Wednesday, June 27, 2012

ஐந்தாம் வீடு - பாகம் நான்கு



இனி லக்னமும் ஐந்தாம் வீட்டோனும் பார்ப்போமா?

மேஷ லக்னத்திற்கு 5ம் அதிபதி சூரியன் பலம் பெற்றால் பிதுரார்ஜிதம் நிலைக்கும். பிதுர் வழி சொத்துக்கள் கிடைக்கும்.

ரிஷபத்திற்கு 5ம் பாவாதிபதி பலம் பெற்றால் நாலாவித வருமானம் கிடைக்கும். பெரிய ‘தொழிலதிபர்’ ஆக முடியும்.

மிதுனத்திற்கு பஞ்சமாதிபதி சுபபலத்தில் இருந்தால் கை நிறைய சம்பாதிக்கும் யோகம் கிடைக்கும். சுப செலவுகள் செய்யும் பாக்கியம் கிடைக்கும்.

கடகத்திற்கு யோககாரகனான செவ்வாய் பலம் அடைந்தால் பொறியியல், விஞ்ஞானம் மற்றும் பூமி சம்பந்தப்பட்ட இனங்களில் அந்தஸ்தும் யோகமும் கிடைக்கும்.

சிம்ம லக்னத்திற்கு பூர்வபுண்ணிய ஸ்தானதிபதி குரு ஆவார். சொந்த வீடு வாசத்தால் நற்பலன்கள் ஏற்படும். திடீர்ப் பொருள் தன வரமும் ஏற்படும்.

கன்னி லக்னத்திற்கு உச்சமானாலும் ஆட்சி பெற்றாலும் இரண்டுமே நல்லவைதான். 6ல் ஆட்சியானாலும் சொந்த வீடு சிலாக்கியமில்லாமல் போகலாம்.

துலாமிற்கு பஞ்சாமிதிபதி சனி பலம் பெற்றால் ஏராளமாக பல வழிகளில் பொருளும் , பதவியும், புகழும் உண்டாகும்.

விருச்சிகத்திற்கு 2,5க்குரிய குரு பலம் பெற்றால் நாடாளும் தகுதியும், புகழ் பாக்கியங்களும் கிட்டும்.

தனுசு லக்னத்திற்கு 5ஆம் அதிபதி செவ்வாய் பலம் வாய்ந்து இருந்தால் பூமி, நிலம், வீடு, வாகனம் போன்றவைகளில் லாபமும் நற்பலனும் உண்டாகும்.

மகர லக்னத்திற்கு ஐந்தாம் பாவாதிபதி சுக்ரன். இவர் பலம் பெற்றால் குபேர சம்பத்து கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும். இதே சுக்ரன் பத்தாமதிபதியும் ஆவதால் யோகமான இடத்தில் அமர்ந்தால் புதையல் கிடைக்கும்.

கும்ப லக்னத்திற்கு பஞ்சமாதிபதி புதன். இவர் பலம் பெற்றால் வித்தைகள் மூலம் புகழ் கிடைக்கும். அஷ்டமாதிபதியும் இவரே ஆவதால் சில சங்கடங்கள் ஏறபட்டு விலகும்.

மீன லக்னத்திற்கு 5ம் வீட்டு அதிபதி சந்திரன். இவர் பலம் ஏற்பட்டால் கலை கவிதை கற்பனையால் புகழ் கிடைக்கும். கடல் கடந்து சென்று பொருள் குவிக்க முடியும்.

அடுத்தது பரிவர்த்தனை யோகம் பார்க்கலாமா?

தொடரும்....



No comments: