Sunday, July 1, 2012

பணிவான வேண்டுகோள்

அனைவருக்கும் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸியரின் பணிவான வணக்கங்கள்.

கிட்டத்தட்ட ஒரு வருட கால இடைவெளிக்குப் பின் கடந்த வாரத்திலிருந்து எங்களுடைய ப்ளாக்கில் பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீக குறிப்புகளை அப்டேட் செய்து வருகிறோம். அப்படி அப்டேட் செய்தவுடன் நாங்கள் அதை கூகுள் குழுமங்கள், யாஹூ குழுமங்கள் மற்றும் ஃபேஸ்புக் ஆகியவற்றில் அதனுடைய லிங்க்கைப் போட்டு மின்னஞ்சல் அனுப்பி விடுவோம். 

அனைவருக்கும் இந்த இடத்தினில் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். நாங்கள் ஒன்றும் வேலை வெட்டி இல்லாமல் இந்த சேவையினைச் செய்வதில்லை. நாங்கள் ஏற்கனவே ஐடி துறையில் பணி செய்து வருகிறோம், இது தவிர ஜோதிடம், புரோஹிதம் செய்து வருகிறோம். இந்த வேலைகளோடுதான் தமிழில் தட்டச்சு செய்து அப்டேட் செய்து வருகிறோம். பலருக்கும் இந்த பதிவுகள் உபயோகமாகவும், மிகுந்த பயனளிப்பதாகவும் சொல்லி எங்களுக்கு மின்னஞ்சல் செய்திருக்கிறார்கள். இந்த சமயத்தில் பழையபடி சிலர் மீண்டும் எங்களை மிரட்டுவதும், நக்கல்கள், கிண்டல்கள் செய்வதும், விளம்பரத்திற்கா என கேட்பதும், கோபமாகவும் சொல்ல முடியாத நாக்கூசும் வார்த்தைகளாலும் மின்னஞ்சல்கள் செய்வதுமாக உள்ளனர். அந்த சில நபர்களுக்காக நாங்கள் மீண்டும் பின் வாங்க மாட்டோம். பாண்டிய மன்னனின் அரசவையிலும், பின் அதைச் சார்ந்த பாளையங்களிலும், நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கிராமத்தின் முதல் பட்டாதாரராகவும், கணியர் என்னும் பரம்பரையில் வந்தவர்கள் நாங்கள். இன்று நேற்றல்ல நாங்கள் ஜோதிடம் மற்றும் புரோஹிதம் தொழிலுக்கு வந்து. கிட்டத்தட்ட 12 தலைமுறைகளுக்கும் மேலாக இந்த ஜோதிடம் சார்ந்த தொழிலை சேவையாக செய்து வருகிறோம்.

மீண்டும் நாங்கள் பின் வாங்க மாட்டோம்.  அடுத்த ஆறு மாதத்திற்கான தேவையான பஞ்சாங்கக் குறிப்புகளை தயார் நிலையில் வைத்திருக்கிறேன். எனவே அடுத்த 180 நாட்களுக்கு தவறாமல் பஞ்சாங்கம் அப்டேட் ஆகும். மேலும் சுப்ரமணிய புஜங்கம் தொடர் போன்ற தோத்திரங்களும் அப்டேட் ஆகும். தற்போது நாலாயிர திவ்யப் பிரபந்தம் தொடருக்காக எங்களை தயார் செய்து வருகிறோம். கூடிய விரைவில் அப்டேட் ஆகும்.  இது தவிர கிட்டத்தட்ட 50க்கும் மேற்பட்ட ஜோதிடம் சம்பந்தமான  இது வரை யாருமே தராத பதிவுகளை தயார் செய்து வருகிறேன், அதையும் அப்டேட் செய்து வருவேன்.

அந்த சிலருக்கு ஒரு வேண்டுகோள். தங்களுக்கு எங்களுடைய மின்னஞ்சல்கள் ஏதேனும் தொல்லைகள் கொடுத்தால் தயவுகூர்ந்து மன்னித்து Delete செய்து கொள்ளவும். எங்களால் இந்த சேவையினை நிறுத்த இயலாது. இனிமேலும் இது போன்ற மின்னஞ்சல்கள் எங்களுக்கு வந்தால் நாங்கள் அதை Delete செய்து விடுவோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். இனி இதுபோன்ற விளக்கங்களும் வராது.


இப்போதும் சொல்கிறேன்.

ஜோதிடம் எங்களது தொழிலல்ல...எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

6 comments:

Anonymous said...

ஏன் ஜோதிடரே இந்த வருத்தம்??

பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் said...

சிலர் வருத்தப்பட வைத்து விடுகிறார்கள்.

Erode Nagaraj... said...

கவலையே படாது விட்டுத் தள்ளுங்கள்.

திண்டுக்கல் தனபாலன் said...

உங்களின் பதிவை நீங்கள் தொடருங்கள்...

உங்கள் தளத்திற்கு முதல் வருகை !

திண்டுக்கல் தனபாலன் said...

சின்ன வேண்டுகோள் : Email Subscription Widget வைக்கவும். நிறைய வாசகர்களுக்கு உங்களின் படைப்புக்கள் சென்றடையும் ! மேலும் விவரங்களுக்கு இங்கே (http://www.karpom.com/2012/06/feedburner.html) சென்று பார்க்கவும். நன்றி !

Arun Ambie said...

சில காக்கைகள் கரைவது கண்டு குயில்கள் கானத்தினை நிறுத்தலாகாது. காக்கைகள் எச்சில் கை ஆட்டப்படும் இடங்களுக்கும் பறக்கும், பிதுர் கார்ய படையல்களுக்கும் பறக்கும்.

180 நாட்களுக்குப் பிறகும் தங்கள் நித்ய பஞ்சாங்க சேவையும் தொடர குருவருளும் திருவருளும் வேண்டுகிறேன்.