Saturday, July 16, 2011

ராசிபலன்கள் - விளக்கம்

அனைவருக்கும் வணக்கம்.

கடந்த சில வாரங்களாக ராசிபலன்கள் நான் அனுப்பி கொண்டிருக்கிறேன் எனபதை அறிவீர்கள். அதில் சிலருக்கு சந்தேகங்கள் ஏற்பட்டு உள்ளது. அதை கேள்வி பதில் வடிவத்தில் கொடுக்கிறேன்.

கேள்வி: தாங்கள் எழுதும் ராசிபலன்களை சந்திர ராசிக்கு பார்க்க வேண்டுமா?

பதில்: சந்திரன் இருக்கும் ராசிக்கோ அல்லது லக்னத்திற்கோ பார்க்க வேண்டும்.


கேள்வி: தாங்கள் எழுதும் பலன்களை எல்லோருக்கும் பொதுவானதா?

பதில்: ஆம். ஆனால் நான் கொடுத்திருக்கும் பலன்கள் கோட்சார பலன்களே(அதாவது தற்கால கிரஹநிலைப்படி உள்ளவை). இவை ஜாதகத்திற்கு ஜாதகம் மாறுபடலாம்.


கேள்வி: நியுமராலஜி படி எனக்கு பலன்கள் பார்க்க முடியுமா?

பதில்: மன்னிக்கவும். எனக்கு நியுமராலஜி பற்றி தெரியாது.


கேள்வி: என்னுடைய லக்னம் மீனம். ராசி கடகம். நான் எதற்கு பலன் பார்க்க வேண்டும்?

பதில்: நீங்கள் மீனத்திற்குத்தான் பலன்கள் பார்க்க வேண்டும். என் வரையில் நான் சொல்வது பொதுவாக ராசிக்கு பலன்கள் பார்ப்பதை விட லக்னத்திற்கு பலன்கள் பார்ப்பது சிறந்தது.



நன்றி.

3 comments:

சித்தூர்.எஸ்.முருகேசன் said...

நியூமராலாஜி ஒரு பொக்கிஷம் மாதிரி. நீங்க நம்ம ரேஞ்சுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு ஜோதிடத்த பத்தி தெரிஞ்சி வைத்திருக்கீங்க. எனி வே, தேங்க்ஸ்.

sury siva said...

சந்திரன் இருக்கும் ராசியை விட்டு விட்டு, ஒருவரது பிறந்த நேரத்தைப் பிரதிபலிக்கும் லக்னத்தைக்
கொண்டு கோசரத்தில் கிரகங்கள் இருக்கும் நிலையை ஆராய வேண்டும் என நீங்கள் சொல்லியிருப்பது
எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.

கோசரம் என்றாலே, சேர்ந்து செல்லுதல் என்று தான் பொருள். ஒருவன் பிறந்த நட்சத்திரம் எந்த ராசியோ
அந்த ராசியை அடிப்படையாகக்கொண்டு மற்ற க்ரஹங்களின் சுழற்சி, அமைப்பு, அதன் பாதிப்புகளைப்பற்றி
பேசுவது தான் கோசரம்.

பிறந்த நேரத்தை அடிப்படையாகக்கொண்ட, லக்னத்திலிருந்து பார்க்கவேண்டும் என் நீங்கள் சொல்வது
எந்த ஸ்டான்டர்டு புத்தகத்தில், அதாவது, பிருஹத் ஜாதகம், காலப் பிரகாசிகா போன்றவை, உள்ளது !!
அல்லது அது உங்கள் ஆராய்ச்சியா !!

சுப்பு தாத்தா.

Perungulam Ramakrishnan Josiyar said...

/*
சித்தூர் எஸ்.முருகேசன் said...
நியூமராலாஜி ஒரு பொக்கிஷம் மாதிரி. நீங்க நம்ம ரேஞ்சுக்கு இல்லன்னாலும் ஓரளவுக்கு ஜோதிடத்த பத்தி தெரிஞ்சி வைத்திருக்கீங்க. எனி வே, தேங்க்ஸ்.
*/

ஐயா உங்க ரேஞ்ச் என்னன்னு அடியேன் தெரிஞ்சுக்கலாமா?

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.