Saturday, September 9, 2017

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 03:

தேவ ப்ரஸ்ணம் - தொடர் - 03:
ப்ரஸ்ணம் பார்க்கும் போது சின்ன சின்ன விஷயங்களில் கூட கவனம் செலுத்துதல் அவசியம். நாம் எந்த தேவதைக்கு ப்ரஸ்ணம் பார்க்கப் போகிறோமோ அந்த தேவதை பல விஷயங்களில் நமக்கு காரியங்களை உணர்த்தும். 

உதாரணமாக கோவில்காரர்கள் கொடுத்த தாம்பூலத்தில் இருக்கும், வெற்றிலையில் முதல் வெற்றிலை சிறு சிறு ஓட்டைகளோடு இருந்தால் அங்கிருக்கும் நிர்வாகிகளுக்குள் ஒற்றுமை இல்லை என்று பொருள். அடுத்ததாக வைக்கும் தாம்பூலத்தில் தக்ஷிணை இல்லாமல் இருந்தால் அந்த தேவதையின் அருள் நிர்வாகிகளுக்கு இல்லை. 

ப்ரஸ்ணம் பார்க்கும் போது யாரும் அபசகுனமாக பேசுதல் கூடாது.  

கோவிலுக்குள் நுழையும் போது விமானம் சுத்தமாக இருக்க வேண்டும். விமானத்திலும் - ராஜகோபுரத்திலும் செடிகள் எதுவும் இருப்பது அரசாங்கத்தில் துரோகிகள் இருப்பதைக் காட்டும். அடுத்ததாக கொடி மரம் இருக்கக் கூடிய கோவில்களில் தினமும் பிரதான தேவதைக்கு நைவேத்யம் செய்யப்படும் அன்னம் பலி பீடத்திலும் இட வேண்டும். அந்த நேரத்தில் சங்க நாதம் எழுப்பப்பட வேண்டும்.

குறிப்பு:
தற்போது சொன்ன விஷயங்கள் எதுவும் இன்று பின்பற்றப்படவில்லை.




ப்ரஸ்ணம் பார்க்கும் தெய்வக்ஞர் - தான் கிளம்பிய முதல் கோவிலுக்குச் சென்று உட்கார்ந்து - ப்ரஸ்ணம் பார்த்து பலன் கூற ஆரம்பிக்கும் வரை என்னென்ன விஷயங்கள் நடந்திருக்கிறதோ அதை அப்படியே மனதில் பதிய வைத்துக் கொள்ள வேண்டும். இதில் தான் மிகப் பெரிய உண்மைகள் நிறைந்திருக்கிறது.

உதாரணம்:
கடந்த 15 நாட்களுக்கு முன் ஒரு அம்மன் ஆலயத்திற்கு ப்ரஸ்ணம் பார்க்க சென்ற போது - எல்லாவற்றையும் ஏற்பாடுகள் செய்து ஆரம்பிக்கும் போது திடீரென்று ஒரு பசுமாடு வந்தது - அதை பலமாக எடுத்துக் கொண்டோம். அடுத்து அங்கிருந்த நிர்வாகிகள் ப்ரஸ்ணம் ஆரம்பித்தும் தங்களுக்குள் தேவையில்லாததை பேசிக் கொண்டார்கள். இது தேவதை மேல் அவர்களுக்கு மரியாதை இல்லாததைக் காட்டியது. 

குறிப்பு: இதை அப்படியே வீட்டிற்கு பார்க்கும் அஷ்ட மங்கள ப்ரஸ்ணத்திற்கும் எடுத்துக் கொள்ளலாம்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417
Email: ramjothidar@gmail.com
Web: www.kuppuastro.com

No comments: