Friday, June 29, 2012

சுப்பிரமணிய புஜங்கம்: பாகம் நான்கு

பாடல்: ஐந்து:

யதாப்தேஸ் தரங்கா: லயம் யாந்தி துங்காஹா:
ததைவாபதஸ் ஸந்நிதௌ ஸேவதாம் மே!
இதிவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருதஸரீஜே குஹம் தம்!!




பொருள்: ”எப்படிக் கடலில் தோன்றும் மிக உயர்ந்த அலைகளும் சீரவாய் என்று திருச்செந்தூர் கடல் கரையிலே வந்ததும் உருத்தெரியாது அடங்கிப் போய் விடுகின்றனவோ, அது போல் என்னைத் தரிசனம் செய்கிற மாந்தரின் சகலவிதமான ஆபத்துகளும் என் சந்நிதியில் வந்ததும் அடங்கிப் போய் விடுகின்றன” என்று அலைவரிசை களை காட்கிறது போல் இந்த திருச்செந்தூரின் கரையிலே வாசம் செய்யும் குஹனை எப்போதும் எனது இதயத்தில் வைத்துத் தியானிக்கிறேன்.



பாடல்: ஆறு

கிரௌ மந்நிவாஸே நரா யே(அ)திரூடாஹா:
ததா பர்வதே ராஜதே தே(அ)திரூடாஹா:!
இதீவ ப்ருவந் கந்த சைலாதீரூடாஹ:
ஸ தேவோ முதே மே ஸதா ஷண்முகோ(அ)ஸ்து!!

பொருள்: “எந்த மனிதர்கள் நான் வசிக்கும் இந்த சுந்தரமாதனபர்வதம் என்கிற திருச்செந்தூர் மலையில் ஏறியவர்களாகிறோர்களோ, அவர்கள் அப்பொழுதே வெள்ளிமயமான பனிசூழ்ந்த கைலாஸ மலையிலே ஏறியவர்களாகிறார்கள்” என்று சொல்கிறவர் மாதிரி, தூய மலையின் உச்சியில் விளங்கும் இந்த ஆறுமுகப்பெருமான் எனது மகிழ்ச்சியைத் தோற்றுவிக்கட்டும்.

பாடல்: ஏழு

மஹாம்போதி தீரே மஹாபாப சோரே
முநீந்த்ராநுகூலே ஸுகந்தாய சைலே!
குஹாயம் வஸந்தம் ஸ்வபாஸா லஸந்தம்
ஜநார்த்திம் ஹரந்தம் ஸ்ரயாமோ குஹம் தம்!!

பொருள்:

தொடரும்......

No comments: