Wednesday, September 20, 2017

18 ஜூன் 2013 - ஹரித்துவாரில் வெள்ளம் வந்த நாள்.

18 ஜூன் 2013 - ஹரித்துவாரில் வெள்ளம் வந்த நாள். ஆனி மாதம் சுக்ல பக்ஷ நவமி தினம்.

ஹரித்துவார் மட்டுமல்ல உலகமே பிரமிப்பாக கவனித்த நாள்.

சிவன் சிலையை வெள்ளமானது வேகத்துடன் கடந்த சென்றதை உலக மக்கள் அனைவரும் உன்னிப்பாக கவனித்தனர். பலர் சிவனுக்கே இந்த நிலைமையா என பரிதாபப்பட்டனர் - சிலர் இது என்ன கடவுள் என எக்காளமிட்டனர். யாருக்கும் தெரியாது சிவனுக்கு இந்த இரண்டுமே ஒன்றுதான் என்று. 

சரி விஷயத்திற்கு வருவோம் - விஷயம் விஷயமானது மட்டுமல்ல சிறிது விஷமமானதும் கூட.



இலங்கை இன படுகொலைக்குப் பிறகு ராஜபக்‌ஷே குடும்பமானது 2013ம் ஆண்டு சித்திரை மாதம் அமாவாசை தினத்தன்று ஹரித்துவாரில் தில ஹோமம் செய்திருக்கிறார்கள். அதன் பிறகே சனியும் ராகுவும் ஒரே வீட்டில் இருந்து சூரியன் திரிகோணப்படி சம்பந்தப்படும் போது வெள்ளம் ஏற்பட்டு ஹரித்துவாரை சுத்தம் செய்து கொண்டது.

ஒரு நாட்டினுடைய மன்னனானவன் தனது பாவங்களைப் போக்கி கொள்ள ஒரு ஆற்றிற்கு வரும் போது - ஆறானது வருண பகவானின் மூலம் தனது பாவங்களைப் போக்கிக் கொள்கிறது. சாஸ்திரம் இப்படி சொல்கிறது.

இதை ஏன் இப்போது சொல்கிறேன் என கேட்கிறீர்களா? ஏதோ சொல்ல வேண்டும் என தோன்றியது, அவ்வளவுதான்.

பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
+91 89390 41417

Email: ramjothidar@gmail.com

Web: www.kuppuastro.com

1 comment:

திவாண்ணா said...

அப்படியாவது காவிரில வெள்ளம் வரட்டும்!😂😂😂