Thursday, May 16, 2013

2013 குரு பெயர்ச்சிப் பலன்கள் : கன்னி



கன்னி: உத்திரம் 2, 3, 4ம் பாதம், ஹஸ்தம், சித்திரை 1, 2ம் பாதங்கள்  மற்றும் டோ, ப, பா, பி, பூ, ஷ, ட, பே, போ ஆகிய எழுத்துக்களை முதல் எழுத்தாக பெயர் கொண்டவர்கள்.

இனிமையாக பேசி எல்லோர் மனதிலும் இடம் பிடிக்கும் கன்னி ராசி அன்பர்களே. நீங்கள் நவக்கிரகங்களில் வித்தைக்குநாயகனும், நரம்புகளுக்கு உடையவனுமாகிய புதனை ஆட்சி நாயகனாக கொண்டவர்கள். நல்ல செயல்கள் செய்து தன்னை பிறருக்கு உணர்த்துவீர்கள். எந்த விதமான பொறுப்புகளை தனக்கே உரிய பாணியில் செய்து முடிப்பீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு சுகஸ்தானம் மற்றும் களத்திரஸ்தானாதிபதியான குரு பகவான், உங்களுடைய பாக்கியஸ்தனாத்தில் இருந்து தொழில்ஸ்தானராசிக்கு இடம் பெயர்கிறார். உங்கள் ராசிக்கு 10ம் இடத்தில் இருந்து ராசியில் இருந்து உங்களுடைய தனவாக்கு குடும்பஸ்தானம், சுகஸ்தானம், ரணருண ரோகஸ்தானம் ஆகியவற்றைப் பார்க்கிறார். இதே வேளையில் தனவாக்கு குடும்பம் 2ராசியில் சனி, ராகுவும், ஆயுள்ஸ்தானத்தில் கேதுவும் இருக்கிறார்கள்.
உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் இருந்த குருபகவான் பெயர்ச்சியாகி இப்போது பத்தாம் இடத்தில் உள்ளார். கடந்த காலங்களில் அளப்பரிய நற்பலன்களை குருவருளால் பெற்றீருப்பீர்கள். பத்தாம் இடத்தில் அமர்வால் குரு, உங்கள் வாழ்வில் மாற்றங்களை ஏற்படுத்துவார். பத்தில் குரு பதவிக்கு இடர் என்பது ஜோதிட சாஸ்திர மொழி என்றாலும் ஜென்ம ஜாதகத்தில் உள்ள சந்திரனுக்கு பத்தாம் இடத்தில் கோட்சார குரு அமர்வதால் கஜ கேசரி யோக பலனைத்தரும். எனவே, நன்மையும் சிரமமும் கலந்த பலன் வாழ்வில் உண்டாகும்.
தாராள பணப்புழக்கம் இருப்பதால் குறுக்கிடும் சிரமங்களைக் குறைத்துவிடுவீர்கள். தம்பி, தங்கையின் எதிர்பார்ப்புகளை ஓரளவு நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகனத்தில் தேவையான நடைமுறை மாற்றங்களைச் செய்து முடிப்பீர்கள். புத்திரர் வேண்டாத நட்பும், பிடிவாத குணமும் கொண்டு செயல்படுவர். இதமான அணுகுமுறையால் அவர் களை பக்குவப்படுத்தி நல்வழிப்படுத்துவீர்கள்.
ஆன்மிகம் நாட்டம் அதிகரிக்கும். நல்லவர்களின் ஆலோசனையைக் கேட்டுப் பெறுவீர்கள். உடல்நலனில் அக்கறை ஏற்படும். எதிரியால் இருந்து வந்த தொல்லை குறையும். வழக்கு விவகாரங்களில் அனுகூலமான தீர்வு கிடைக்கும். கடன் தொந்தரவை ஓரளவு சரிக்கட்டுவீர்கள். தம்பதியர் ஒற்றுமை உணர்வுடன் நடந்து குடும்பத்தில் மகிழ்ச்சியை நிலைநாட்டுவர். நண்பர்கள் உங்கள் கருத்துக்கு மதிப்பளித்து நடப்பர். ஆடம்பர எண்ணத்துடன் அதிக பயன் தராத பொருள் வாங்குவதை தவிர்ப்பது நல்லது.
தொழிலில் ஏற்படும் குறுக்கீடுகளை மாற்றுத்திட்டத்தின் மூலம் முறியடிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த பயணத்தை அடிக்கடி மேற்கொள்வீர்கள். தொழிலில் உற்பத்தி தரத்தை உயர்த்துவதில் குறுக்கீடுகளைச் சந்திப்பீர்கள். கணவன் - மனைவியிடையே கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்புண்டு. பேச்சிலும் செயலிலும் கவனம் தேவை. தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலை செய்யும் இடத்தினில் மேலதிகாரிளுடன் வாக்குவாதம் ஏற்படலாம். உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்களிடம் மென்மையை கடைபிடியுங்கள். நல்ல பெயர் கிடைக்கும். பணி மாற்றம் கிடைக்கும். புதிய இடத்தில் பணிச்சுமை ஏற்படலாம். புன்முறுவலுடன் ஏற்றுக் கொண்டு பணியினை செவ்வனே செய்யுங்கள்.
லாபகரமான தொழில்களில் முதலீடு செய்யுங்கள். எதிர்காலத்திற்கு சேமித்து வைக்கும் நேரமிது. வீண் ஆடம்பர செலவுகள், தேவையற்ற வீண் பேச்சுகள் ஆகியவற்றை குறையுங்கள். புதிய ஒப்பந்தங்களைப் பெறுவதில் சிரமத்தை எதிர்கொள்வீர்கள். நிர்வாக நடைமுறைச்செலவு அதிகரிக்கும். கடன் பெற்று அபிவிருத்தி பணிகளை மேற்கொள்வது நல்லதல்ல. புதிய தொழில் முயற்சியை இப்போதைக்கு தவிர்ப்பது அவசியம். உத்தியோகஸ்தர்கள் உங்கள் துறையில் பணிபுரிபவர்கள் பணிசார்ந்த புதிய விஷயங்களை புரிந்து கொள்வதில் தயக்கம் கொள்வார். சகபணியாளர்களின் உதவி ஓரளவு கிடைக்கும். நிர்வாக அதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பது மிக அவசியம். திட்டமிட்டு பணியாற்றினால் மட்டுமே நிர்ணயித்த காலவரையறைக்குள் பணியிலக்கை எட்ட முடியும். பணவரவு சீராக இருக்கும். பணிச்சுமையால் வருத்தம் ஏற்பட்டாலும், உழைப்பிற்கேற்ப ஊதியம் கிடைக்கும். எதிர்பார்த்த சலுகையில் சில கிடைக்கும். பணியிடத்தில் பணி தவிர்த்த பிறவிஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது.
சுயதொழில் புரியும் பெண்கள் அளவான மூலதனத்துடன் கடின உழைப்பால் சுமாரான உற்பத்தி, விற்பனை காண்பர். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை அவசியம். மாணவர்கள் கல்வியில் வளர்ச்சி காண்பர். படிப்புக்கான பண வசதி சீராக கிடைக்கும். வெளிவட்டார விஷயங்களில் ஈடுபாடு குறையும். வெளிநாட்டில் பயிலும் மாணவர்கள் அக்கறையுடன் படித்து முன்னேற்றம் காண்பர். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு.
அரசியல்வாதிகள் மற்றும் சமூகப்பணியில் உள்ளவர்களுக்கு  ஆதரவு மனப்பாங்குடன் நடந்த சிலரே உங்களின் எதிரியாக மாறிவிடுவர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருவீர்கள். புத்திரர், உறவினர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிரிகளின் மறைமுக சூழ்ச்சிக்கு தக்க பதிலடி கொடுப்பீர்கள். வழக்கு விவகாரத்தில் ஓரளவே சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய பதவி, பொறுப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு வாய்ப்புகள் வந்து குவியும்.

பரிகாரம் : புதன்கிழமைதோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் கோவிலுக்கு சென்று நெய் விளக்கு ஏற்றி வழிபடவும்.

No comments: