ஐயாறப்பரின் திருக்காட்சி!
அப்பர் அருளிய திருவையாறு தலம் குறித்த தேவாரப் பாடல் இது.

சுவாமிகள் கயிலை யாத்திரையின் போது சிவனருளால்,
பனிசூழ்ந்த மலையில் ஒரு பொய்கையில் மூழ்கி, திருவையாற்றில் குளத்தில்
தோன்றி எழுந்து வந்து கரை ஏறினார். அதன்மூலம் பெருமானின் திருவருள்
பெருமையை உணர்ந்து, கண்களில் நீர் குளம்போல் பெருக, எல்லாம் சிவ மயமாய்க்
காட்சி பெற்றார். அக்காட்சியைக் கண்ணாலும் முகந்து, வணங்கிப் பாடியது இத்
திருப்பதிகம்.
""கங்கையைச் சடையுள் வைத்தார் கதிர்ப்பொறி யரவும் வைத்தார்
திங்களைத் திகழ வைத்தார் திசைதிசை தொழவும் வைத்தார்
மங்கையைப் பாகம் வைத்தார் மான்மறி மழுவும் வைத்தார்
அங்கையு ளனலும் வைத்தார் ஐயனை யாற னாரே'' -
நம் தலைவனார் ஆகிய ஐயாறப்பர், தம் சடையில் கங்கையையும், ஒளிவீசும் புள்ளிகள் கொண்ட பாம்பினையும் பிறையையும் வைத்துக்கொண்டார். தம்மை எல்லாத் திசையிலும் உள்ளவர்களும் தொழும் வகையில் அமைத்துக் கொண்டார்.
உமையொரு பாகனாய், பார்வதி தேவியைத் தம் உடலில் ஒரு பாகத்தில் வைத்துக் கொண்டார். மான் குட்டியையும், மழு எனும் படைக்கலனையும், உள்ளங்கையில் தீச்சட்டியையும் வைத்துக் கொண்டார் ஐயாறப்பனார் என்று அப்பர் சிவபெருமானின் திருக்காட்சியைக் கண்ணுற்றவாறு பாடுகிறார்.

No comments:
Post a Comment