Monday, October 7, 2013

இந்த வாரம் இப்படித்தான் - 27 நக்ஷத்ரகாரர்களுக்கும் பலன்கள்

அசுபதி:
இந்த வாரம் வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் செவ்வாய் மூலம் எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள்  விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். வார இறுதியில் சூரியன் சஞ்சாரத்தால் பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சனைகள் சாதகமாக நடந்து முடியும்.



பரணி:
இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சனைகள் நீங்கி அமைதி ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மன கசப்பு மாறும்.  விருந்தினர்கள் வருகை இருக்கும். குடும்ப செலவுகள் குறையும். பிள்ளைகள் உங்களது ஆலோசனைகளை கேட்பார்கள்.  அவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுப்பீர்கள்.



கார்த்திகை:
இந்த வாரம் நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். உத்தியோகம் தொடர்பான கவலைகள் நீங்கும். சக ஊழியர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும். எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.


ரோகினி:
இந்த வாரம் பணவரத்து  கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக  இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும்.  எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள்.




மிருகசீரிஷம்:
தேவையான நிதியுதவி வார இறுதியில் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது. தேவையான சரக்குகளை வாங்குவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து  காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம்  அதிகரிக்கும்.



திருவாதிரை:
இந்த வாரம் வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். கணவன்மனைவிக்கிடையே நெருக்கம்  அதிகரிக்கும். இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். செயல் திறமை  அதிகரிக்கும்.
தொழிலில் திறமை அதிகரிக்கும். உபதொழிலில் ஆர்வம் உண்டாகும். சொந்த பந்தங்களின் ஆதரவு கிடைக்கும்.


புனர்பூசம்:
இந்த வாரம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான  நிலை காணப்படும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று  தாமதமாகலாம். மனதில் இருந்த கவலையை போக்கி நிம்மதி  தருவார். அரசு  மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கலாம்.



பூசம்:
இந்த வாரம் வெளியூர் பயணம் அதன் மூலம் அலைச்சல் உண்டாகலாம். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். தேவையான பண உதவி சற்று தாமதமாக  கிடைக்கலாம். தொழில் தொடர்பாக எதிர்பார்க்கும் உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். அவர்களை அனுசரித்து செல்வது நன்மையைத் தரும்.



ஆயில்யம்:
இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே அனுசரித்துச் செல்வதன் மூலம் குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான  செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை. உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது  நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. எளிதில் முடிய வேண்டிய காரியம் கூட தாமதமாகலாம்.




மகம்:
இந்த வாரம் உத்தியோகத்தில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை தொழில் சார்ந்த விஷயங்களில் முடிவு எடுப்பதற்கு முன் யோசிப்பது நல்லது. மனதில் தைரியம் உண்டாகும். எதையும்  எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும். எதிலும் முன்னேற்றம் காணப்படும். உங்கள் இஷ்டத்திற்கு விரோதமாக  காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும் வீண் ஆசைகள் மனதில் தோன்றும்.

பூரம்:
இந்த வாரம் கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது.  வார இறுதியில் எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். திட்டமிட்டு செய்வதன்மூலம் சாதகமான பலன்  கிடைக்கும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. எதிர்பாராத அலைச்சல் ஏற்படலாம்.


உத்திரம்:
இந்த வாரம் குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்படுத்தினாலும் அவை நீங்குவதுடன் உடல்  ஆரோக்கியமும் அடையும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. மனதில் பக்தி உண்டாகும்.  சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.  எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது.



ஹஸ்தம்:
இந்த வாரம் வீண் விவகாரங்களில் தலையிடாமல் ஒதுங்கிவிடுவதும் நன்மை தரும். காரியங்களில் வெற்றி பெற திட்டமிடுதலும் ஆலோசனை செய்வது நல்லது. தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல்  இருப்பதும் நல்லது. பெரியோரின் ஆலோசனைகளைக் கேட்க எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.

சித்திரை:
இந்த வாரம் வாழ்க்கையில் பலவகை சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும்  லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை,  தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.


ஸ்வாதி:
இந்த வாரம் சொந்தம், நட்பு வகையில் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. சிலநேரத்தில் விபரீதமான எண்ணம் தோன்றலாம் கவனம் தேவை. தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சனைகள் குறையும். எதிர்பார்த்த  பண உதவி கிடைக்கும். கூட்டு தொழில் செய்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது.



விசாகம்:
இந்த வாரம் உத்தியோகஸ்தர்கள் மிகவும் கவனமுடன் செயல்படுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல்  உண்டாகலாம். மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். நட்பு வட்டத்தில் நிதானமாக பழகுவது நல்லது.


அனுஷம்:
இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக இருப்பீர்கள். சக ஊழியர்களிடம் பழகும்போது கவனம்  தேவை. முன்னோர்களை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம்  உண்டாகும். புத்தி சாதூரியமும் அறிவு  திறனும் அதிகரிக்கும்.



கேட்டை:
இந்த வாரம் எதைச்  செய்வது எதை விடுவது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு தாமதப்படும். திடீர் சோர்வு  உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும்.



மூலம்:
இந்த வாரம் போட்டிகளை தவிர்க்க துணிச்சலான முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். உத்தியோகஸ்தர்கள் மேல் அதிகாரிகள்  கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. பணவரத்து திருப்தி தரும். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். எனவே வீண் வாக்குவாதங்களில் ஈடுபடாமல்  மிகவும் கவனமாக பேசுவதன் மூலம் நன்மை உண்டாகும்.


பூராடம்:
இந்த் வாரம் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம்  காட்டுவீர்கள். உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். எந்த ஒரு காரியத்தை செய்யும் முன்பும் அதை எப்படி செய்வது என்ற மன தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். அவசர  முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும்.


உத்திராடம்:
இந்த வாரம் எதிர்காலம் தொடர்பாக திட்டமிடுவீர்கள். சொத்து சம்பந்தமான முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு  தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது. எல்லா பிரச்சனைகளையும்  தீரும். எதிர்ப்புகள் அகலும். உங்களது நியாயமான திட்டங்களுக்கு மற்றவர்கள் ஆதரவு அளிப்பார்கள்.



திருவோணம்:
இந்த வாரம் அடுத்தவர்கள் தரும் மதிப்பை பெறுவீர்கள். ஆக்க பூர்வமான  யோசனைகளை செயல்படுத்தி  எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் ஆனால் உங்களுக்கு எதிராக சிலர்  செயல்படும் சூழ்நிலை இருப்பதால் கவனம் தேவை. நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.



அவிட்டம்:
இந்த வாரம் தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம்  காட்டுவீர்கள். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வதன்மூலம் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில்  இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். ஆனால் அலைச்சல் உண்டாகும்.



ஸதயம்:
இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்க மனம் விட்டுபேசுவது நன்மை தரும். உறவினர்கள் வருகை இருக்கும்.  அவர்களிடம் நிதானமாக பேசுவது நன்மை தரும். பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி  உண்டாகும்.


பூரட்டாதி:
இந்த வாரம் எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். வீண் அலைச்சல் உண்டாகும்.செயல்திறமை அதிகரிக்கும். உயர்கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.



உத்திரட்டாதி:
இந்த வாரம் நல்லது, கெட்டது அறிந்து சமயோசிதமாக செயல்படுவீர்கள் .வாக்கு  வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். எல்லா விதத்திலும் நன்மையை தரும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய  வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும்.



ரேவதி:
இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை  வசூல் செய்வதில் வேகம் காட்டுவீர்கள். தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு  எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம்.

Sunday, October 6, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை மூன்றாம் நாள் - தொடர் 4

நவராத்திரி வழிபாட்டு முறை - மூன்றாம் நாள்


அம்பாள்:    இந்திராணி (மாஹேந்திரி, சாம்ராஜ்யனி)


உருவ அமைப்பு:    கிரீடம் தரித்து வஜ்ராயுதம் ஏந்தியவள். ஆயிரம் கண்ணுடையவள். யானை வாகனம் கொண்டவள். விருத்திராசுரனை அழித்தவள்.


குணம்:   சௌம்யம்


சிறப்பு:    ஸ்ரீஇந்திரனின் சக்தி, தேவலோகத்தை பரிபாலனம் செய்பவள்


நெய்வேத்யம்:    வெண்பொங்கல், வெண் பாயாசம்


பூஜை செய்ய உகந்த நேரம்:    காலை 9 – 10.30, மாலை 6 – 7.30


மலர்:    மல்லிகை


கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்:    9 அல்லது 11


பாட வேண்டிய ராகம்:    ஆனந்த பைரவி


யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:


வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்:    புனர்பூசம், விசாகம், பூரட்டாதி


திசை புத்தி நடப்பவர்கள்:    சந்திரன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்


ஜாதக அமைப்பு உடையவர்கள்:    லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சந்திரன் அல்லது ராகு இருப்பவர்கள்


விசேஷம்:        உத்தியோகம், தொழிலில் மேன்மை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்


சொல்ல வேண்டிய பாடல்:

[1]    மனிதரும் தேவரும் மாயா முனிவரும் வந்து சென்னி
    குனிதரும் சேவடிக் கோமளமே! கொன்றைவார்சடைமேல்
    பனிதரும் திங்களும், பாம்பும், பகீரதியும் படைத்த
    புனிதரும் நீயும் என்புந்தி எந்நாளும் பொருந்துகவே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - இம் - வம் -இந்திராணியை - நம :


[3] காயத்ரி: ஓம் கஜத்வஜாயை வித்மஹே வஜ்ரஹஸ்தாயை தீமஹி தந்நோ இந்த்ராணி ப்ரசோதயாத்

Saturday, October 5, 2013

நவராத்திரி வழிபாட்டு முறை இரண்டாம் நாள் - தொடர் 3


நவராத்திரி வழிபாட்டு முறை
இரண்டாம் நாள்


அம்பாள்

வராஹி


உருவ அமைப்பு
பன்றி முகம், தெத்துப் பற்கள், சூலம் உலக்கை தாங்கியவள், பெரிய சக்கரத்தைக் கொண்டிருப்பவள், தனது தெத்துப் பற்களால் பூமியை தாங்கியிருப்பவள்
குணம்
குரூரம்
சிறப்பு
ஸ்ரீஅன்னையின் சேனாதிபதி
நெய்வேத்யம்
தயிர்சாதம், பாயாசம்
பூஜை செய்ய உகந்த நேரம்
காலை 9 – 10.30, மாலை 6 – 7.30
மலர்
முல்லை
கொடுக்க வேண்டிய தாம்பூலங்கள்
9
பாட வேண்டிய ராகம்
கல்யாணி
யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:
வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்
திருவாதிரை, ஸ்வாதி, ஸதயம்
திசை புத்தி நடப்பவர்கள்
சூரியன் திசை அல்லது புத்தி அல்லது அந்தரம்
ஜாதக அமைப்பு உடையவர்கள்
லக்னம், கேந்திரம், திரிகோணத்தில் சூரியன் அல்லது ராகு இருப்பவர்கள்
விசேஷம்
தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்பட இன்று விரதம் இருத்தல் நலம்
சொல்ல வேண்டிய பாடல்:
[1]    துணையும், தொழும் தெய்வமும், பெற்ற தாயும், சுருதிகளின்
   பணையும், கொழுந்தும், பதிகொண்ட வேரும் - பனி மலர்ப் பூங்
   கணையும், கருப்புச் சிலையும், மென் பாசாங்குசமும், கையில்
   அணையும், திரிபுர சுந்தரி - ஆவது அறிந்தனமே!
[2] மூல மந்திரம்:  ஓம் - க்லீம் - வராஹி - ஹூம்பட் - நம:
[3] காயத்ரி: ஓம் ச்யாமளாயை வித்மஹே ஹல ஹஸ்தாயை தீமஹி தன்னோ வாராஹி ப்ரசோதயாத்!

Friday, October 4, 2013

அறிவிப்பு:

அன்பின் சொந்தங்களே

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரின் ஆசீர்வாதங்கள்.

அன்னையின் பரமசைதன்யமான அருள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் கிடைப்பதாக.

ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி ஹோமத்திற்கு ஸங்கல்பம் கொடுத்த நபர்களுக்கு மட்டும் நவராத்திரியில் ஒன்பது நாட்களும் ஸ்ரீலலிதா திரிசதி சிறப்பு பூஜை செய்து பிரஸாதம் - ஸ்ரீசக்ர டாலர் அனுப்பப் போகிறோம்.

அதனுடன் ஸ்ரீவிநாயகர் சதுர்த்தி சிறப்பு பிரசாதமும் அனுப்பப்படும்.

இறையருள் என்றும் நம் துணை நிற்கும்.

இது முற்றிலும் இலவச சேவை.


நவராத்திரி தொடர் - Follow Up - கொலு வைக்க சிறந்த நேரம்

நவராத்திரிக்கு கொலு வைக்க சிறந்த நேரம்:

வெள்ளி - 04-10-2013
பகல்: மதியம் 1.30 - 3.00
மாலை:6.00 - 7.30

சனி - 05-10-2013:

மதியம் 1.30 - 3.00
மாலை 4.30 - 6.00
இரவு 7.30 - 9.00

கொலு வைக்க சிறந்த நேரம் என்றால் முதலில் ஸ்தாபிதம் செய்ய வேண்டிய நேரம் என்று பொருள். அதாவது ஆவாஹணம் செய்ய சிறந்த நேரம் என்று எடுத்துக் கொள்ள வேண்டியது.

சரஸ்வதி பூஜை ஆவாஹணம் செய்ய நல்ல நேரம்:

11.10.2013 வெள்ளிக்கிழமை காலை 9.00 - 10.30

நவராத்திரி தொடர் 2 - நவராத்திரி வழிபாட்டு முறை முதலாம் நாள்

நவராத்திரி வழிபாட்டு முறை

முதலாம் நாள்:-

அம்பாள்: சாமுண்டி

உருவ அமைப்பு:
தெத்துப்பல் வாய், முண்டன் என்ற அசுரனை வதம் செய்து மாலையாக கொண்டவள்

குணம்: குரூரம் (நீதியைக் காக்க)

சிறப்பு: சப்த கன்னியர்களில் ஏழாம் கன்னி

நெய்வேத்யம்: சர்க்கரைப் பொங்கல், எள்ளோதரை

பூஜை செய்ய சிறந்த நேரம்: காலை 10.30 - 12; மாலை: 6 - 7.30

பூஜைக்கு உகந்த மலர்: மல்லிகை

சுமங்கலிகளுக்கு கொடுக்க வேண்டிய தாம்பூலங்களின் எண்ணிக்கை: குறைந்தது 7

பாட வேண்டிய ராகம்: காம்போதி

யார் யாரெல்லாம் வணங்க  வேண்டும்:

வணங்க வேண்டிய நக்ஷத்ரகாரர்கள்: மிருகசீரிஷம், சித்திரை, அவிட்டம்

எண் ஜோதிடப்படி: 8ம் எண்ணில் பிறந்தவர்கள் (பிறவி எண், விதி எண், பெயர் எண், பிரமிட் எண்)

திசை, புத்தி நடப்பவர்கள்: சனி அல்லது ராகு - திசை அல்லது புத்தி, அல்லது அந்தரம் நடப்பவர்கள்

ஜாதக அமைப்பு உடையவர்கள்: லக்னம், கேந்திரம், திரிகோணம் ஆகியவற்றில் சனி அல்லது ராகு உடையவர்கள்

சொல்ல வேண்டிய பாடல்:
[1]    மால் அயன் தேட, மறை தேட, வானவர் தேட நின்ற
    காலையும், சூடகக் கையையும், கொண்டு--கதித்த கப்பு
    வேலை வெங் காலன் என்மேல் விடும்போது, வெளி நில் கண்டாய்
    பாலையும் தேனையும் பாகையும் போலும் பணிமொழியே.

[2] மூல மந்திரம்:  ஓம் - ஹ்ரீம் - சாமுண்டி - ஆசனாயயாய - நம:

[3] காயத்ரி: ஓம்  பிசாசத்வஜாயை வித்மஹே சூல ஹஸ்தாயை தீமஹி தந்நோ சாமுண்டி ப்ரசோதயாத்



கொலு எதற்கு?

மனிதன் படிப்படியாக தன் ஆன்மிக சிந்தனைகளை வளர்த்து, இறுதியாக இறைவனுடன் கலக்க வேண்டும் என்ற தத்துவத்தை உணர்த்துவதற்காகவே, கொலுவில் படிகள் அமைக்கப்பட்டு, அதில் பொம்மைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன. ஒன்பது படிகள் அமைப்பது மரபு.
ஒவ்வொரு படியிலும் ஐதீகப்படி பொம்மைகளை வைக்க வேண்டும்.
1வது படி – ஓரறிவு உயிரினம் (மரம், செடி, கொடி, மர பொம்மைகள்)
2வது படி – இரண்டறிவு உயிரினம் (நத்தை, சங்கு, ஆமை பொம்மைகள்)
3வது படி – மூன்றறிவு உயிரினம் (எறும்பு, கரையான் பொம்மைகள்)
4வது படி – நான்கறிவு உயிரினம் (நண்டு, வண்டு, பறவை பொம்மைகள்)
5வது படி – ஐந்தறிவு உயிரினம் (ஆடு, மாடு, சிங்கம், புலி, நாய் பொம்மைகள்)
6வது படி – ஆறறிவு உயிரினம் (மனித பொம்மைகள்)
7வது படி – மனிதனுக்கு அப்பாற்பட்ட மகரிஷிகள், முனிவர்கள்.
8வது படி – தேவர்கள், நவக்கிரகங்கள், பஞ்சபூத தெய்வங்கள்.
9வது படி – பிரம்மா, விஷ்ணு, சிவன், அம்மன், விநாயகக் கடவுளர்.
இம்முறைப்படி கொலு வைத்து, முப்பெரும் தேவியரை வணங்கி வரும் போது கல்வி, செல்வம், வீரம் இம்மூன்றும் நம்மிடம் செழித்தோங்கும்.







