மின்னஞ்சல் முகவரி:
ramjothidar@gmail.com
கும்பம்: அவிட்டம்
3, 4ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2 ,3ம் பாதங்கள் ஆகிய
நக்ஷத்திரங்கள் பிறந்தவர்கள் மற்றும் கு, கே, கோ, ஸ, ஸி, ஸூ, ஸே, ஸோ, த
ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
வாக்குறுதி என்பது சத்தியத்தியத்திற்கு சமமானது என்பதை தாரக மந்திரமாக
கொண்டு வாழும் கும்ப ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் கர்மபலனின்
மூலமாக வசந்தத்தை வழங்குபவர் என்றழைக்கப்படும் சனியை ஆட்சி நாயகனாக
கொண்டவர்கள். இனிய வார்த்தைகள் இரும்புக்கதவையும் திறந்து விடும் என்று
உணர்ந்த நீங்கள் அன்பும் அணுகுமுறையும் கொண்டவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு தனவாக்கு குடும்ப ஸ்தானம் மற்றும்
லாபஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய சுகஸ்தானத்தில் இருந்து பஞ்சம
பூர்வ புண்ணிய ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 5ம்
இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய ராசி, பாக்கியஸ்தானம்,
லாபஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தைரியவீர்ய ஸ்தானத்தில்
கேதுவும், பாக்கியஸ்தானத்தில் சனி, ராகுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு நான்காம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி
அனுகூல பலன் தருகிற ஐந்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலத்தில் எதிர்கொண்ட
சிரமங்கள் விலகி வளர்ச்சிப்பாதையில் நடைபோடுவீர்கள். ரிஷபத்தில் உள்ள குரு
தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஒன்பதாம் இடமான பிதா,
பாக்யம், பதினொன்றாம் இடமான ஆதாயம், ஒன்றாம் இடமான ராசி ஆகிய இடங்களை
பார்க்கிறார். இதனால் எண்ணத்திலும் செயலிலும் நல்ல மாற்றம் உருவாகும்.
சாதனை நிகழ்த்துகிற எண்ணத்துடன் பணிகளில் ஈடுபடுவீர்கள். தம்பி, தங்கைகள்
உங்களை விட்டு விலகிச் செல்வர்.
வீடு, வாகனத்தில் திருப்திகரமான நிலை உண்டு. ஏற்கனவே வீடு, வாகனம்
இருப்பவர்களுக்கும் புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. புத்திரர்கள்
உங்கள் சொல் கேட்டு நடந்து படிப்பிலும் நல்ல குணத்திலும் முன்னேற்றம்
பெறுவர். பூர்வ சொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். ராசியை குரு
பார்ப்பதால் உடல்நலமும் மனநலமும் சிறப்பாக இருக்கும். சொத்துக்களில்
அபிவிருத்திப்பணி செய்வீர்கள். கடன்களை அடைத்து நிம்மதியடைவீர்கள். கணவன்,
மனைவி பாசத்துடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை உருவாக்குவர். மங்கல
நிகழ்ச்சி திட்டமிட்டபடி சிறப்பாக நிறைவேறும்.
தந்தை வழி உறவினர்கள் சொல்லும் ஆலோசனையைக் கேட்டு நடப்பதில் மிகுந்த
பிரியம் கொள்வீர்கள். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள் நிறைவேறும். சகல
சவுபாக்ய வசதிகளும் பெறுவீர்கள். திருமண வயதினருக்கு நல்ல வரன் கிடைத்து
மங்கல நிகழ்வு இனிதாக நிறைவேறும். எதிர்பார்த்திருந்த தனலாபம், தேக
ஆரோக்கியத்தில் நன்மை, தாயார் தாய் வழி உறவினர்களுடன் இருந்த சுமூக நிலைமை
என அனைத்து நல்ல பலன்களும் அப்படியே தொடரப்போகும் காலமிது. நல்லது.
