Monday, July 2, 2012

சுப்ரமணிய புஜங்கம் - பாகம் ஐந்து

பாடல்: ஏழு

மஹாம்போதி தீரே மஹாபாப சோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாய சைலே!
குஹாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம்!!


பொருள்: பெரிய கடலின் கரையில் விளங்குகிறதும், மகா பாபங்களை நசிக்கச் செய்கிறதும், முனிவர்கள் தவம் செய்வதற்கு உரித்தான அருவிநீரும், சுகந்த மூலிகைகளும் நிறைந்ததுமான சுகந்த பர்வதத்தின் குகையினுள் வாசம் செய்பவரும், தன் இயல்பான ஜோதிர்மய தேஜஸினால் ஒளிபரப்புகிறவரும், இவ்வுலகிற் பிறந்த ஜீவராசிகள் அனைத்தின் துன்பங்களைப் போக்குகிறவராகவும் உள்ள குகனை நாம் வணங்கி பேறு பெறுவோம்.


பாடல்: எட்டு

லஸத் ஸ்வர்ணகேஹே ந்ருணாம் காமதோஹே
ஸுமஸ்தோம ஸஞ்சந்ந மாணிக்ய மஞ்சே!
ஸமுத்யத் ஸஹஸ்ரார்க்க துல்ய ப்ரகாசம்
ஸதா பாவயே கார்த்திகேயம் ஸுரேசம்!!


பொருள்: ஜொலிக்கின்ற தங்கமயமான கர்ப்ப க்ருஹத்தில், மனிதர்களுக்கு மிகப் பிரியமான வரங்களைப் பொழிகின்ற தன்மையுள்ள, மணம்  மிகுந்த பலவித மலர்களால் நன்கு அலங்கரிக்கப்ப்ட்ட, மாணிக்க ரத்தினங்கள் இழைக்கப் பெற்ற கட்டிலில், ஆயிரம் உதய சூரியனுக்கு இணையான பிரகாசத்துடன் விளங்குகிறவனும், தேவர்களுக்கும் தெய்வமானருமாகிய கார்த்திகேயனை எப்போதும் தியானம் செய்வோம்.

பாடல்: ஒன்பது

ரணத்தம்ஸகே மஞ்ஜுலே(அ)த்யந்த சோணே
மநோஹரி லாவண்ய பியூஷ பூர்ணே!
மர: ஷட்பதோ மே பவக்லேச தப்தஹ:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே!!


பொருள்:


தொடரும்.....

No comments: