கணித்தமிழ் வளர்ச்சியின் முன்னோடியும், சி.எஸ்.சி, சாப்டுவியூ நிறுவனத்தின் நிறுவுநரும், கணித்தமிழ்ச்சங்கத்தை
நிறுவிப் பணிபுரிந்தவரும், பலநூல்களின் ஆசிரியருமான திரு.மா.ஆண்டோபீட்டர்
அவர்கள் இன்று(12.07.2012) அதிகாலை 1.30 மணியளவில் மாரடைப்பால் சென்னையில்
இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த வருத்தத்துடன்
தெரிவித்துக்கொள்கின்றேன். தந்தைபெரியார் விருது உள்ளிட்ட பல விருதுகளைப்
பெற்றவர். உத்தமம் அமைப்பில் இணைந்து பணிபுரிந்தவர்.
ஆண்டோ பீட்டர் அவர்களை இழந்து வருந்தும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் அவர்தம் மாணவர்களுக்கும் நிறுவனத்தாருக்கும் என் ஆழ்ந்த இரங்கல்.
மா.ஆண்டோபீட்டர் வாழ்க்கைக்குறிப்பு
தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரியில் 26.04.1967 இல் பிறந்தவர். இருபதுக்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர். கணினி,இணையம்,அச்சத்துறை சார்ந்த பல்வேறு பொறுப்புகளை வகித்தவர். மென்பொருள் தயாரிப்பு, இணையப்பக்கம் வடிவமைப்பில் ஈடுபட்டவர். இவரின் மறைவு தமிழ் இணையத்துறைக்குப் பேரிழப்பு.

மூலம்: http://muelangovan.blogspot.in/
ஆண்டோ பீட்டரின் ப்ளாக்: http://www.antopeter.blogspot.in/
நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த ஆண்டோ -
நீவிர் வாழ்ந்தது சில ஆண்டோ
படைத்தீர் பல சாதனைகளை ஆண்டோ
உம்மைத் தவிர எங்களுக்கு வேறுண்டோ
நெஞ்சை நிமிர்த்தி வாழ்ந்த ஆண்டோ -
நீவிர் வாழ்ந்தது சில ஆண்டோ
படைத்தீர் பல சாதனைகளை ஆண்டோ
உம்மைத் தவிர எங்களுக்கு வேறுண்டோ
No comments:
Post a Comment