எந்த இடத்திற்கு சென்றாலம் ஏதாவது ஒரு தடங்கல் வந்து கொண்டே
இருந்ததல்லவா இனி அந்த நிலைமை மாறும். சொன்னால் சொன்ன நேரத்தில் உங்களால்
இனி செல்ல முடியும். கடுஞ்சொற்கள் பேசுவதை சற்றே குறைத்து கொள்ளுங்கள்.
உங்கள் நற்மதிப்பை நீங்களே கெடுத்து கொள்ளாதீர்கள். செலவுகளைப் பற்றி
கவலைப்படும் சமயம் வந்து விட்டது. ஆடம்பர செலவுகள் வேண்டாம்.
இளைசகோதரத்தின் மூலம் லாபம் கிடைக்கும் நேரமிது. சிறப்பான சுகங்களை
அனுபவிக்க போகும் காலமிது.
புத்தம் புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். சந்தாண பாக்கியம் கிட்டும்
காலமிது. தெய்வ யாத்திரை, புனித ஸ்தலங்களுக்கு செல்வது போன்ற நல்ல
விஷயங்கள் நடக்கும் காலகட்டம் இது. முன்னோர்களை வழிபட மறக்க வேண்டாம்.
கோபம் கூடவே கூடாது. ரத்தம் சம்பந்தப்பட்ட வியாதி வருவதற்கு
வாய்ப்பிருக்கிறது. கவனம் தேவை.
வாழ்க்கைத்துணையுடன் உறவு சிறக்கும். நண்பர்கள் மூலம் அனுகூலம்
கிடைக்கும். எதிரிகளை வீழ்த்த வியூகம் அமைப்பீர்கள். வழக்கு
வியாஜ்ஜியங்களில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். தந்தையாருடன் உறவு
பிரகாசிக்கும். பிதுரார்ஜித சொத்துக்கள் உங்களை வந்து அடையும் நேரமிது. பணி
செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை.சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு
அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம்.
எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள்.
தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.
தொழிலதிபர்களுக்கு உற்பத்தியை உயர்த்த அனைத்து வசதிகளும் திருப்திகரமாக
கிடைக்கும். உபரி வருமானம் உண்டு. உபதொழில் துவங்க வாய்ப்பு உருவாகி
நிறைவேறும். வியாபாரிகள் கூடுதல் மூலதனத்துடன் அபிவிருத்தி பணிகளைச்
செய்வர். லாபம் நன்றாக இருக்கும். மற்ற வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து
புதிய வாடிக்கையாளர் மூலம் விற்பனை உயரும். லாப உயர்வு சேமிப்பை
உருவாக்கும். பிற சலுகைகளால் மகிழ்ச்சியான வாழ்வை அனுபவிப்பீர்கள்.
கூடுதல் சொத்து முக்கிய வீட்டு சாதனப் பொருள் வாங்குகிற திட்டம் இனிதாக
நிறைவேறும். ஆடை, ஆபரணச்சேர்க்கை தகுதிக்கேற்ப கிடைக்கும். கர்ப்பிணிகள்
தகுந்த சிகிச்சை, ஓய்வு பின்பற்றுவது அவசியம். சுயதொழில் புரியும் பெண்கள்
உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள பணவரவு பெறுவர்.
மாணவர்கள் குருவின் அனுகிரகத்தைப் பயன்படுத்தினால் மாநில ராங்க்
பெறலாம். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு.
பெற்றோருடன் இருந்த கருத்து வேறுபாடு விலகி அன்பு வளரும். படிப்புக்கான
பணஉதவி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும். பொது விவகாரங்களில் உங்களின்
ஆலோசனை பெரிய அளவில் வரவேற்பை பெறும். எதிரியின் செயல்களால் பாதிப்பு
எதுவும் வராது.
பரிகாரம்: சனிக்கிழமைதோறும் அருகிலிருக்கும் பெருமாள் கோவிலுக்குச் சென்று 9 முறை வலம் வரவும்.
No comments:
Post a Comment