Friday, June 22, 2012

இன்றைய பஞ்சாங்கம் மற்றும் ஆன்மீகக் குறிப்புகள்

In Tamil - பஞ்சாங்கம் - 22-06-2012






வருஷத்தின் பெயர் : நந்தன வருஷம்
மாதம் :
ஆனி மாஸம் 08ம் தியதி - ஜூன் 22 2012
அயணம் : உத்தராயணம்
ரிது : க்ரீஷ்ம ரிது
கிழமை : வெள்ளிக்கிழமை
திதி :
திருதியை இரவு 10.58 வரை பின் சதுர்த்தி
நக்ஷத்திரம் :
பூசம் மறுநாள் காலை 4.58 வரை பின் ஆயில்யம்
யோகம் :
வியதிபாதம் 52.43
கரணம் :
தைதுலம் 12.23 பின் கரஜி 42.36
சூரிய உதயம் :
சூரிய உதயம் 05.56
சூரிய அஸ்தமனம் :
மாலை மணி 6.30
அஹசு :
நாழிகை 31.34
லக்ன இருப்பு :
மிதுனம் 1.38
இராகு காலம் :
காலை 10.26 முதல் 11.56 வரை
எமகண்டம் :
மாலை 2.56 முதல் 4.26 வரை
சூலம் :
மேற்கு - தென்மேற்கு பரிகாரம்: வெல்லம்

o o கேது
குரு சுக்(வ)
சூர் புதன்
o
இன்றைய கிரஹநிலை
சந்
o செவ்
o ராகு o சனி(வ)


-------------------------------------------------
இன்றைய நாளின் சிறப்பு:- சந்திராஷ்டம நக்ஷத்ரங்கள்: மூலம், பூராடம்: தனிய நாள்.
----------------------------------------
நவக்ரஹ பாதசார விவராதிகள்

க்ருஹம் நக்ஷத்ரம் பாதம்
சூரியன் திருவாதிரை 1
சந்திரன் கடகம் -
செவ்வாய் உத்திரம் 1
புதன் புனர்பூசம் 4
குரு கிருத்திகை 2
சுக்ரன் ரோகினி 4
சனி சித்திரை 1
ராகு அனுஷம் 2
கேது க்ருத்திகை 4


திருவிளக்கு: பாகம் - 02


கேள்வி: எங்கள் வீட்டினில் எனக்கு என் அம்மா கொடுத்த விளக்கு உடைந்து விட்டது. அதை மறுபடியும் பயன்படுத்தலாமா?

பதில்: கூடவே கூடாது. எனினும் சிறிய குறையாக இருந்து சரி செய்யக்கூடிய குறையாக இருந்தால் கண்டிப்பாக பயன்படுத்தலாம். பொதுவில் பின்னம் ஏற்பட்ட விளக்கினை பெரியவர்கள் பயன்படுத்தியதில்லை.

எந்த திசையை நோக்கி விளக்கு ஏற்ற வேண்டும்?
கிழக்கு முகமாக விளக்கு ஏற்றுவது நல்லது. மேலும் மேற்கு, வடக்கு முகமாகவும் ஏற்றலாம். தெற்கு நோக்கி விளக்கு ஏற்றுதல் கூடாது. ஐந்து முகங்கள் கொண்ட விளக்கு ஏற்றும் போது தவறில்லை. அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னும் மாலை சூரிய அஸ்தமனத்திற்கு சற்று முன்னும் விளக்கு ஏற்ற வேண்டும். ந.எண்ணை அல்லது நெய்யை பயன்படுத்தி விளக்கு ஏற்றலாம். பெண்கள் வீட்டில் இல்லாவிட்டால் ஆண்கள் ஏற்றலாம். அணைக்கும் போது வாயால் ஊதி அணைத்தல் கூடாது. விசிறியால் விசிறி அணைக்கலாம். கையால் விசிறியும் அணைக்கலாம். ஏதேனும் புஷ்பம் கொண்டும் சாந்தப்படுத்தலாம்.

கேள்வி: விளக்கு ஏற்றும் போது என்னென்ன மந்திரங்கள் சொல்லலாம்?

பதில்: ஸர்வ மங்கள் மாங்கல்யேஎன்று தொடங்கும் மந்திரம் சொல்லலாம். ஓம் நமசிவாயஎன்ற ஐந்தெழுத்து மந்திரம் சொல்லலாம்.  ஓம் நமோ நாராயணாயஎன்ற எட்டெழுத்து மந்திரம் சொல்லலாம். தனந்தரும் கல்வி தரும்என்று தொடங்கும் அபிராமி அந்தாதி சொல்லலாம். ஒன்றுமே தெரியாவிட்டால் ஓம் சக்தி பராசக்திஎன்று சொல்லியும், உள்ளார்ந்த அன்புடனும் விளக்கு ஏற்றி வழிபடலாம். விளக்கு ஏற்றும் போது சொல்ல வேண்டிய மந்திரம்

ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே சர்வார்த்த ஸாதிகே
சரண்யே திரியம்பகே கௌரி நாராயணி நமோஸ்துதே

கேள்வி: விளக்கு ஏற்றுவதில் ஆண்-பெண் பேதம் இருக்கிறதா?
பதில்: விளக்கு ஏற்றுவது கண்டிப்பாக பெண்கள் வீட்டில் இருந்தால் பெண்கள்தான் ஏற்ற வேண்டும். இரவு தூங்க செல்லும் முன் விளக்கை குளிரூட்டுவதற்கு கொஞ்சம் பாலை நிவேதனம் செய்த பின் அணைக்கலாம். விளக்கை வாயால் ஊதி அனைத்தல் கூடவே கூடாது. விசிறியின் மூலமாகவோ அல்லது ஏதேனும் பேப்பர் அட்டையினைக் கொண்டோ அனைக்கலாம். பெண்கள் சில நாட்களில் வீட்டில் இல்லாத சமயங்களில் ஆண்கள் இந்த வேலைகளை செய்யலாம்.



தொடரும்.....

No comments: