Saturday, August 27, 2016

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.

கேள்வி ஒரு அம்மன் கோவில் பற்றியது.
வந்த லக்னம்: மீனம்
உபய லக்னம் - பெண் லக்னம்.



லக்னாதிபதியும் தொழில் ஸ்தானாதிபதியுமான குரு சம சப்தமமாக லக்னத்தைப் பார்க்கிறார். கோவில் நன்றாக இருக்கிறது. தேவதை சாந்நித்யம் நன்றாக உள்ளது. கோவிலுக்கு பூஜை நன்றாக நடக்கிறது. ஆனால் லக்னாதிபதி பாதகஸ்தானத்தில் இருப்பதால் இப்போதிருக்கும் நிர்வாகம் சரியில்லை. பஞ்சமாதிபதி சந்திரன் உச்சம். பாக்கியாதிபதி செவ்வாய் ஆட்சி. ஆனால் லாப விரையாதிபதி சனி பாக்கியஸ்தானத்தில் இருக்கிறார்.
ராஜகோபுரத்தைக் குறிக்கக் கூடிய சூரியன் மறைவு. எனவே ராஜகோபுரம் இல்லை அல்லது சிதிலமடைந்துள்ளது. அதே போல்தான் கொடிமரமும்.
வந்தது உபய லக்னம். எனவே இந்த கோவிலானது ப்ரதான கோவில் இல்லை. லக்னாதிபதி இருக்கும் வீடு காவல் தெய்வத்தைக் குறிக்கும் பாவமாகிய கன்னி. எனவே காவல் தெய்வம்.
நீர் லக்னம். எனவே கோவில் அருகில் நீர் நிலைகள் உண்டு. கோவிலுக்கு மேற்கு பக்கத்தில் கணபதி கோவில். கோவிலுக்கு கிழக்குப் பக்கத்தில் அல்லது அக்னி மூலையில் சிவன் ஆலயம் அல்லது சிவன் சம்பந்தமான ஆலயம். கோவிலுக்கு நேர் எதிர் திசையில் பெருமாள் அல்லது சாஸ்தா ஆலயம்.
கோவிலுக்குரிய நைவேத்யம் சைவப் படையல். ஆனால் கோவிலுக்கு வெளியில் இருக்கும் தேவதைக்கு படையல் அசைவம்.
செவ்வாய் லக்னத்திற்கு திரிகோணம் பெறுகிறார். எனவே அம்பாளுக்கு கையில் ஆயுதம் உண்டு.
பாக்கியஸ்தானத்தில் சனி. எனவே கோவிலினுடைய பாக்கியம் பிறர் அனுபவிக்கிறார்கள்.

No comments: