம் - SN புதூர் கிராமம் - ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைபவத்தை முன்னிட்டு

காட்பாடி வட்டம் - SN புதூர் கிராமம் - ஸ்ரீஆதிபராசக்தி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் வைபவத்தை முன்னிட்டு - 06-02-2014 - வியாழக்கிழமை - ஜோதிட ஆன்மீகக் கேள்வி பதில் - பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

Friday, January 24, 2014

வேண்டுகோள்

அன்பின் சொந்தங்களே,

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் பணிவான வணக்கங்கள்.


இப்பவும், நமது சகோதரன் திரு.சேஷாத்ரி @ நாகராஜன் திருமணம் விடயமாக நிறைய அலைய வேண்டிய சூழ்நிலை, மேலும் இத்திருமணம் கடந்த 10 நாட்களுக்கு முன்னர்தான் முடிவே ஆனது,  ஆதலால் மிகக் கடுமையாக பணிகள் துரித கதியில் நடந்து கொண்டிருக்கிறது.

தந்தையாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நாம்தான் அந்த பொறுப்புகளை எடுத்து நடத்த வேண்டிய சூழ்நிலை. தை மாதம் உத்தராயணத்தின் நெற்றி, இந்த மாதத்தில் பிரசன்னம் பார்க்க வேண்டிய எல்லா வேலைகளையும் ஒத்திப் போட்டுள்ளோம்.




உறவுகளே அடுத்த வாரம் 27-01-2014 முதல் 01-02-2014 வரை கொஞ்சம் பணிகளின்றி இருப்போம், அப்போது உங்களுடைய அனைத்து வேலைகளையும் முடித்து வைக்கிறோம்.

எமது அலைபேசி: 7845119542.

Saturday, January 18, 2014

2014 – வருட ஆன்மீகக் குறிப்புகள்

2014 – வருட ஆன்மீகக் குறிப்புகள் – பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்

http://bit.ly/1mkc9eo