Wednesday, June 27, 2012

சுப்ரமணிய புஜங்கம் - பாகம் இரண்டு

பாடல் ஒன்று:ஸ்ரீகணேசர் வணக்கம்

ஸதா பாலரூபா(அ)பி விக்நாத்ரி ஹந்த்ரி
மஹாதந்தி வக்த்ர(அ)பி பஞ்சாஸ்ய மாந்யா!
விதீந்த்ராதி ம்ருக்யா கணேசா(அ)பிதா மே
விதத்தாம் ஸ்ரீயம் காபி கல்யாண மூர்த்தி:!!


பொருள்: எப்போதும் குழந்தை வடிவினனாகவே இருந்தாலும் மலைபோன்ற தடைகளையும் பொடி செய்யும் சக்தியுள்ளவரும் யானை முகமுடையவரும் சிம்மங்களாலும்(அல்லது ஸ்த்யோஜாதம், வாமதேவம், அகோரம், தத்புருஷம், ஈசானம் என்ற ஐந்து முகங்களுடைய ஸ்ரீபரமேஸ்வரனாலும்) பூஜிக்கத் தகுந்தவரும், பிரம்மா, இந்திரன் முதலிய தேவர்களாலும் தங்கள் மனோரதத்தை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு தேடத் தகுந்தவரும், கணேசன் என்ற பெயருள்ளவரும், அளவற்ற மகிமையும், மங்களகரமான சரீரம் உடையவருமான பரம்புருஷன் எனக்கு ஐஸ்வர்யம் கொடுக்கட்டும்.



பாடல் - 02: ஸ்ரீசங்கரரின் அடக்கம் - சப்தநாடி ஒடுக்கம்


ந ஜாநாமி சப்தம் ந ஜாநாமி சார்த்தம்
ந ஜாநாமி பத்யம் ந ஜாநாமி கத்யம்!
சிதேகா ஷாடாஸ்யா ஹ்ருதித்யோததே மே
முகாந் நிஸ்ஸரந்தே கிரஸ்யாமி சித்ரம்!!


பொருள்: நான் சப்தத்தையோ அவற்றின் பொருளையோ அறிந்தவனல்ல. பல் விதமான் சொற்கட்டுகளுடன் அமைந்த தோத்திரங்களையோ நியமங்களையோ அனுஷ்டானங்களையோ அறிந்தவனல்ல. ஆயினும் என்னுடைய மனத்தில் ஒரு ஒளியானது ஆறுமுகவடிவேலனோடு கூடினதாய்ப் பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. இந்த ஒரே காரணத்தால் எனது வாயினின்றும் கூட ஆச்சர்யப்படதக்கதாய் முருக்ப்பெருமானின் அருளையும், புகழையும் பரப்புகின்ற வார்த்தைக் கோர்வைகள் வெளிவந்து ஒளிர்கின்றன.

பாடல் - 03: நான்மறைகளான மயில்

மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!


தொடரும்.....

No comments: