மிதுனம்: மிருகசீரிஷம் 3, 4ம் பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ம் பாதங்கள் மற்றும் கா, கி, கு, கூ, க, ச, சே, கோ, கை, ஹை ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.
நன்றாக சிந்தித்து செயல்பட்டு வேலையை செவ்வனே முடிக்கும் மிதுன ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் ஞானத்தை வாரி வழங்கும் புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். மற்றவர் மனம் நோகாமல் சாமர்த்தியமாக பேசும் ஆற்றல் உடையவர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு ரணருணரோக ஸ்தானம் மற்றும் தொழில்ஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய விரையராசியில் இருந்து ராசிக்கு இடம் பெயர்கிறார். ராசியில் இருந்து உங்களுடைய பூர்புண்ணிய ஸ்தானம், களத்திரஸ்தானம், பாக்கிய ஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் பூர்வ புண்ணிய ஸ்தான 5ம் ராசியில் சனி, ராகுவும், லாபஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
குருபகவான் பெயர்ச்சியாகி உங்கள் ராசியில் இடம் பெற்றுள்ளார். ராசியில் குருபகவான் அமர்வது ஜென்மகுரு என்கிற நிலையாகும். இதனால் மனக்குழப்பமும், செயல் தடுமாற்றமும் அவ்வப்போது தலைதூக்கும். ராசியில் அமர்ந்த குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே ராசிக்கு ஐந்தாம் இடமான பூர்வ புண்ணியம், புத்திரம், ஏழாம் இடமான மனைவி, நட்பு, ஒன்பதாம் இடமான பிதா, சௌபாக்ய வாழ்வு ஆகிய இடங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதியும் ராசிகளின் வழியாக உங்கள் நற்பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் பணத்தேவை அதிகரிக்கும். கையிருப்பு கரைவதோடு கடன் வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகும். வீடு, வாகன வகையில் பராமரிப்புச் செலவு கூடும். வாகன பயணத்தில் மிதவேகத்தைப் பின்பற்றுவது அவசியம். புத்திரர் உங்களின் சிரமத்தை அறிந்து உதவி செய்ய முன்வருவர். அவர்களின் ஒத்துழைப்பு கண்டு பெருமிதம் கொள்வீர்கள். கல்வி, வேலைவாய்ப்பில் முன்னுரிமை காண்பர். பூர்வசொத்தில் கிடைக்கும் வருமானம் முக்கிய தேவைகளை நிறைவேற்ற உதவும். உடல்நலனில் அக்கறை தேவை. அலைச்சல் காரணமாக சோர்வு அடிக்கடி உண்டாகும். சத்தான உணவு, முறையான ஓய்வு அவசியம். மருத்துவச் செலவும் ஏற்பட வாய்ப்புண்டு.
சிலருக்கு சொத்தின் பேரில் கடன் பெறவும், சொத்துக்களை விற்கவும் நிர்ப்பந்தமான சூழ்நிலை உருவாகும். பிறர் பொருளை பாதுகாப்பது, ஜாமின் கொடுப்பது போன்ற விஷயங்களைத் தவிர்ப்பது நல்லது. தொழில் சார்ந்த வகையில் தடைகளை எதிர்த்து போராட நேரிடும். எதிலும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செயல்படுவது நல்லது. சிலருக்கு விரும்பாத வீடு, பணி இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. தடைபட்டிருந்த திருமணம், தடை பட்டிருந்த கல்வி, என தடையாக இருந்த அனைத்து காரியங்களும் தடைகள் விலகி ஒன்றன் பின் ஒன்றாக சிறப்பாக நடக்கும். அனைத்திலும் விரையம், எந்த பரிகாரம் செய்தாலும் எந்த நல்லதும் நடக்கவில்லை என அங்கலாய்ப்பவர்களுக்கும் நல்ல காலம் பிறந்து விட்டது.
கடுஞ்சொற்களை பேசுவதில் வல்லவரான நீங்கள் சற்று அதைக் குறைத்து கொள்ளுங்கள். உங்கள் மதிப்பு உயரும். அவ்வப்போது வீட்டில் உள்ளவர்களையும் நினைத்து பாருங்கள். நண்பர்கள் தேவைதான். தைரியத்தை மற்றவருக்கும் ஊட்டுவீர்கள், ஆனால் உங்கள் அடிமனதில் சின்ன பயம் இருக்கும். இனி அந்த பயம் வேண்டாம். படிப்பு சம்பந்தப்பட்ட விஷயங்களில் மிகவும் கவனம் தேவை. மற்றவருக்கு சொல்லி சொல்லி கொடுப்பது இருக்கட்டும். முதலில் நீங்கள் நன்று படியுங்கள்.
