Thursday, June 28, 2012

சுப்பிரமணிய புஜங்கம்: பாகம் மூன்று

பாடல் - 03: நான்மறைகளான மயில்



மயூராதிரூடம் மஹாவாக்ய கூடம்
மநோஹரி தேஹம் மஹச்சித்த கேஹம்!
மஹீதேவ தேவம் மஹாவேத பாவம்
மஹாதேவ பாலம் பஜே லோக பாலம்!!



பொருள்: ரிக், யஜூர், சாமம், அதர்வணம் என்ற நான்கு வேதங்களும் ஒன்று சேர்ந்து உருவெடுத்ததான மயிலின் மீது ஏறிக் கொண்டிருப்பவரும், அத்வைத நான்கு மஹாவாக்கியங்களுக்கும் பொருளாகவும், தன்னை நாடி வருகிறவர்களின் மனதை ஈர்க்கும் அழகு வாய்ந்த திருமேனியை உடையவரும், சிறந்த தவயோகத்தினாலே ஞானம் அடைந்தவர்களின் மனத்தில் வாசம் செய்பவராகவும், மஹான்களின் பூஜைக்குகந்த பரமேஸ்வரனுக்கும் மேலானவரும், நான்கு வேதங்களின் கருப்பொருளானவரும் சகல உலகங்களையும் பரிபாலிக்கும் சக்தியுள்ளவரும் ஸ்ரீமஹாதேவனின் புத்திரராகவும் உள்ள சுப்ரமணியரை பூஜிக்கின்றேன். அவரைப் போற்றுகின்றேன்.







பாடல்: 04: செந்தூர் சந்நிதியில் பந்துக்களை விடுபட்டிருப்பது
யதா ஸந்நிதானம் கதா மாநவா மே
பவாம் போதி பாரம் கதாஸ் தே ததைவ!
இதி வ்யஞ்ஜயந் ஸிந்துதீரே ய் ஆஸ்தே
தமீடே பவித்ரம் பராசக்தி புத்ரம்!!


பொருள்: ”எப்போது மாந்தர், யாம் நிலையாக வாசம் செய்யும் கடல் அலைகள் ஓம் என்ற சப்தத்துடன் மோதி அடங்குகின்ற ஜெயந்தீபுரம் என்னும் இந்த திருச்செந்தூர் சந்நிதியில் வந்து அடைகின்றனரோ அப்போழுதே அவர்கள் ஸம்ஸாரபந்தம் எனும் அலைகள் மோதுகின்ற பவக்கடலைக் கடந்தவர்களாக ஆகிறார்கள்” என்று தெரிவித்துக் கொண்டு விளங்கும் பரிசுத்தமானவரும், பராசக்தியின் புத்திரருமான இந்த சுப்ரமணியரை துதிக்கிறேன்.


பாடல்: ஐந்து:

யதாப்தேஸ் தரங்கா: லயம் யாந்தி துங்காஹா:
ததைவாபதஸ் ஸந்நிதௌ ஸேவதாம் மே!
இதிவோர்மி பங்க்தீர் ந்ருணாம் தர்சயந்தம்
ஸதா பாவயே ஹ்ருதஸரீஜே குஹம் தம்!!


பொருள்:

தொடரும்.....

சுப்ரமணிய புஜங்கம் - பாகம் ஒன்று
சுப்ரமணிய புஜங்கம் - பாகம் இரண்டு

No comments: