Monday, January 13, 2020

ஜோதிட கேள்வி பதில் பகுதி 07: சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

ஜோதிட கேள்வி பதில் பகுதி 07

திரு.சேது - ராமநாதபுரம்
கேள்வி:
சிவஸ்தலத்தில் ராஜகோபுரம் கட்ட முடியுமா?

பதில்:
ப்ரஸ்ணம் பார்த்த தேதி: 13.01.2020 - திங்கட்கிழமை
நேரம்: காலை 9.00
இடம்: சென்னை

உங்களுக்கு ப்ரஸ்ணம் பார்க்கும் போது வந்த லக்னம்: தனுசு. லக்னத்தில் குரு ஆட்சியாக இருக்கிறார். பாக்கியாதிபதி சூரியனும் லக்னத்தில் இருக்கிறார். உங்களுடைய பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் பலமாக இருக்கிறது. உங்களுடைய முன்னோர்கள் மிகவும் புண்ணியம் செய்தவர்களாக இருக்கிறார்கள். உங்களுக்குக் கட்டாயம் ராஜகோபுரம் கட்டும் வாய்ப்பு உண்டு. 



குறிப்பு:
ஒருவருடைய ஜாதகத்தில் கோவில்கள் சார்ந்த விஷயங்களைப் பார்க்கும் போது நவக்கிரகத்தில் குருவையும் - பூர்வ புண்ணிய ஸ்தானமும் - பாக்கிய ஸ்தானமும் பலம் பெற்றிருக்க வேண்டும். பூர்வ புண்ணிய ஸ்தானமும் பாக்கிய ஸ்தானமும் கெட்டுப் போயிருந்தால் கூட குரு பலம் பெற்றிருந்தால் தெய்வம் சார்ந்த விஷயங்களில் நாட்டம் இருக்கும். அதே வேளையில் அதே குரு பகவான் ஷட் பலத்திலும் அதிகமாக இருந்தால் கோவில் சம்பந்தபட்ட விஷயங்களில் ஈடுபாடும் உண்டு. புணருத்தாரணம் - நிர்மாணம் செய்வதற்கும் வாய்ப்புகள் ஏற்படும்.


No comments: