Thursday, May 16, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் :கடகம்


கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்  மற்றும் ஹி, ஹூ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத கடக ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் மனத்திற்குண்டான செயல்களை கவனிக்கும் சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்தை செய்து கொண்டிருப்பவர்கள். அனைவரின் மீதும் பேரன்பு கொண்டவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய லாபஸ்தனாத்தில் இருந்து விரையமோக்ஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய சுகஸ்தானம், ரணருண ரோகஸ்தானம், ஆயுள்ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் சுகஸ்தான 4ம் ராசியில் சனி, ராகுவும், தொழில்ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் உள்ளார். கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்தில் இருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த 1 வருட காலமாக இருந்து வந்தது. இனி அது மாறும். 

வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள்  பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.
பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : மிதுனம்


மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள்  மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
நன்றாக சிந்தித்து செயல்பட்டு வேலையை செவ்வனே முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் ஞானத்தை வாரி வழங்கும் புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசும் ஆற்றல் உடையவர்கள். 
இதுவரை உங்கள் ராசிக்கு ரணருணரோக ஸ்தானம் மற்றும் தொழில்ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய விரையராசியில் இருந்து ராசிக்கு இடம் பெயர்கிறார். ராசியில் இருந்து உங்களுடைய பூர்புண்ணிய ஸ்தானம், களத்திரஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் பூர்வ புண்ணிய ஸ்தான 5ம் ராசியில் சனி, ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இதனால் மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். ராசியில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம், ஏழாம் இடமான மனைவி, நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, சௌபாக்ய வாழ்வு ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும்.

குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும்.  உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது.
கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள்.
வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள்.
வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல ப்எயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.
வியாபாரிகள்  லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு  அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம்.
குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு  மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : இடபம்


ரிஷபம்: கார்த்திகை- 2, 3, 4ம் பாதம், ரோகினி, மிருகசீரிஷம் 1, 2ம் பாதங்கள் மற்றும் இ, உ, எ,ஏ, ஒ, வா, வ, வி, ஆ, லோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
கவர்ச்சிகரமான தோற்றமும் உள்ளப் பொலிவும் கனிவான பேச்சும் கொண்ட ரிஷப ராசி அன்பர்களே! நீங்கள் நவக்கிரகங்களில் அள்ளிக் கொடுக்கும் வல்லமை கொண்டவர்  என்று போற்றப்படும் சுக்ரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  இனிமையாக பேச வேண்டும் எனற எண்ணம் கொண்டவர்கள். ஆடம்பரமாகவும் அதே வேளையில் அவசியத்தேவைகளுடனுடம் வாழ வேண்டும் என்ற கருத்து உடையவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு ஆயுள்ஸ்தானம் மற்றும் லாபஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய ராசியில் இருந்து தனவாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். இரண்டாம் இடத்தில் இருந்து உங்களுடைய ரணருண ரோகஸ்தானம், ஆயுள்ஸ்தானம், கர்ம தொழில்ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் ரணருண ரோகஸ்தான 6ம் ராசியில் சனி, ராகுவும், விரையஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் உள்ளார்.  குரு தன, குடும்ப, வாக்கு ஸ்தானத்தில் இடம்பெறுவது சிறப்பாகும்.  பணவரவு புதிய இனங்களில் வந்துசேரும். மற்றவர்களுக்கு இயன்ற உதவிகளைச் செய்து மகிழ்வீர்கள். தம்பி, தங்கை உங்கள் கருத்துக்கு மதிப்பளிப்பர். வீடு, வாகனத்தில், நிலம் ஆகியவற்றில் தேவையான நவீன மாற்றம் செய்வீர்கள். புதிய வீடு வாங்குவதற்கும் யோகமுண்டு. குழந்தைகளின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவீர்கள். அவர்கள் மீதான பாசமும் அதிகரிக்கும். பூர்வசொத்தில் வருமானம் அதிகரிக்கும். தம்பதியர் ஒருவருக்கொருவர் பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்களால் உதவி தக்க சமயத்தில் கிடைக்கும். நல்லவர்களின் அறிமுகம் கிடைக்கப் பெறுவீர்கள். ஆயுள் ஸ்தானத்தில் குரு பார்வை பதிவதால் உடல்பலம் கூடும். தொல்லை கொடுத்து வந்த வியாதிகள் இருந்த இடம் தெரியாமல் மறையும். தந்தைவழி உறவினர்களிடம் இருந்து வந்த பகையுணர்வு நீங்குவதோடு உதவியும் கிடைக்கும்.
திருமண வயதில் உள்ளவர்களுக்கு திருமண முயற்சி எளிதில் நிறைவேறும். திட்டமிட்டபடி மங்கல நிகழ்ச்சி சிறப்பாக நடைபெறும்.  வியாபாரிகள் தங்கள் தொழிலில் அமோக வளர்ச்சியும் தாராள லாபமும் பெறுவர். தொழிலதிபர்களும் விறுவிறுப்புடன் செயல்பட்டு நல்ல முன்னேற்றம் காண்பர். புதிய கிளை துவங்கும் திட்டம் வெற்றிகரமாக நிறைவேறும்.  தனவரவு பெருகும். லட்சியங்கள் நிறைவேறும். பேரும் புகழும் கிடைக்கும். வளமான வாழ்க்கை பொற்காலமாக இருக்கும். அற்புதமான திருப்பங்கள் அவ்வப்போது நிகழும். கடல்சார் பொருட்கள், கட்டுமானப் பொருட்கள், ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் வாடிக்கையாளர்களின் ஆதரவால் அதிக லாபம் காண்பர். மற்ற வியாபாரிகளுக்கு விற்பனை கூடுவதுடன் அடிக்கடி வெளியூர் சென்று ஆதாயத்துடன் திரும்புவர். 
உத்தியோகஸ்தர்கள் அதிலும் அரசு துறையில் பணிபுரிபவர்கள் சிறப்பாக செயல்பட்டு பணிகளைக் குறித்த காலத்தில் முடிப்பர். பதவி உயர்வு, விரும்பிய பணி, இடமாற்றம் கிடைக்கும். தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்திடம் நன்மதிப்பைப் பெறுவர். எதிர்பார்த்த சலுகை அனைத்தும் கிடைக்கும். சக பணியாளர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும்.  பணிபுரியும் பெண்கள் ஆர்வமுடன் கடமையாற்றி குறித்த காலத்தில் பணிகளைச் செய்து முடிப்பர். சம்பள உயர்வு, பதவி உயர்வு ஆகிய சலுகை பெறுவர். எதிர்பார்த்த கடனுதவி தேவையான சந்தர்ப்பத்தில் கிடைக்கும்.
குடும்ப பெண்கள் கணவரின் அன்பைப் பெறுவர். குடும்பத்தேவைக்கான பணவசதி கிடைத்து சந்தோஷ வாழ்வு நடத்துவர். உறவினர்களில் மத்தியில் அந்தஸ்து கூடும். மாணவர்கள் திட்டமிட்டுப் படித்து தரத்தேர்ச்சி காண்பர். மற்ற துறை மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குவர். படிப்புக்கான பணவசதி சீராக கிடைத்து வரும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஆரம்ப, மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் அதிகநேரம் ஒதுக்கி அக்கறையுடன் படிப்பர். படிப்பு முடித்தவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைக்கும். கலைத்துறையினருக்கு இந்த குருப்பெயர்ச்சி ஒரு பொன்னான காலமாகும். பட்ட கஷ்டத்திற்கு அறுவடை செய்யும் காலம் வந்து விட்டது. செய்யாத தப்பிற்கெல்லாம் மாட்டி அவதிப்பட்டீர்களே அந்த நிலைமை மாறும். உங்கள் பேச்சிற்கும் அடையாளம் கிடைக்கும் காலமிது. சிறிய சிறிய செலவுகள் வந்து பயமுறுத்தியதே அந்த நிலைகளிலும் முன்னேற்றம் இருக்கும்.
தாய் தாய் வழி உறவினர்கள் மீது உங்களுக்கு நல்ல அபிப்ராயங்கள் எழும். பிள்ளைகள் மீது கவனம் தேவை. அவர்களிடம் அளவுக்கு அதிகமாக எதிர்பார்க்காதீர்கள். நீர் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். தண்ணீரை காய்ச்சிக் குடிக்க பழகுங்கள். அலர்ஜியும் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் தூரதேச பிரயாணங்கள் செய்யும் சூழ்நிலைகள் வரலாம். நண்பர்கள், உறவினர்களிடம் கவனம் தேவை. நல்லவர்கள் யார் கெட்டவர்கள் யார் என்றே தெரியாமல் நீங்கள் பழக வேண்டி வரலாம். தொழில் செய்யும் இடத்தில் இடமாற்றம், பணி பளு வரலாம். எதிர்கொள்ள தயாராகுங்கள்.மிகுந்த சாமர்த்தியசாலியான நீங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்குவீர்கள்.
அரசியல்வாதிகள் மற்றும் சமூக நல சேவகர்கள் அனைவரிடமும் இன்முகத்துடன் நடந்து கொள்வர். சமூகநலனில் அக்கறையுடன் ஈடுபட்டு மக்கள் செல்வாக்கு காண்பர். தாராள செலவில்தொண்டர்கள் மத்தியில் சுய அந்தஸ்தை உயர்த்துவர். நீண்டநாள் எதிர்பார்த்த பதவி, பொறுப்பு தலைமையின் ஆதரவால் கிடைக்கப் பெறுவர். 
பரிகாரம்:வெள்ளிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை வெண் மொச்சை சுண்டல் செய்து வழங்கவும்.

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : மேடம்

நிகழும் மங்களகரமான விஜய வருஷம் உத்தராயனம் வருஷரிது 
வைகாசி மாதம் 14ம் தேதி (28-05-2013)
செவ்வாய்கிழமையும், கிருஷ்ண பஞ்சமியும், உத்திராடம் நக்ஷத்ரமும் 
சுப்ரம் நாம யோகமும் கௌலவ கரணமும் கூடிய சுபயோக சுபதினத்தில் அன்று உதயாதி 
மாலை 9.15க்கு தனுசு லக்னத்தில் ஸ்ரீகுரு பகவான்
 ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சியாகின்றார்.






மேஷம்: அஸ்வினி, பரணி, கார்த்திகை-1ம் பாதம் மற்றும் சு, சொ, சோ, சை, ல, லீ, லு, லோ, அ, ஆ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
தைரியமும் தன்னம்பிக்கையும் ஆர்வமுடன் லட்சிய நோக்குடன் தக்க விதத்தில் செயலாற்றி வாழ்க்கையில் சாதனைகள் புரியும்  மேஷ ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் தைரியக்காரகன் என்று போற்றப்படும் செவ்வாயை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  அற்ப ஆசைக்கு இடம்கொடுக்காதவர்கள். ஆனால் சற்று முன்கோபக்காரர்கள். வாக்குவன்மை நிறைந்தவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு பாக்கியஸ்தானம் மற்றும் விரையஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரியவீர்ய ஸ்தானத்திற்கு இடம் பெயர்கிறார். மூன்றாம் இடத்தில் இருந்து உங்களுடைய களத்திரஸ்தானம், பாகியஸ்தானம், லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் கேது ராசியிலும், களத்திரஸ்தான 7ம் ராசியில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
குரு பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 2-ம் இடமான ரிஷபத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்தார்.  இந்த நிலையில் 3-ம் இடமான மிதுனத்திற்கு செல்கிறார். அவரால் முன்பு போல் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது குரு குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையைஉருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளியூர் வாசம் நிகழும்.  தீயோர் சேர்க்கையால் அவதிகள் நேரிடலாம். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். குரு இருக்கும் இடம் சாதகமாக இல்லாவிட்டாலும், குருவின் அனைத்துப் பார்வைகளும் சாதமாக அமையும். அதன்மூலமும் நன்மை கிடைக்கும்.
குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. கணவன்-மனைவி ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தாரிடமும் வீண் பேச்சை தவிர்க்கவும். சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. விருந்து விழா என்று சென்று வருவீர்கள். தடைபட்ட திருமணம் கைகூடும். குடும்பத்தில் சிற்சில பிணக்குகள் வரலாம் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. குடும்ப பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு நடப்பதுநல்லது.இளைய சகோதர சகோதரிகளின் மூலம் மிகுந்த நன்மைகள் கிடைக்கும். பிரிந்திருந்த தம்பதிகள் ஒன்று சேர்வார்கள். நன்மைகள் தொடர்ந்த வண்ணம் இருக்கும். பணப்ப பிரச்சனைகளில் உங்களை திக்குமுக்காட வைத்தாலும் அவ்வப்போது பணவரவிற்கு குறையிருக்காது. குடும்பச் செலவுகளை எப்படியும் சமாளிக்க வாழ்க்கைத்துணை உதவுவார்.
பூர்வீக பிதுரார்ஜித சொத்துக்களில் இருந்து வந்த பிரச்சனைகள் முடிவிற்கு வரும். ஜீவனம் சம்பந்தமான விஷயங்களில் காரியம், நேரம் நஷ்டம் ஆனாலும் அதை தாங்குவதற்குண்டான் வலுவை குரு உங்களுக்கு அளித்திடுவார். வளமும் வசதியும் அதிகரிக்கும். தம்பதியினர் இடையே அன்பு மேம்படும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிரச்சினை இருக்காது. பொருளாதாரத்தில் வளர்ச்சியை காணலாம். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். புதிய வாகனங்கள் வாங்கலாம்.
உடல்நலனை பொறுத்தவரை சுமாராக இருக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.  நீண்ட நாட்களாக இருந்து வந்த தேக்க நிலை மறையும். திட்டமிட்ட பணிகள் அனைத்தும் தொய்வின்றி நடக்கும். ஏற்கனவே செய்த தவற்களை திருத்திக் கொள்ள பார்ப்பீர்கள். நல்வழி காட்ட நல்லவர்கள் வருவார்கள். கொடுக்கல் வாங்கலில் இருந்து வந்த குறைகள் அனைத்தும் நிவர்த்தியாகும். கடன் வாங்க வேண்டி வந்தாலும் அனைத்தையும் திருப்பி அடைப்பதற்குண்டான வழிகளை குரு உங்களுக்குக் காண்பிப்பார். நஷ்டம் ஏற்படும் என நினைத்திருந்த மனக்கவலைகள் அனைத்தும் தீரும்.
உத்தியோகத்தில் வழக்கமான பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். இடமாற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேலை பளு குறையும்.சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி மறையும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. சிலர் தொய்வு நிலையில் இருந்து விடுபடுவர். வெளியூர் பயணம் அனுகூலத்தை கொடுக்கும். வேலையில் சிலருக்கு வெறுப்பு வரலாம், எனவே மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். உடன் இருந்து தொல்லை கொடுத்தவர்கள் விலகுவர். வெற்றி பெறும் பட்டியலில் உங்கள் பெயரும் இடம் பெறப் போகிறது.
வியாபாரிகள் வரவு-செலவு கணக்கை சரியாக வைத்துக் கொள்ளவும். குறைந்த முதலீட்டில் புதிய வியாபாரம் தொடங்கலாம்.  உங்கள் வியாபாரத்தை விரிவுபடுத்தலாம். கலைஞர்கள் திருப்திகரமான பலனை எதிர்பார்க்கலாம். அலைச்சலும், பளுவும் இருக்கத்தான் செய்யும். அரசு உதவி கிடைக்கும். உடன் பணிபுரிவோரால் பாராட்டும், அங்கீகாரமும் கிடைக்கும்.
அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். பதவிகள் வந்து சேரும்.  மாணவர்கள் விடாமுயற்சியுடன் படிப்பது நல்லது. விவசாயம் சாதாரணமாக நடக்கும். அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும்.  தொடர்ந்து நற்பலனை பெறலாம். கெட்ட சகவாசத்தில் சற்று எச்சரிக்கை தேவை. அதிகமாக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். முன்னேற்றத்திற்கு வழி காண்பீர்கள். மேற்படிப்பில் எதிர்பார்த்திருந்த துறை கிடைக்கும். 
விவசாயம் சிறப்பாக நடக்கும். ஆகஸ்டு, செப்டம்பர் மாதங்களில் புதிய நிலம் வாங்கலாம். பெண்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். புதிய நண்பர்களிடம் சேரும் முன் எச்சரிக்கை தேவை. நினைக்கின்ற காரியங்களனைத்தும் சுணக்கமின்றி நடைபெறும். போட்டி பொறாமை எதிர்ப்புகளை சிறப்பாக சமாளித்து விடுவீர்கள்.
பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை தோறும் முருகன் கோயிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றவும். முடிந்தவரை ராகு கேது ஸ்தலங்களுக்குச் சென்று பரிகாரம் செய்து வரவும்.

Monday, May 13, 2013

இன்று திங்கள்கிழமை. அக்ஷயதிருதியை.

இன்று திங்கள்கிழமை. அக்ஷயதிருதியை.

ஸ்ரீமஹாலக்ஷிமிக்கு உகந்த நாள்.

ஸ்ரீமஹாலக்ஷிமி அஷ்டகத்தை பாராயணம் செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும்.

 
 
 
மகாலட்சுமி அஷ்டகம்

1. நமஸ்தேஸ்து மஹாமாயே ஸ்ரீபீடே ஸுரபூஜிதே
சங்க சக்ர கதாஹஸ்தே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

2. நமஸ்தே கருடாரூட கோலாஸுர பயங்கரி
ஸர்வ பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

3. ஸர்வ ஜ்ஞே ஸர்வ வரதே ஸர்வ துஷ்ட பயங்கரி
ஸர்வ துக்கஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

4. ஸித்தி புத்தி ப்ரதே தேவி புக்திமுக்தி ப்ரதாயினி
மந்திர மூர்த்தே ஸதா தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

5. ஆதியந்த்ரஹிதே தேவி ஆதிசக்தி மஹேஸ்வரி
யோகஜே யோகஸம்பூதே மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

6. ஸ்தூல ஸூக்ஷ்ம மஹாரௌத்ரே மஹாசக்தி மஹோதரே
மஹா பாபஹரே தேவி மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

7. பத்மாஸன ஸ்திதே தேவி பரப்ரும்ம ஸ்வரூபிணி
பரமேசி ஜகந்மாதா மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

8. ச்வேதாம் பரதரே தேவி நானாலங்கார பூஷிதே3.
ஜகத்ஸ்திதே ஜகந்மாத மஹாலக்ஷ்மி நமோஸ்துதே

9. மஹாலக்ஷ்மிம் யஷ்டகஸ்தோத்ரம்ய: படேத் பக்திமான்நர
ஸர்வஸித்தி மவாப்னோதி ராஜ்யம் ப்ராப்னோதி ஸர்வதா

10. ஏககாலே படேந்நித்யம் மஹாபாப வினாஸநம்
த்விகாலே ய: படேந்நித்தியம் தனதாந்ய ஸமந்வித:

11. த்ரிகாலம் ய: படேந்நித்யம் மஹாஸத்ரு: விநாஸனம்
மஹாலக்ஷ்மீர் பவேந்நித்யம் ப்ரஸன்னா வரதா ஸுபா

Saturday, May 11, 2013

இன்று சனிக்கிழமை.

இன்று சனிக்கிழமை. 


அருகிலிருக்கும் பெருமாள் ஆலயத்திற்கு சென்று வணங்கி வலம் வாருங்கள்.  துளசி தீர்த்தம் அருந்துங்கள்.

எல்லாம் நன்மையே நடக்கும்.

Monday, May 6, 2013

லக்ஷார்ச்சனை மற்றும் குருப் பெயர்ச்சி மஹாயாகம்

நிகழும் மங்களகரமான விஜய வருஷம் வைகாசி மாதம் 14ம் தேதி(28-05-2013) அன்று மாலை 09.15க்கு குரு பகவான் ரிஷப ராசியிலிருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி ஆகிறார்.

உத்தம பலன் பெறும் ராசிகள்: ரிஷபம், துலாம், தனுசு, கும்பம்
மத்யம பலம் பெறும் ராசிகள்: மிதுனம், சிம்மம், கன்னி,  மீனம்
அதம பலம் பெறும் ராசிகள்: மேஷம், கடகம், விருச்சிகம், மகரம்

இதில் அனைத்து ராசிக்காரர்களும் பரிகாரம் செய்யலாம்.

மேலும் மத்யம பலம் மற்றும் அதம பலம் பெறும் ராசிக்காரர்களும், லக்னக்காரர்களும் கட்டாயம் பரிகாரம் செய்ய வேண்டும். மேலும் குரு மற்றும் சுக்கிர திசை, புத்தி, அந்தரம் நடப்பவர்கள் மற்றும் பரணி, பூரம், பூராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி நக்ஷத்திரத்தில் பிறந்தவர்களும் பரிகாரம் செய்யலாம். மற்றும் குரு தோஷம், பிராமண தோஷம்,  களத்திர தோஷம், பிதுர் தோஷம் உள்ளவர்களும் இதில் கலந்து கொள்ளலாம்.

திருமணத்தடை நீங்க, சந்தான பாக்கியம் பெற, லக்ஷ்மி கடாக்ஷம் கிடைக்க, குபேர சம்பத்து பெற, நல்ல கல்வி கிடைக்க, ஆரோக்கியத்தியத்துடன் வாழ, தடைகள் நீங்க, வீடு பேறு கிடைத்திட. குடும்பத்தில் அமைதி நிலவ  கலந்து கொள்ளுங்கள்.     


இதற்குண்டான ஹோமம் பரிகாரம் 27.05.2013 மற்றும் 28.05.2013 ஆகிய இரண்டு நாட்கள் குரோம்பேட்டை நெமிலிச்சேரி வேம்புலி அம்மன் நகரில் எழுந்தருளியுள்ள ஸ்ரீவேம்புலி அம்மன் ஆலயத்தில் நடைபெறுகிறது.

27.05.2013 அன்று லக்ஷார்ச்சனையும் ,  ஹோமம் பரிகாரம் 28.05.2013 அன்றும் நடைபெறுகிறது

இதில் கலந்து கொள்ள ஒரு நபருக்குக் கட்டணம்: ரூபாய்.100/- மட்டும். ஹோமத்தன்று சரியாக காலை 7 மணி முதல் ஸங்கல்பம் ஆரம்பிக்கப்படும். ஒவ்வொருவரையும் தனித்தனியாக உட்கார வைத்து ஸங்கல்பம் செய்யப்படும்.

பூஜைக்குத் தேவையான அனைத்து பொருட்களும் அங்கே வழங்கப்படும். இதில் நேரில் கலந்து கொள்ள முடியாதவர்கள் கட்டணத்தை அனுப்பி வைத்தால் அவர்களுக்குரிய பரிகாரம் செய்து பிரசாதம் தபாலில் அனுப்பி வைக்கப்படும்.


பூஜை மற்றும் பரிகாரங்கள் நடத்தி வைப்பவர்: தினமணி மற்றும் தினகரன் புகழ் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர்.

பூஜைக்குத் தேவையான விபரங்கள்:
அவரவர் பெயர், நக்ஷத்ரம், இராசி, கோத்திரம்[கிளை]
ஸங்கல்பம் (தாங்கள் குறிப்பிட வேண்டியது)
கல்வி
வேலைவாய்ப்பு
திருமணம்
குழந்தையின்மை
தீர்க்காயுள்

பிரசாத செட்:

[1] தாங்கள் தினமும் அணிந்து கொள்ளத்தக்க ஸ்ரீசக்கரம் டாலர். - 16 நாட்கள் ஸ்ரீலலிதாம்பிகா த்ரிசதி பூஜை செய்து செறிவூட்டப் பெற்றது.

[2] ஹோம ரக்ஷை

[3] ஹோம பிரசாத கயிறு

[4] ஹோமத்தில் இடப்பட்ட நாணயம் ஒன்று

[5] அக்ஷதை

[6] குங்குமம்
----------------------------------------------------------------------------
தொடர்புக்கு: 7845119542
நன்றி.

Thursday, May 2, 2013

மே மாத ராசிபலன்கள்


மேஷம்:
(அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்)

எந்த ஒரு காரியத்தையும் திறமையாக செய்து முடிக்கும் ஆற்றல் உடைய மேஷராசியினரே நீங்கள் எல்லோராலும் நேசிக்கப்படுவீர்கள். இந்த மாதம் எதிலும்  எச்சரிக்கையாக இருப்பது நன்மை தரும்.

கிரகநிலை:
மாத தொடக்கத்தில் ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, தன வாக்கு குடும்பஸ்தானத்தில் குரு, களத்திர ஸப்தம ஸ்தானத்தில் சனி ராகுவும் அமர்ந்துள்ளனர். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், சூரியன் மே 15ம் தியதி தன வாக்கு ஸ்தான ரிஷபத்திற்கும், 25ம் தியதி புதன் தைரிய வீர்ய
ஸ்தானத்திற்கும், 28ம் தியதி குரு மிதுனத்திற்கும், 30ம் தியதி சுக்கிரன் 3ம் இடத்தி்ற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

ராசியில் இருக்கும் கிரகங்கள் தேவையற்ற மன சஞ்சலத்தை உண்டாக்கலாம். அதனால் எந்த ஒரு வேலைபற்றியும் அதிகம் யோசிப்பதை தவிர்ப்பது நல்லது. திடீர் பணதேவை உண்டாகலாம். சூரியன் சஞ்சாரத்தால் வெளியூரில் இருந்து வரும் கடிதங்கள் மூலம் மகிழ்ச்சி ஏற்படும். தொழில், வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் வியாபாரம் தொடர்பான விவகாரங்களில் வீண் இடையூறுகள் ஏற்பட்டு நீங்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேல் அதிகாரிகள் மூலம் அனுகூலம் ஏற்பட்டாலும்,சக ஊழியர்களிடம் கவனமாக பழகுவது நல்லது. குடும்பத்தில் அமைதியும், மகிழ்ச்சியும் இருக்கும். கணவன் மனைவிக்கிடையே நல்லுறவு ஏற்படும். குடும்ப உறுப்பினர் உடல்நிலையில் கவனம் தேவை.  கடன் விவகாரங்களில் யோசித்து செயல்படுவது நல்லது. பெண்கள் எதிலும் எச்சரிக்கையுடன் ஈடுபடுவது நல்லது. கடித போக்குவரத்து மூலம் நல்ல தகவல் வரும். வீண் மன சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். மாணவர்கள் ஆசிரியர் ஆதரவு கிடைத்தாலும் சக மாணவர்களிடம் கவனமாக பழகுவது நல்லது.  கல்வியில் ஏற்பட்ட தடை நீங்கும்.

சந்திராஷ்டமம்: 25, 26,

அதிர்ஷ்டமான நாட்கள்: 9, 18, 27 ஆகிய தேதிகள்

பரிகாரம்: செவ்வாய் கிழமை அன்று அம்மனை வழிபட்டால் எதிர்ப்புகள் அகலும், மனதில் தைரியம் உண்டாகும்.


----------------------------------------------------------------------

ரிஷபம் - (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள் ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்)

நேர்மையாகவும், உண்மையாகவும் நடந்த கொள்ளும் ரிஷபராசியினரே நீங்கள் கடுமையாக உழைக்க தயங்காத வராக இருப்பீர்கள். இந்த மாதம் எதிர் பாராத திருப்பம் உண்டாகலாம். புதிய நண்பர்கள் சேர்க்கை உண்டாகும்.

கிரகநிலை:
ராசியில் குரு, ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி ராகு, விரைய மோக்ஷ ராசியில் சூரியன், புதன், செவ்வாய், ராசியாதிபதி சுக்கிரன், கேது  என கிரக நாயகர்கள் வீற்றிருக்கின்றனர். மே 3ம் தியதி ராசியாதிபதி சுக்கிரன், 5ம் தியதி புதன், சூரியன் மே 15ம் தியதி ராசிக்கும், 25ம் தியதி புதன் குடும்ப ஸ்தானத்திற்கும், 28ம் தியதி குரு மிதுனத்திற்கும், 30ம் தியதி சுக்கிரன் 2ம் இடத்தி்ற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

தொழில் வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். வியாபார போட்டிகளில் சாதகமான பலன்களும் லாபங்களும் கிடைக்கும். ஆனாலும் வாடிக்கையாளர்களை  அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். நிலுவையில் உள்ள தொகை வந்து சேரும். சிலருக்கு வேலை மாற்றம் உண்டாகும்.  தம்பதிகளுக்குள் தருணங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். குடும்பத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். தெய்வ நம்பிக்கை கூடும். உறவினர்கள், நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் திறமையாக சமாளித்து எந்த பிரச்சனையிலும் சாதகமான முடிவை பெறுவீர்கள். இழுபறியாக இருந்த காரியங்களில் எதிர்பாராத திருப்பம் ஏற்படும். மாணவர்களுக்கு தேர்வுகள் பற்றிய பயம் நீங்கும். கல்வியில் முன்னேற்றம்  காணப்படும்.

சந்திராஷ்டமம்: 1, 27, 28,

அதிர்ஷ்ட நாட்கள்: 6, 15 ,24 ஆகிய தேதிகள்

பரிகாரம்: வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை தீபம் ஏற்றி வழிபட, வயதான தம்பதிகளிடம் ஆசீர்வாதம் பெற எல்லா காரியங்களிலும் நன்மை உண்டாகும் செய் தொழில் சிறக்கும்.

------------------------------------------------------------------

மிதுனம் - (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள் திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதம்)

பேச்சாற்றல் மூலம் எப்படிப்பட்ட சிக்கலான காரியங்களையும் சுமூகமாக முடிக்கும் திறமை உடைய மிதுன ராசியினரே இந்த மாதம் பொருள் வரவையும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணத்தையும் தரும்.

கிரகநிலை:
பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி ராகு, லாபஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், ராசியாதிபதி சுக்கிரன், கேது, விரைய ராசியில் குரு என நவ நாயகர்கள் அருள்கின்றனர். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி ராசியாதிபதி புதன், தைரியாதிபதி சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி ராசியாதிபதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வெளியூர் பயணங் களால் வீண் அலைச்சலும் செலவும் ஏற்படலாம். செய் தொழிலில் மன நிம்மதியும் அதிக நன்மையும் உண்டாகும். மேல் அதிகாரிகளின் ஆதரவை உத்தியோகஸ்தர்கள் பெறுவார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். வியாபாரம் தொடர்பான பயணங்களால் அலைச்சல் உண்டாகலாம். எதிர்பார்த்த பலன் தாமதப்படும். குடும்பத்தில் சுப காரியம் நடக்கலாம். சிலருக்கு குழந்தை பாக்கியம் ஏற்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். பிள்ளைகளால் நன்மை ஏற்படும். அவர்களது திறமைகண்டு மனமகிழ்ச்சி கொள்வீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும், செலவும் ஏற்பட்டாலும் சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் உருவாகும். எதிர்பார்த்த  உதவிகள் கிடைக்க பெறுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த போட்டி நீங்கும். எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். மனதில் தன்னம்பிக்கை உண்டாகும்.

சந்திராஷ்டமம்: 2, 3, 29, 30

அதிர்ஷ்ட நாட்கள்: 5, 14, 23 ஆகிய தேதிகள்

பரிகாரம்: சுந்தர காண்டம் படித்து வர எல்லா கஷ்டங்களும் நீங்கும்.  எதிர்பார்த்த காரியம் சாதகமாக முடியும்.

கடகம்
(புனர் பூசம் 4ம் பாதம்,பூசம், ஆயில்யம்)

தயாளகுணம் படைத்த கடகராசியினரே நீங்கள் இனிமையாக பேசி மற்றவர்களின் நன்மதிப்பை பெறுவீர்கள். இந்த மாதம் வீண் அலைச்சல் உண்டாகும்.

கிரகநிலை:
சுகஸ்தானத்தில் சனி ராகு, தொழில் ஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, லாபஸ்தானத்தில் குரு என கிரகங்கள் இருக்கின்றன. மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், தனாதிபதி சூரியன் மே 15ம் தியதி லாபஸ்தான ராசிக்கும், 25ம் தியதி தைரிய விரையாதிபதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன் மிதுன ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.


எதிர்பாராத செலவு ஏற்படும். புதிய காரியங்களில் ஈடுபடும் போது யோசித்து  செய்வது நல்லது.  மன அமைதி பாதிக்கும் படியான சூழ்நிலை ஏற்பட்டு நீங்கும். நண்பர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் கூடுதல் கவனம் செலுத்து வது நல்லது. வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். அதே நேரத்தில் சரக்குகளை அனுப்பும் போது கவனம் தேவை.  உத்தியோகத்தில் இருப்பவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து செல்வது நல்லது.  அலுவலக வேலைகளால் அலைச்சல் உண்டாகும். சக ஊழியர்களிடம் அலுவலகம் தொடர்பான ரகசியங்களை கூறுவதை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களின் செயல்கள் எரிச்சல் ஏற்படுத்துவதாக இருக்கும். அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே  மனம் விட்டு பேசி
செயல்படுவது நன்மை தரும். பிள்ளைகள் எதிர்பார்த்தபடி நடந்து கொள்வார்கள்.  பெண்கள் நண்பர்களிடம் உறவினர்களிடம் கவனமாக பேசுவது நல்லது. வீண் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். புதிய செயல்களை யோசித்து செய்வது நல்லது. மாணவர்கள் பெரியோர்களை அனுசரித்து செல்வது நல்லது. கூடுதல் கவனத்துடன் படிப்பது நல்ல மதிப்பெண்கள் பெற உதவும்.

சந்திராஷ்டமம்: 4, 5, 31

அதிர்ஷ்ட நாட்கள்: 2, 4, 11, 13, 20, 22, 29, 31 ஆகிய தேதிகள்

பரிகாரம்: அபிராமி அந்தாதி படித்து அம்பாளை வழிபட எல்லா நன்மைகளும் உண்டாகும். மன குழப்பம் நீங்கும். தைரியம் பிறக்கும்.

சிம்மம்
(மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)

கருமமே கண்ணாக இருக்கும் சிம்மராசியினரே நீங்கள் எல்லோராலேயும்  நேசிக்க கூடியவராகவும் இருப்பீர்கள். இந்த மாதம் முன்புதடைபட்ட காரியங்கள் எவ்வித இடையூறுமின்றி நடந்து முடியும்.


கிரகநிலை:
தைரியவீர்ய ஸ்தானத்தில் சனி ராகு, பாக்கியஸ்தான ராசியில் ராசியாதிபதி சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, தொழில் ராசியில் குரு என கிரக
அமைப்பு இருக்கின்றது. மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், ராசியாதிபதி சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம்
தியதி சுக்கிரன் லாபஸ்தான ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.


ராசியாதிபதி சஞ்சாரம் தனஸ்தான ராசிக்கு எட்டில் இருப்பதால் வெளியூர்  பயணங்கள் உண்டாகும், அதனால் நன்மையும் ஏற்படும். நண்பர்கள்
பலவிதங்களிலும் ஆதரவாக இருப்பவர்கள் சூரிய சஞ்சாரம் புதனுடன் சேர்ந்து இருப்பது மன தெளிவை உண்டாக்கும். ஆக்கபூர்வமான யோசனைகள் தோன்றும். தொழில் வியாபாரத்தில் இருந்து வந்த இடையூறுகள் குறையும். கடித போக்கு வரத்து மூலம்  அனுகூலம் உண்டாகும். தொழில் விருத்தி அடைவதுடன் ஆதாயமும் அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திருப்தியாக உணர்வார் கள். பணவரத்தும்  இருக்கும் சக ஊழியர்களின் உதவியும் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் நீங்கள் சொல்வதை கேட்டு நடப்பார்கள். அவர்களுக்கு தேவையானவற்றை வாங்கி கொடுத்து மகிழ்வீர்கள். பெண்களுக்கு தடைபட்ட காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். மனத்தெளிவு உண்டாகும். பணவரத்து இருக்கும். மாணவர்களின் திறமை வெளிப்படும். சக மாணவர்கள் ஆதரவாக இருப்பார்கள். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.

சந்திராஷ்டமம்: 6, 7

அதிர்ஷ்ட நாட்கள்: 1, 10, 19, 28 ஆகிய தேதிகள்

பரிகாரம்: சிவனை வழிபட்டால் பாவம் நீங்கி பிரகாசமான எதிர்காலம் அமையும்.

கன்னி
(உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)

நட்புக்கு முதலிடம் கொடுத்து காரியங்களை  செய்யக் கூடியவராக இருக்கும் கன்னிராசியினரே நீங்கள் வசதிகள் இருந்தாலும் சாதாரணமான தோற்றம்
உடையவராக இருப்பீர்கள்.

கிரகநிலை:
தனஸ்தானத்தில் சனி ராகு, அஷ்டமஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, பாக்கியராசியில் குரு என கிரக நாயகர்கள் அருள்
பாலிக்கின்றனர். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி ராசியாதிபதி புதன், விரையாதிபதி சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி ராசியாதிபதி புதன், 28ம் தியதி சுககளத்திராதிபதி குரு, 30ம் தியதி சுக்கிரன் தொழில் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசியாதிபதி புதன் ராசிக்கு 9ல் சஞ்சாரம் செய்வதும் சுக்கிரன் சேர்க்கை பெறுவதும் பணவரத்தை அதிகரிக்கும். விருப்பமானவர்களை சந்தித்து உரையாடி மகிழ்ச்சி அடைவீர்கள். மனத்துணிவு உண்டாகும்.  எந்த ஒரு காரியத்தையும் துணிவுடன் செய்து அதிக நன்மை அடைவீர்கள். போட்டி பந்தயங்களில் ஈடுபடுவதை தவிர்ப்பது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது. வாடிக்கையாளர்களிடம் கவனமாக பேசுவது  வியாபார விருத்திக்கு உதவும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கோபப்படாமல் மேலதிகாரிகள் சொன்ன வேலையை  செய்து முடிப்பது நல்லது. சக ஊழியர்கள் பேச்சை கேட்டு நடப்பதை தவிர்ப்பது நன்மை தருவதாக இருக்கும். கணவன், மனைவி நெருக்கம் அதிகரிக்கும். ஆனால் வாக்கு வாதங்களை தவிர்ப்பது நல்லது. உறவினர்களுடன்  பேசும்போது நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். பெண்களுக்கு மனதில் இருந்த பயம் நீங்கி துணிவு உண்டாகும். வீண் வாக்குவாதஙக்ளை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் கவனமாக பாடங்களை படிப்பது நன்மை தரும். அடுத்தவர்களுக்கு ஆதரவாக செயல்படும் போது கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 8, 9, 10

அதிர்ஷ்ட நாட்கள்: 5, 14, 23 ஆகிய தேதிகள்

பரிகாரம்: விநாயக பெருமானை அருகம் புல்லால் அர்ச்சனை செய்து வழிபடுவது தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கும். செல்வம் சேரும்.

துலாம்
(சித்திரை 3, 4 பாதம், சுவாதி, விசாகம் 1, 2, 3ம்  பாதம்)

எடுத்த காரியத்தை செய்து முடிக்கும் வரை அயராது பாடுபட்டு கடுமையாக உழைக்கும் துலாராசியினரே அனை வரையும் அனுசரித்து செல்வதில் திறமை உடையவர்.

கிரகநிலை:
ராசியில் சனி ராகு, ஏழாம் ராசியில் சூரியன், புதன், செவ்வாய், ராசியாதிபதி சுக்கிரன், கேது, அஷ்டம ராசியில் குரு என கிரகங்கள் அருளாசி வழங்குகிறார்கள். மே 3ம் தியதி ராசியாதியதி சுக்கிரன், 5ம் தியதி பாக்கிய விரையாதிபதி புதன், லாபாதிபதி சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி ராசியாதிபதி சுக்கிரன் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசிக்கு ஏழாம் இடத்தில் சஞ்சரிக்கும் ராசியாதிபதி சுக்கிரனுடன் புதன், சூரியன் சேர்ந்து இருப்பது எடுத்த காரியம் கைகூடும். விரோதிகளும்
நண்பர்களாவார்கள். மறைமுக எதிர்ப்புகள் விலகும். பண வரத்து திருப்தி தரும், கடன் விவகாரங்களில் எச்சரிக்கை தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் செய் தொழிலில் முன்னேற்றம் காண்பார்கள். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி குறையும். விரிவாக்கம் செய்வது தொடர்பான ஆலோசனைகளில் ஈடுபடுவீர்கள். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க பெறலாம். மேல் அதிகாரிகளால் உத்தியோகஸ்தர்களுக்கு நன்மை உண்டாகும். வாழ்க்கை துணை மூலம் ஆதாயம் கிடைக்க பெறுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் மூலம் தக்க தருணத்தில் உதவிகள் கிடைக்கும்.  பிள்ளைகள் வழியில் எதிர்பார்த்த நன்மைகள் உண்டாகும். அவர்களின் ஆதரவும் கிடைக்கும். பெண்களுக்கு இருந்து வந்த மறைமுக எதிர்ப்புகள் விலகும். எதிரிகளும் நண்பராவார்கள். கொடுக்கல், வாங்கலில்
கவனம் தேவை. மாணவர்களுக்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உங்களுக்கு பின்னால் உங்களை பற்றி புறம் பேசியவர்கள் உங்களிடம் சரண் அடைவார்கள். எதிலும் எச்சரிக்கை தேவை.

சந்திராஷ்டமம்: 11, 12

அதிர்ஷ்ட நாட்கள்: 6, 15 ,24 ஆகிய தேதிகள்

பரிகாரம்: மாரியம்மனை வெள்ளிக் கிழமைகளில் தீபம் ஏற்றி வழிபட எதிர்பார்த்த காரிய வெற்றி உண்டாகும். கடன் பிரச்சனை நீங்கும்.

விருச்சிகம்
(விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை)

அனைவருடன் நல்லமுறையில் பழகக் கூடிய விருச்சிகராசியினரே உங்களுக்கு வரும் முன்கோபத்தை தவிர்ப்பது முன்னேற்றத்துக்கு உதவும்.

கிரகநிலை:
ரண ருண ஸ்தான ராசியில் சூரியன், புதன், ராசியாதிபதி செவ்வாய், சுக்கிரன், கேது, ஏழாம் ராசியில் குரு, விரைய ஸ்தானத்தில் சனி ராகு  என நவ நாயகர்கள் அருள்கின்றனர். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி அஷ்டம லாபதிபதி புதன், சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன் அஷ்டம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.


இந்த மாதம் எதிர்பாராத செலவு உண்டாகும். எதிர்பார்த்த வெற்றி கிடைப்பதில் தாமதம் உண்டாகும். எதிர்பாராத பணவரத்தும் இருக்கும். புதிய நண்பர்கள்
சேர்க்கையும் ஏற்படும். மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். எதிர்ப்புகள் நீங்கும். தொழில் வியாபாரம் சிறிது மந்தமான நிலையில் காணப்பட்டாலும் வருமானம் குறையாத நிலை இருக்கும். போட்டிகள் பற்றிய கவலையை விட்டுவிட்டு தொழில் வியாபாரத்தில் கவனம் செலுத்துவது நல்லது.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வெளியூர் மாற்றங்கள் உண்டாகலாம். சக ஊழியர்களிடம் பேசும்போது கோபப்படாமல் இருப்பது நன்மை தரும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்த மனத்தாங்கல் நீங்கி மகிழ்ச்சியும், சகஜ நிலையும் காணப்படும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் அனுசரித்து செல்வது நல்லது. பிள்ளைகளிடம் பேசும் போது நிதானமாக பேசுவது நல்லது. பெண்கள் மற்றவர்களுக்கு உதவி செய்வதில் ஆர்வம் காட்டுவீர்கள். பண வரத்து தாமதப்படும். கோபத்தை தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் சக மாணவர்களிடம் சகஜமாக பேசி பழகுவது நல்லது.  கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் நேரம் ஒதுக்கி படிப்பது நல்லது.

சந்திராஷ்டமம்:  13, 14

அதிர்ஷ்டமான நாட்கள்: 9, 18, 27 ஆகிய தேதிகள்

பரிகாரம்: அருகிலிருக்கும் முருகனை தரிசித்து தீபம் ஏற்றி வழிபட இழுபறியான காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். வாழ்க்கை வளம் பெறும்.

தனுசு
(மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்)

நிதானமாகவும், செம்மையாகவும் காரியத்தை செய்து வெற்றிபெறும் தனுசு ராசியினரே உங்களை எல்லோரும் நேசிப்பார்கள்.

கிரகநிலை:
பூர்வ ஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, ரண ருண ரோகஸ்தான ராசியில் குரு, லாபஸ்தானத்தில் சனி ராகு  என கிரகங்களின்
அமைப்பு இருக்கிறது. மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி ராசியாதிபதி குரு, 30ம்
தியதி சுக்கிரன் ஏழாம் ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.


இந்த மாதம் ராசிக்கு ஐந்தாம் இடத்தில் சூரியன், சுக்கிரனுடன் சேர்ந்து  சஞ்சாரம் செய்யும் புதன் பணவரத்தை அதிகப்படுத்துவார். எதிர்ப்புகள்  நீங்கி எதிலும் உற்சாகம் உண்டாகும்.  மனமகிழ்ச்சிக்காக பணம் செலவு செய்ய தயங்க மாட்டீர்கள். நண்பர்கள் சேர்க்கையும் அவர்களால் உதவியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணங்கள் சாதகமான பலன்தரும். உத்தியோகத்தில்  இருப்பவர்களுக்கு வேண்டிய உதவிகள் மேல் அதிகாரிகள் மூலம் கிடைக்கும். பொறுப்புகள் கூடும். சிலருக்கு எதிர் பார்த்த பதவி உயர்வும் கிடைக்கக்கூடும். குடும்பத்தில் வாழ்க்கை துணை மூலம் மகிழ்ச்சி உண்டாகும். மாத இறுதியில் உஷ்ணம் சம்பந்தமான நோய்வரக்கூடும். எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் அதை தடுக்கலாம். பிள்ளைகள் மனம் மகிழும் படி நடந்து கொள்வார்கள். வீண் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பெண்களுக்கு தாராளமாக பணம் செலவு செய்து தேவையானவற்றை வாங்குவீர்கள். மனதில் உற்சாகம் பிறக்கும். தேவையான உதவிகளும் கிடைக்கும். மாணவர்களுக்கு பொறுப்புகள்
அதிகரிக்கும். கல்வியில் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும்.

சந்திராஷ்டமம்:  15, 16, 17

அதிர்ஷ்ட நாட்கள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகள்

பரிகாரம்: சிவபுராணம் படித்து வர குரு அருள் கிடைக்கும். மதிப்பும், மரியாதையும் கூடும். செல்வம் சேரும்.

மகரம்
(உத்திராடம் 2, 3, 4 பாதம், திருவோணம், அவிட்டம் 1,2 பாதம்)

எல்லோராலும் பாராட்டப்படும் வகையில் நடந்து கொள்ளும் மகர ராசியினரே  உங்கள் வேலைகளை நீங்கள் சரிவர செய்வீர்கள்.

கிரகநிலை:
சுக ஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, பஞ்சம பூர்வ ராசியில் குரு, தொழில் ஸ்தானத்தில் சனி ராகு  என்றவாறு கிரகங்கள்
வீற்றிருக்கிறார்கள். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன்
ஆறாம் ராசி மிதுன ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசிக்கு நான்காம் இடத்தில் புதன் சஞ்சாரம் தொடங்குவதாலும், சூரியன், சுக்கிரன் சேர்க்கை பெற்று இருப்பதும் வரவை போலவே செலவும்
இருக்கும். வெளியூர்  பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது.  திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும்.  கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும்.  குழந்தைகள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். வாழ்க்கை துணையின் ஆதரவும் கிடைக்கும். உறவினர்கள் வருகையும் அவர்களால் உதவியும் கிடைக்க பெறுவீர்கள். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை. முயற்சிகள்
தாமதப்படும். மாணவர்கள் வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது. விளையாட்டுகளில் கவனம் தேவை.

சந்திராஷ்டமம்: 18, 19

அதிர்ஷ்ட நாட்கள்: 6, 15, 16, 25 ஆகிய தேதிகள்

பரிகாரம்: நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

கும்பம்
(அவிட்டம் 3, 4 பாதம், சதயம், பூரட்டாதி 1, 2, 3  பாதம்)

மனத்துணிவும், எதையும் செய்து முடிக்கும் ஆற்றலும் அதிகம் பெற்ற கும்பராசியினரே

கிரகநிலை:
தைரிய வீர்ய ஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, சுகஸ்தான ராசியில் குரு, பாக்கிய ஸ்தானத்தில் ராசியாதிபதி சனி ராகு என முக்கிய கிரகங்களின் அமர்தல் உள்ளது. மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி பஞ்சம அஷ்டமாதிபதி புதன், சூரியன் மே 15ம் தியதி சுகஸ்தான ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன் பஞ்சம ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இந்த மாதம் ராசிக்கு மூன்றில் புதன், சூரியன், சுக்கிரன் சஞ்சாரம் செய்வதால் வீண்கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில்  முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில் வீண் பிரச்சனைகள் தலைதூக்கும். அவற்றை லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய
விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது நல்லது. குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி
உண்டாகும். பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை.  எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தாமதம் ஏற்படலாம். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும். வீண் அலைச்சலை தவிர்ப்பது நல்லது.

சந்திராஷ்டமம்: 20, 21

அதிர்ஷ்ட நாட்கள்: 6, 15, 16, 25 ஆகிய தேதிகள்

பரிகாரம்: பிரதோஷ காலத்தில் சிவனையும் நந்தியையும் தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சனைகளும் நீங்கும்.  எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி
ஏற்படும்.

மீனம்
(பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி)

தூய உள்ளம் படைத்த மீன ராசியினரே நீங்கள் எதிலும் நியாயமும், நேர்மையும் இருக்க வேண்டும் என்று எதிர் பார்ப்பீர்கள்.

கிரகநிலை:
தன ஸ்தான ராசியில் சூரியன், புதன், செவ்வாய், சுக்கிரன், கேது, தைரிய ராசியில் குரு, அஷ்டம ஸ்தானத்தில் சனி ராகு  என நவ நாயகர்கள் அருள்கின்றனர். மே 3ம் தியதி சுக்கிரன், 5ம் தியதி புதன், சூரியன் மே 15ம் தியதி ரிஷப ராசிக்கும், 25ம் தியதி புதன், 28ம் தியதி குரு, 30ம் தியதி சுக்கிரன் சுகஸ்தான ராசிக்கும் பெயர்ச்சியாகிறார்கள்.


இந்த மாதம் சொன்ன சொல்லை காப்பாற்ற பாடுபட வேண்டி இருக்கும். தன வாக்கு ராசியில் சூரியன், சுக்கிரன், புதன் சஞ்சாரம் இருக்கும் போது திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும்.  வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேல் அதிகாரிகள்  ஆதரவு கிடைக்கும். ஆனால் கவனமாக இருப்பது நல்லது. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. பெண்களுக்கு கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம்
நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.  

சந்திராஷ்டமம்: 22, 23, 24

அதிர்ஷ்ட நாட்கள்: 3, 12, 21, 30 ஆகிய தேதிகள்

பரிகாரம்: குருபகவானை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும்.

மே மாத ஆன்மீகக் குறிப்புகள்


மே மாதம் ஆன்மீகக் குறிப்புகள்

4 - அக்னி நக்ஷத்ரம் ஆரம்பம்
28 - அக்னி நக்ஷத்ரம் முடிவு

விரதாதி தினங்கள்:

சதுர்த்தி - 1, 15
விவாகம் - 6, 12, 13, 15, 16, 20, 22, 27
லாவண்ய கௌரி விரதம், பூஜை - 15
சஷ்டி - 16
கரிநாள்- 21, 30, 31
ஏகாதசி - 5, 21
பிரதோஷம் - 7, 22
பௌர்ணமி பூஜை, வைகாசி விசாகம், புத்த பூர்ணிமா - 24
திருவோண விரதம் - 30
மாத சிவராத்திரி - 8
அமாவாசை - 9
கிருத்திகை விரதம் - 10
கிருதயுகாதி - 12
அக்ஷய திருதியை - 13
துவாபரயுகாதி - 14

ஜெயந்திகள்:
ஸ்ரீபலராம ஜெயந்தி - 12
ஸ்ரீராமனுஜர் ஜெயந்தி - 14
ஶ்ரீஆதிசங்கரர் ஜெயந்தி - 15
ஶ்ரீநரஸிம்மர் ஜெயந்தி - 23

நாயன்மார் குருபூஜை:
4உ - திருநாவுக்கரசர் (அப்பர்)
9உ - சிறுத்தொண்ட நாயனார்
12உ - மங்கையர்கரசியார்
14உ - விரண்மீண்ட நாயனார்
27உ - திருஞானசம்பந்தர் நாயனார், திருநீலக்க நாயனார், திருநீலகண்ட யாழ்ப்பாண நாயனார், முருக நாயனார்

ஆழ்வார் ஆச்சாரியர்கள் திருநக்ஷத்திரங்கள்:
5உ - 32 வது பட்டம்
7உ - பெரிய பெருமாள்
8உ - வடுக நம்பிகள்
11உ - உய்யங்கொண்டார்
12உ - எங்களாழ்வார்
14உ - எம்பெருமானார், கோவில் சோமாஜி ஆண்டார்
21உ - தேவபெருமாள்
23உ - அழகிய சிங்கர்
24உ - நம்மாழ்வார், திருவாய்மொழிப் பிள்ளை 7வது பட்டம்


மத்வாச்சாரியார் புண்ய தீர்த்த தினங்கள்:
5உ - ஸத்திய பிரியர்
12உ - வித்தியாதி ராஜர்
16உ - ராமசந்திரர்

Wednesday, April 24, 2013

மந்திர மாவது நீறு - தொடர் - பாகம் 1

மந்திர மாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தர மாவது நீறு துதிக்கப் படுவது நீறு
தந்திர மாவது நீறு சமயத்தி லுள்ளது நீறு
செந்துவர் வாயுமை பங்கன் திருவால வாயான் திருநீறே.


பொழிப்புரை
சிவந்த பவளம் போன்ற வாயினை உடைய உமைபங்கன் ஆகிய திருவாலவாயில் எழுந்தருளியிருக்கும் சிவபிரானது திருநீறு, மந்திரம் போல நினைப்பவரைக் காப்பது. வானவர் தம் மேனிமேல் பூசிக்கொள்ளப்படுவது. அழகு தருவது. எல்லா நூல்களாலும் புகழப்படுவது. ஆகமங்களில் புகழ்ந்து சொல்லப்படுவது. சிவமயத்தில் நிலைத்துள்ளது.

குறிப்புரை
திருநீறு மந்திரம் போல நினைத்ததைக் கொடுக்கும். நினைத்தவரைக் காக்கும். வானவர் - சிவலோகத்திலுள்ளவர். சிவமானவர். மேலது - திருமேனியில் பூசப்பட்டது. சுந்தரம் - அழகு; சிவப்பொலிவு. துதிக்கப்படுவது என்பதற்கு இத்திருப்பதிகமே சான்று. தந்திரம் - ஆகமம். சிவாகமத்தில் சிறப்பாகச் சொல்லப்படுவது. சமயத்திலுள்ளது - சிவசமயத்தில் அழியாத பொருளாவது பதி, பசு, பாசம் என்னும் முப்பொருள். பாசம் - பசுவின் கண் இருந்து பதியால் நீறாக்கப்பட்ட உண்மையை உணர்த்துவது. உள்ளது - சிவம். `ஓர்த்து உள்ளம் உள்ளது உணரின்` - ( திருக்குறள்) திருநீறே சிவம். துவர் - பவளம். பங்கன் - பாகன். திரு ஆலவாயான் - மதுரைத்தலத்தில் திருவாலவாய்க்கோயிலுள் எழுந்தருளியிருப்பவன். திருவாலவாயான் திருநீறு என்பது ஆறன்தொகையாதல் அறிவார்க்குத் திருநீறே சிவகதி தரும் என்னும் உண்மை இனிது புலப்படும். `கங்காளன் பூசும் கவசத் திருநீற்றை... பூசி மகிழ்வாரே யாமாகில்... சாரும் சிவகதி...` (திருமந்திரம்)