Wednesday, October 2, 2013

நாளைய பஞ்சாங்கம்: 03.10.2013 - வியாழன்


நாளைய பஞ்சாங்கம்:

03.10.2013 - வியாழன்


விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 17ம் தேதி - அக்டோபர் 03 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
வியாழகிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) திரயோதசி காலை 6.49 வரை பின் சதுர்த்தசி
நக்ஷத்ரம்: பூரம் மாலை 4.26 வரை பின் உத்திரம்
யோகம்: வியதீபாதம்
கரணம்: பத்ரை கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 2.25 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மதியம் 01.33 முதல் 3.03 வரை
எமகண்டம்: காலை 6.03 முதல் 7.33 வரை
குளிகை: காலை 9.03 முதல் 10.33 வரை
சூலம்: தெற்கு
பரிகாரம்: தைலம்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் மாலை 4.26 வரை பின் மரணயோகம்
சந்திராஷ்டமம்: அவிட்டம், சதயம்




குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 10.33 - 12.03
[2] கீழ்நோக்கு நாள்
[3] சஸ்த்திரதஹத பிதுர் மஹாளயம்
[4] ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் புறப்பாடு
[5] திருப்பதி ஸ்ரீஏழுமலையான் புஷ்பாங்கி சேவை
[6] அருள்நந்தி சிவாச்சாரியார் குரு பூஜை
[7] மாத சிவராத்திரி
[8] இன்று சதுர்த்தசி திதி
----------------------------------------------------------------


0
கேது
0
குரு
0
கிரகநிலை
03-10-2013
செவ்
0
0
0
0
புத சுக்
சனி ராகு
சூரியன்
















கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 2
சந்திரன் - பூரம் மாலை 4.26 வரை பின் உத்திரம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 3
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1
---------------------------------------------------------------------

Tuesday, October 1, 2013

நாளைய பஞ்சாங்கம்: 02.10.2013 - புதன்

நாளைய பஞ்சாங்கம்:

02.10.2013 - புதன்  
 

விஜய வருஷம்
புரட்டாசி மாஸம் 16ம் தேதி - அக்டோபர் 02 2013
தக்ஷிணாயனம்
வருஷரிது
புதன்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) திரயோதசி
நக்ஷத்ரம்: மகம் மதியம் 3.12 வரை பின் பூரம்
யோகம்: சாத்வீகம்
கரணம்: தைதுலம் கரணம்
சூரிய உதயம்: காலை மணி 06.03
அஸ்தமனம்: மாலை மணி 06.09
லக்ன இருப்பு: கன்னி நாழிகை 2.35 வரை - சென்னை அயனாம்சத்திற்கு
இராகு காலம்: மதியம் 12.03 முதல் 1.33 வரை
எமகண்டம்: காலை 7.33 முதல் 9.03 வரை
குளிகை: காலை 10.33 முதல் 12.03 வரை
சூலம்: வடக்கு
பரிகாரம்: பால்
நக்ஷத்திர யோகம்: சித்தயோகம் மதியம் 3.12க்கு மேல் அமிர்தயோகம்
சந்திராஷ்டமம்: திருவோணம், அவிட்டம்


குறிப்பு:

[1] நல்லநேரம்: காலை 9.03 - 10.33, மாலை 4.33 - 6.03
[2] கீழ்நோக்கு நாள்
[3] கரிநாள்
[4] திருப்பதி ஸ்ரீஏழுமலையப்பன் சகஸ்ர கலசாபிஷேகம்
[5] பிரதோஷம்
[6] துவாபரயுகாதி

----------------------------------------------------------------



0
கேது
0
குரு
0
கிரகநிலை
02-10-2013
செவ்
0
0
0
0
புத சுக்
சனி ராகு
சூரியன்

















 கிரக பாதசாரம்

சூரியன் - ஹஸ்தம் 2
சந்திரன் - மகம் மதியம் 3.12 வரை பின் பூரம்
செவ்வாய் - ஆயில்யம் 3
புதன் - ஸ்வாதி 1
குரு(வியாழன்) - புனர்பூசம் 2
சுக்ரன் - விசாகம் 3
சனி - ஸ்வாதி 2
ராகு - ஸ்வாதி 3
கேது - பரணி 1

---------------------------------------------------------------------