வீடு வாகனம் யோகம் சிறப்பாக அமையும். தாய் தாய்வழி உறவினர்களுடன் இருந்து வந்த கசப்பு நீங்கும். பிள்ளைகள் இல்லாதவர்கள் பாக்கியம் கிட்டும். பிள்ளைகள் உங்கள் மேல் பாசமாக இருப்பர். ஆனாலும் நீங்கள் அவர்கள் மேல் சின்ன சின்ன பயங்களை கொண்டிருக்கீறீர்கள். அவர்கள் மனசாட்சிக்கு பயப்படுகிறவர்கள். உஷ்ணம் சம்பந்தப்பட்ட வியாதிகள் வரலாம். கவனம். வாழ்க்கைத்துணையுடன் உரசல்கள் எழலாம். விட்டு கொடுத்து, அனுசரித்து போங்கள்.
வாகனங்களை கையாளும்போது கவனம் தேவை. வேகம் கூடவே க்ஊடாது. ஒரு இடத்திற்கு கிளம்பும் முன் சீக்கிரம் கிளம்புங்கள். எந்நேரமும் டென்ஷணாகவே இருக்காதீர்கள். தந்தையாருடன் உறவு பிரகாசிக்கும். வேலை செய்யும் இடத்தினில் நல்ல ப்எயர் கிடைக்கும். சிலருக்கு அவார்டுகள் கிடைக்கலாம். எங்கு முதலீடு செய்வது என்பதனை தகுந்த ஆலோசகரிடம் ஆலோசனை பெற்று செய்யுங்கள். நீங்களாகவே எதிலும் முயற்சி செய்து பார்த்தல் கூடாது.
வியாபாரிகள் லாபத்தை தக்கவைத்துக் கொள்ள விடாமுயற்சி தேவைப்படும். அளவான உற்பத்தியில் சீரான லாபம் காண்பர். வெளியூர் பயணத்தை ஆதாய நோக்கில் மட்டும் மேற்கொள்வது நல்லது.தொழிலாளர்களின்ஒத்துழைப்பு கிடைக்கும். தொழிலில் நிதானம், கடின உழைப்பு ஆகியவற்றைப் பின்பற்றுவது அவசியம். உத்தியோகஸ்தர்களுக்கு அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள், பணிகளில் தாமதநிலையைச் சந்திப்பர். நிர்வாகத்தினரின் குறிப்பறிந்து செயல்படுவது அவசியம். இல்லாவிட்டால் மேலதிகாரிகளின் அச்சுறுத்தலுக்கு ஆளாக நேரிடும். எதிலும் கவனமுடன் செயல்படுவதால் நிலைமை சீராகும். சலுகை பெறுவதில் நிதானம் அவசியம்.
குடும்ப பெண்கள் சிக்கனத்தைப் பின்பற்றுவதால் கடன்தொல்லையில் இருந்து தப்பிக்கலாம். கணவரின் அனுமதியின்றி பிறரிடம் கடன் பெறக்கூடாது. புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் அளவான உற்பத்தி, சுமாரான விற்பனை என்ற நிலை அடைவர். மாணவர்கள் படிப்பில் மந்தநிலை நீங்கும். ஆரம்ப, மேல்நிலை பயிலும் மாணவர்கள் பெற்றோர் அறிவுரையை ஏற்பது எதிர்கால நலனுக்கு வழிவகுக்கும்.
அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைத் தக்க வைத்துக் கொள்ள போராட வேண்டிவரும். சமூகப்பணிகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் உண்டாகும். அதிகாரிகளிடம் மோதல் போக்கை கைவிடுவது நல்லது. ஆதரவாளர்களின் ஒத்துழைப்பைப் பெற அதிகப்பணம் செலவழிப்பர்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் சிவன் ஆலயத்திற்கு செல்லுங்கள், முடிந்தவர்கள் பாடல் பெற்ற ஸ்தலங்களுக்கும் செல்லலாம். செல்வங்கள் குவியும்
No comments:
Post a Comment