Monday, June 25, 2012

சுப்பிரமணிய புஜங்கம்: பாகம் ஒன்று

ஸ்ரீ சுப்பிரமணிய புஜங்கம் என்ற நூல் ஸ்ரீஆதிசங்கரரால் வடமொழியிலாக்கப்பட்டது. இது முப்பத்தியிரண்டு பாடல்களால் ஆனது. முடிவில் முப்பத்தி மூன்றாவது பாடலாக நூற்பயன்(பலஸ்ருதி) கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தோத்திரத்தினால் வணங்கப்படுபவர் திருச்செந்திலதிபனே.




நூல் தோன்றிய வரலாறு:
ஸ்ரீசங்கரர் அத்வைதக் கொள்கையை நாடெங்கிலும் பரப்பியவர். அதற்காக நாடெங்கிலும் விஜயம் செய்து வருகையில் வடக்கே அபிநவகுப்தர் என்ற ஒரு வேதவேதாந்த வித்வானுடன் தர்க்கம் செய்ய வேண்டி வந்தது. ஸ்ரீசங்கரரின் இளமையிலேயே அமைந்த வேத விஷய ஞானங்களைக் கண்டு, அபிநவகுப்தர் பொறாமை கொண்டார். அதனால் அவர் ஸ்ரீசங்க்ரர் மீது ஏவல் வைத்து தண்டித்தார். பரமேஸ்வரனின் அவதாரமாகவே இருந்த போதிலும், ஸ்ரீசங்கரர் மனித அவதாரத்திற்கேற்ப, ஏவலுக்கு உட்பட்டு, தேகம் வருந்தி, காசநோயால் பீடிக்கப்பட்டு அல்லலுற்றார். இப்படி உடல் நலிவுற்ற காலையில், திருகோகர்ணம் என்ற தலத்தில் தங்கியிருந்த போது, அவருடைய கனவில் ஸ்ரீபரமேஸ்வரன் வெள்ளை விடை மீது காட்சியளித்தார். “சூரபத்மன் முதலிய அசுரர்களை வதம் செய்தபின், அந்த உக்கிரம் தணிய ஜெயந்திபுரத்தில் என் குமாரன் ஷண்முகன் விளங்கி வருகிறான். அவனை தரிசித்தால் உன் பிணி நீங்கும்” என்று உரைத்து, ஆசாரியர் கையில் திருநீறும் வழங்கினார். தூக்கத்திலிருந்து விழித்த ஸ்ரீசங்கரர் தன் கையில் திருநீறு இருப்பதைக் கண்டு அதைத் தன் சிரத்திலும் நெற்றியிலும் அணிந்து கொண்டார். உடனே தன் சித்டியினாலே ஜெயந்திபுரம் அடைந்து ஸ்ரீ ஷண்முகப் பெருமானை தரிசித்தார். அந்தக் கணமே தன் உடல் சுகமடையத் தொடங்குவதை உணர்ந்தார். அச்சமயம் ஸ்ரீஷண்முக நாதனின் கமல பாதங்களை ஒரு நெடிய பாம்பு பூஜை செய்து கொண்டிருப்பதையும் கண்டார். நாகபாம்புக்கு வடமொழியில் “புஜங்கம்” என்று பெயர். நெளிந்து வளைந்து பயமின்றிச் செல்லும் நாகப்பாம்பின் கம்பீரமான நடையையே தன் மனதில் நிறுத்தி சுப்பிரமணிய புஜங்கம் எனற பாடல்களைப் பாடினார். புஜங்க நடைக்கு ஒப்பாகத் தமிழிலே ‘விருத்தம்’ என்ற நடையைச் சொல்லலாம்.

இனி சுப்பிரமணிய புஜங்கத்திற்குள் செல்வோம்:

ஸதா பாலரூபா(அ)பி விக்நாத்ரி ஹந்த்ரி
மஹாதந்தி வக்த்ர(அ)பி பஞ்சாஸ்ய மாந்யா!
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசா(அ)பிதா மே
விதத்தாம்  ச்ரியம் காபி கல்யாண மூர்த்தி:!!

பொருள்:

தொடரும்.....

No comments: