Monday, June 25, 2012

ஐந்தாம் பாவம்: பாகம் 02

அடுத்து குலதெய்வம்:

நம் குடும்பத்திற்கும் நமக்கும் குலதெய்வம் அல்லது இஷ்டதெய்வம் என்று ஒன்று உண்டு. எல்லாத் தெய்வங்களும் ஒன்றுதான் என்றாலும்,

எந்த ரூபத்தில் எந்தத் தெய்வத்தை ஆராதித்தால், குறிப்ப்பிட்டவருக்கு நன்மை பயக்கும் என்பதை அறிய இந்த 5-ம் வீடு பயன்படும். இந்த

வீட்டுக்கு அதிபதி, இந்த வீட்டினில் இருப்பவர் மற்றும் இந்த வீட்டினைப் பார்ப்பவர் ஆகிய மூவரில் பலம் வாய்ந்தவருக்கு யார்

அதிதேவதையோ, அவரே அந்த ஜாதகருக்கு இஷ்ட தெய்வமாக முடியும்.

ஒவ்வொரு கிரகத்திற்கும் அதிதேவதை:

சூரியன் - ருத்ரன்
சந்திரன்: துர்க்கை
செவ்வாய்: முருகன் - ஆஞ்சநேயர்
புதன்: திருமால்
குரு: இந்திரன்
சுக்ரன்: சதிதேவி
சனி: பிரம்மன்
ராகு: சர்ப்பேஸ்வரன்
கேது: விக்னேஸ்வரன்
மேற்சொன்னவை ஒரு சில நூல்களிலிருந்து பெறப்பட்டது.

இன்னும் சில விவரங்களை மற்றொரு நூலிலிருந்து தருகிறேன்.
சூரியன் - அக்னி
சந்திரன்: ஈஸ்வரன்
செவ்வாய்: பூம்யை
புதன்: புருஷோத்தமன்
குரு: பிரம்மன்
சுக்ரன்: இந்திரன்
சனி: யமன்
ராகு: காலன்
கேது: பிரம்மன் - சித்ரகுப்தன்

இதிலுள்ள இரண்டு வகைகளில் எதையும் ஏற்றுக் கொள்ளலாம். இஷ்டதெய்வம் என்று ஒன்றை நாம் ஏற்றுக் கொண்டு அந்த தெய்வத்தை
திடமான சங்கல்பத்தோடு உறுதியாக பின்பற்றி முறையாக ஆராதித்தால் அந்த தெய்வத்தின் முழுமையான அருளைப் பெற்று வாழ்வாங்கு வாழமுடியும்.

ஐந்தாம் பாவத்தைப் பார்த்து புத்திர பாக்கியத்தை அறியலாம் என்று சொன்னேன். தந்தையின் தந்தையைப் பற்றி கூட சொல்லலாம்.

ஏனென்றால் 9ம் வீட்டிற்கு 9ம் வீடு அல்லவா இது!
 மிக முக்கியமான வீடு என்றும் கூட சொல்லலாம். இந்த ஐந்தாம் வீட்டிற்கு ‘விதி வீடு’ என்றும் ‘பூர்வ புண்ணிய ஸ்தானம்’ என்றும் சொல்லலாம். ஆங்கிலத்தில் ‘Place of  Destiny' என்றும் சொல்லலாம். இந்த பாவத்தின் மூலம் நாம்  செய்துள்ள பூர்வ புண்ணியம் பற்றியும், ஊழ்வினை பற்றியும் அறிய முடியும். ஷேத்ராடணம் என்னும் திருக்கோவில் யாத்திரை செல்வது பற்றியும் அறியலாம். ஒருவர் உலகப் புகழ் பெறுவதற்கும் இந்த பாவம் பலம் பெற வேண்டும். ஞாபகசக்தி, பேரறிவு, மந்திர சித்தி, மந்திரி பதவி, புனிதப் பணிகள், மனிதாபிமானம், நன்னடத்தை, நல்லிதயம், கலைஞானம், பொதுக் கல்வி, பிதுரார்ஜிதம் ஆகியவைகளையும் கூட இந்த வீட்டின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.



ஐந்தாம் வீட்டில் கிரகங்கள்: பொதுப்பலன்

இனி ஐந்தாம் வீட்டில் இருக்கிற கிரகங்களால் என்ன செய்ய முடியும் என்கிற பொதுப் பலன்களைச் சுருக்கமாக பார்ப்போம்.

சூரியன் 5ல் இருந்தால்: புத்திரதோஷம் ஏற்படும். திரவிய லாபம், மலைப் பிரதேசம் பயணம். வயிற்று உபாதை ஏற்படலாம்.

சந்திரன் 5ல் இருந்தால்: நலங்களைப் பொழிவார். உயர்நிலைக்கு கொண்டு வருவார். அறிவாற்றலை அளிப்பார்.

செவ்வாய்: இவர் 5ல் ஆட்சியாகவோ, உச்சமாகவோ இருந்தால் புத்திரதோஷம் இருக்காது. இவர் லக்னாதிபதியாகி 5ல் இருந்தாலும் தோஷம் உண்டாகாது. மற்ற நிலையில் உள்ள இவர், இந்த இடத்திற்கு ஊறு விளைவிப்பார். பகைவரால் தொல்லை, வயிற்று வலி உண்டாகும்.

புதன்: 5ல் பலமாக இருந்தால் அமைச்சர் ஆவார். உயர்நிலைக்கு உத்திரவாதம். மாபெரும் கவிஞராவார். மதிப்பு உயரும். மந்திரசித்தி ஏற்படும்.

குரு: அறிவு, ஆற்றல், பதவி எல்லாம் ஏற்படும். புத்திர தோஷம் ஏற்படலாம். சுப சேர்க்கை ஏற்பட்டால் சுபபலம் ஏற்படும்.

சுக்ரன்: பணம் சேரும்

தொடரும்....


No comments: