Friday, September 21, 2012

தந்தப் பல்லாக்கு


 

பொதுவில் தந்தத்தால் ஆன பல்லக்கு மிகவும் அபூர்வம். அத்தகைய ஒரு பல்லாக்கு மகாபலிபுரம் அருகில் திருவிடந்தை நித்யகல்யாணப் பெருமாள் கோவில் இருக்கிறது. திருமணத் தடைகள் அகற்றும் பெருமாள் இவர். 
காலவர் என்றொரு முனிவர் இருந்தார். அவருக்கு 360 பெண்கள் இருந்தனர். தினமும் ஒரு பெண் வீதம் அந்த 360 பேரையும் மணந்தமையால் திருவிடந்தை ஆதிவராகப் பெருமாளுக்கு, நித்ய கல்யாணப் பெருமாள் என்று பெயர். இங்குள்ள தந்தப்பல்லாக்கை இப்போது சுவாமி புறப்பாட்டுக்கு பயன்படுவதில்லை. விலை உயர்ந்தது என்பதால் அரும் பொருளாக பாதுகாக்கப்படுகிறது.

1 comment:

காசிசீர், முனைவர், நா.ரா.கி. காளைராசன் said...

360 என்பது geometry அளவாகும்.
பூமி சூரியனைச் சுற்றி வர எடுத்துக் கொள்ளும் தோராயமான அளவாகும்.
60 வருடங்களுக்குப் பெயர் இருப்பதுபோல்,
12 மாதங்களுக்குப் பெயர் இருப்பதுபோல்,
வாரத்தில் 7 நாட்களுக்குப் பெயர் இருப்பது போல்,

வருடம் 360 நாட்களுக்கும் பெயர் உள்ளது. இவை இந்த 360 தேவியரின் பெயராகும்.

எனவே 360 தேவியர்களின் பெயர்களை அறியத் தருமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

மேலும், இத்தகவலால், உலகிலேயே தமிழர்தான் ஒரு புள்ளியைச் சுற்றி 360டிகிரி என்ற கணிதமுறையைக் கையாண்டவர் என்பதையும் நிரூபணம் செய்ய முடியும்.

அடியேன்
கி.காளைராசன்