Tuesday, July 10, 2012

சுப்ரமணிய புஜங்கம் - பாகம் ஆறு

பாடல்: ஒன்பது

ரணத்தம்ஸகே மஞ்ஜுலே(அ)த்யந்த சோணே
மநோஹரி லாவண்ய பியூஷ பூர்ணே!
மர: ஷட்பதோ மே பவக்லேச தப்தஹ:
ஸதா மோததாம் ஸ்கந்த தே பாதபத்மே!!


பொருள்: மென்குரல் எழுப்பும் அன்னப்பறவைகள் பொருந்திய்வைகளும் மிகுந்த செந்நிறம் உள்ளவையும், மனதை வசீகரிக்கக் கூடிய அமிர்தத்தால் நிறைந்தவையும், இணையற்ற அழகுள்ளவையுமான உன்னுடைய மென்பலர்ப் பாதங்கள் எனும் செந்தாமரையில், சம்சாரபந்ததினால் தவிக்கின்ற எனது மனம் என்ற வண்டானது எப்போதும் வட்டமிட்ட வண்ணமாய் இருப்பதால் களிப்பை அடைகிறது.


பாடல்: பத்து

ஸுவர்ணாப திவ்யாம்பரைர் பாஸமாநாம்
க்வணத் கிங்கிணீ மேகலா சோபமாநாம்!
லஸத்தேம பட்டேந வித்யோத்தமாநாம்
கடிம் பாவயே ஸ்கந்த தே தீப்யமாநாம்!!


பொருள்: கலியுக வரதனே! பொன் போல் ஒளிரும் தகதகக்கும் வஸ்திரங்களால் மறைக்கப்பட்டதும், இனிய ஒலியெழுப்பும் மன்மணிச் சதங்கைகளால் அலங்கரிக்கப்பட்ட ஒட்டியாணம், அரைஞான் இவற்றால் சோபிக்கிறதாயும், ஜொலிக்கும் பட்டாடையால் அலங்கரிக்கப்பட்டதாயும் உள்ளதால், மிகுந்த சோபையோடு விளங்குகிறதென்றாலும், இவை ஏதும் இல்லாமலே சுயமாகவே மிகுந்த அழகுடன் விளங்கக் கூடிய உனது இடைப் பிரதேசத்தை என் மனதில் எண்ணித் தியானிப்பேனாக.


பாடல்: பதினொன்று

புலிந்தேச கந்யா கநாபோக துங்க-
ஸ்தநாலிங்கநாஸக்த காச்மீர ராகம்!
நமஸ்யாம்யஹம் தாரகாரே தவோரஹ:
ஸ்வபக்தாவநே ஸர்வதா ஸாநுராகம்!!


பொருள்: தாரகனைக் கொன்ற சுப்ரமண்ய ஸ்வாமியே, வேடுவர் குலத்துதித்த வள்ளியின் பெரும் கனதனங்கள் இரண்டையும் தழுவியதால் அவற்றை அலங்கரித்த குங்குமச் சுவடுகளைத் தான் பெற்றதால் சிவப்பு நிறம் அடைந்த்தாயும், அன்றி எப்போதும் தனனை அண்டியவர்களைப் பாதுகாக்கும் விஷயத்தில் தன்னுள் ஏற்படும் ஆசைக் கனவின் கனிவினால் வெளியிலும் சிவந்த்தாயும் உள்ள உன்னுடைய பரந்த மார்பை எண்ணி நான் நமஸ்கரிக்கிறேன்.

பாடல்: பனிரெண்டு

விதௌ க்லுப்த தண்டான் ஸ்வலீலாத்ருதாண்டான்
நிரஸ்தேபசுண்டான் த்விஷத் காலதண்டான்!
ஹதேந்த்ராரி ஷண்டான் ஜகத்ராண சௌண்டான்
ஸதா தே ப்ரசண்டான் ஸ்ரயே பாஹூதண்டான்!!


பொருள்: பிரம்மாவிடம் பிரவணத்தின் பொருளை உணர்த்தும்படி வற்புறுத்தியதும், அண்டங்கள் யாவற்றையும் விளையாட்டாகத் தாங்கியதும், யானையின் துதிக்கையைப் பற்றி அதன் மதத்தை அடக்கியதும், யமனை த்வம்ஸம் செய்ததும், தேவர் தலைவன் இந்திரனுக்கு எதிரியான சூரன், தாரகன், சிங்கமுகன் ஆகிய அசுரர்களைக் கொன்றதும் உலகைக் காக்கும் காரியங்களில் அதிக ஈடுபாடு கொண்டதும், எதிரிகளுக்கு பயத்தை கொடுப்பதுவுமான உனது வலிமைமிக்க பன்னிரு கரங்களையும், ஆறுமுகக் கடவுளே, நான் துணை நாடுவேனாக.


பாடல்: பதிமூன்று

ஸதா: சாரதா ஷண்ம்ருகாங்கா யதி ஸ்யுஹூ:
ஸமுத்யந்த ஏவ ஸ்திதாஸ்சேத் ஸமந்தாத்!
ஸதா பூர்ணபிம்பாஹா: கலங்கைச்ச ஹீநஸ்:
ஸதா தவந்முகாநாம் ப்ருவே ஸ்கந்த ஸாம்யம்!!

பொருள்:

தொடரும்......

No comments: