Thursday, May 16, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் :கடகம்


கடகம்: புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்  மற்றும் ஹி, ஹூ, ஹ, ட, டு, டே, டோ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
எதற்கும் கலங்காத மனமும் எந்த சூழ்நிலையிலும் எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத கடக ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் மனத்திற்குண்டான செயல்களை கவனிக்கும் சந்திரனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள்.  வருங்கால முன்னேற்றம் பற்றியே எப்போதும் சிந்தை செய்து கொண்டிருப்பவர்கள். அனைவரின் மீதும் பேரன்பு கொண்டவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு பூர்வபுண்ணிய ஸ்தானம் மற்றும் பாக்கியஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய லாபஸ்தனாத்தில் இருந்து விரையமோக்ஷ ராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 12ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய சுகஸ்தானம், ரணருண ரோகஸ்தானம், ஆயுள்ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் சுகஸ்தான 4ம் ராசியில் சனி, ராகுவும், தொழில்ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.

உங்கள் ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் உள்ளார். கடந்த பெயர்ச்சியில் ஆதாய இடத்தில் இருந்து தாராள பணவரவு, அளப்பரிய நன்மைகளை வழங்கினார். குருவின் இப்போதைய பெயர்ச்சி நடைமுறை வாழ்வில் சிரமங்களை எதிர்கொள்ள வைக்கும். விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே வாழ்வில் வளர்ச்சியைத் தக்கவைக்க முடியும். வெளியூர் பயணத்தை பயனறிந்து மேற்கொள்வது அவசியம். வீடு வாங்க தடை, மனை வாங்க தடை, சுபகாரியம் செய்வதற்கு தடை, நற்செயல்கள் எது செய்வதற்கும் தடையாக கடந்த 1 வருட காலமாக இருந்து வந்தது. இனி அது மாறும். 

வீடு, வாகனத்தில் பெறுகிற வசதி தொடர்ந்து கிடைக்கும். சிலர் கடன் பெற்று புதிய வீடு, வாகனம் வாங்குவர்.  புத்திரர்களின் வளர்ச்சிக்குத் தேவையானவற்றைச் செய்து மகிழ்வீர்கள். படிப்பு, வேலைவாய்ப்பில் அவர்களின் செயல்பாடு சிறப்பாக அமையும். பூர்வ சொத்தில் சுமாரான அளவில் வருமானம் உண்டு. உடல் நிலை திருப்திகரமாக இருக்கும். இதனால் சிரமம் குறைந்து நடைமுறை வாழ்வில் புதிய நம்பிக்கை கொள்வீர்கள். வழக்கு விவகாரங்களில் சமரச தீர்வு கிடைக்க வாய்ப்புண்டு.
கணவன், மனைவி தங்களுக்குள் கருத்துவேறுபாடு காரணமாக வாக்குவாதத்தில் ஈடுபடுவர். தொழில் சார்ந்த வகையில் இலக்கை அடைய கூடுதல் முயற்சி தேவைப்படும். வருமானத்தை விட செலவு அதிகரிக்கும். மன அமைதியை பாதுகாக்க தியானம், தெய்வ வழிபாடு ஆகியவை உதவும். தாயாருடன் இருந்த மனக்கசப்புகள் நீங்கும். தாய் வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள், பிணக்குகள் நீங்கி புதிய விதமான உறவுகள் நீடிக்கும். வேலைவாய்ப்பில் இருந்த சுணக்கம் மாறும். உங்களது வாக்கு வன்மைகூடும். தைரியம் கூடும். படிப்பில் கவனம் தேவை. மிகவும் எச்சரிக்கையுடன் படித்தால் சாதனைகள் புரிய வாய்ப்புண்டு்.
பிள்ளைகளின் வளப்பின் கவனம் தேவை. உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மாத்திரை செலவினங்கள் குறையும். கணவன் மனைவி கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு மறையும். கவனம் தேவை. வீண் வாக்குவாதம் வேண்டாம். நண்பர்கள் மூலம் அனுகூலம் ஏற்படும். தேவையற்ற வீண் விவாதங்களில் ஏடுபட வேண்டாம். யாரைப் பற்றியும் விமர்சனம் செய்ய வேண்டாம். தந்தையார் உடல்நிலை முன்னேற்றம் ஏற்படும். தந்தையுடன் கருத்து பரிமாற்றம் செய்யும் போது கவனம் தேவை. வேலை செய்யும் இடங்களில் மிகவும் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். பண விஷயங்களில் தேர்ந்தெடுத்து முதலீடு செய்யவும்.
தூங்கப் போகும்முன் குலதெய்வத்தை வணங்கி விட்டு படுக்க செல்லவும். தேவையற்ற வீண் குழப்பங்கள், கற்பனைகள் வேண்டாம். தொழிலில் வளர்ச்சி பெற கடின உழைப்பு தேவைப்படும். மிதமான லாபம், சீரான வளர்ச்சி என்ற நிலை தொடரும். தொழிலாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவு கிடைக்கும். நிர்வாகச் சீர்திருத்தமும், நடைமுறைச் செலவில் சிக்கனமும் லாபத்தை அதிகரிக்க வழிவகுக்கும். புதிய முயற்சிகளை இப்போதைக்கு செய்யாமல் இருப்பது நல்லது. வாடிக்கையாளர்களின் விருப்பத்தை நிறைவேற்றும் நோக்கத்தில் செயல்பட்டால் லாபத்தை தக்க வைக்க இயலும். வியாபாரம் தொடர்பான வெளியூர் பயணம் அதிகரிக்கும்.
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் நிர்வாகத்தின் எதிர்பார்ப்பை நிறைவேற்றுவதில் தாமதத்தைச் சந்திப்பர். சிலர் பணியிட மாற்றம், ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். அதிகாரிகளின் குறிப்பறிந்து செயல்படுவதால் பிரச்னையில் இருந்து விடுபடலாம். சகபணியாளர்களால் பணிச்சுமை ஏற்படும். இருந்தாலும் அதற்கேற்ப வருமானம் கூடும். சக பணியாளர்களிடம் தேவையற்ற விவாதத்தில் ஈடுபடுவது கூடாது. சலுகை பற்றிய எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது.
மாணவர்கள் வெளிவட்டாரப் பழக்கத்தைக் குறைப்பது நல்லது. ஆரம்ப, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் ஆசிரியர், பெற்றோரின் வழிகாட்டுதலைப் பின்பற்றுவது அவசியம். சக மாணவர்களின் உதவியால் படிப்பில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகள்  பொது விவகாரங்களில் நேர்மை குணத்துடன் செயல்படுவதால் மட்டுமே அவப்பெயர் வராமல் தவிர்க்கலாம். கலைத்துறையினருக்கு மிகுந்த சந்தோஷங்கள் வந்து சேரும்.
பரிகாரம் : முடிந்தால் திருவண்ணாமலை அல்லது  பர்வதமலையை பௌர்ணமியன்று வலம் வரவும். பௌர்ணமியன்று நிலாவில் 10 நிமிடங்கள் தியானம் செய்வது நல்லது.

No comments: