Friday, August 26, 2016

ஒரு தேவ ப்ரஸ்ணம்.

இன்று காலை ஒரு தேவ ப்ரஸ்ணம்.
வந்திருந்த லக்னம்: தனுசு.
உபய லக்னம். ப்ரம்மா அம்சமுள்ளது.
லக்னாதிபதி குரு பத்தாமிடத்தில் இருக்கிறார்.
தைரிய ஸ்தானத்தில் கேது - அஷ்டமாதிபதி சந்திரன் ரண ருண ஸ்தானம் - பாக்கியஸ்தானத்தில் சூரியன், புதன், சுக்கிரன், ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சனி இருக்கிறார்கள். மாந்தி பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் இருக்கிறார்.
நெருப்பு லக்னம் - எனவே பார்க்க வேண்டிய ப்ரஸ்ணம் - அப்பன் சிவனுக்கு. லக்னத்திற்கு பாக்கிய ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சூரியன் ஆட்சியாக இருக்கிறார். சிவன் அம்சமுள்ள சூரியன் ஆட்சியாக இருப்பது இந்த கோவிலுக்கு சிறப்பு.
குறிப்பு: நெருப்பு - அக்னி தத்துவம் - சிவன்
தனஸ்தானம் - சுகஸ்தானம் - ரண ருண ரோகஸ்தானம் ஆகியவற்றை குரு பார்க்கிறார். தனஸ்தானத்தையும் சுகஸ்தானத்தையும் குரு பார்ப்பதன் மூலம் கோவிலுக்கு நிறைய சொத்து இருப்பதை காட்டுகிறது. அதே வேளையில் தனஸ்தானத்தை சனி பார்ப்பதால் சொத்துக்கள் வேறு ஒருவரின் கையில் இருப்பதைக் காட்டுகிறது.
கோவிலினுடைய சாந்நித்யம் லக்னாதிபதி வலுவுடன் இருப்பதால் நன்றாக இருப்பதைக் காட்டுகிறது. அதே வேளையில் ரண ருண ரோகாதிபதி சுக்கிரன் நீசமாக இருப்பதால் ஸ்வாமினுடைய மேனி பழுதடைந்துள்ளதைக் காட்டுகிறது.
இது போல் தொடந்தது....

No comments: