Tuesday, June 6, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஊரின் வாஸ்து - தொகுப்பு ஒன்பது:

ஒவ்வொரு ஊரிலும் சுடுகாடு அல்லது இடுகாடு தர்மராஜனின் திசையான தெற்கில் அமைந்திருக்கும். சுடுகாடு அல்லது இடுகாடு அமைந்திருக்கும் இடத்தில் கட்டாயம் நீர் நிலைகள் இருக்கும். சில ஊர்களில் சுடுகாடு இருக்காது. பல ஊர்களுக்கு சேர்ந்த மாதிரி அமைத்திருப்பார்கள். சு(இ)டுகாடு அமைந்திருக்கும் இடத்திற்கு அருகில் கட்டாயமான முறையில் சிவன் ஆலயம் அல்லது ஐயனார் அல்லது ஏதேனும் அம்மன் ஆலயம் அமைக்கப்பட்டிருக்கும்.

ஊரின் பிரதான தெய்வம் வருடத்திற்கு ஒரு முறை இந்த ஆலயத்திற்கு விஜயம் செய்யும். மேலும் ஊரில் யாராவது இறந்து அந்த பிரதான தேவதை விஜயம் இங்கு செய்ய நேரிட்டாலும் நீத்தார் கடமையை நிறுத்த மாட்டார்கள்.
யாராவது இறந்து போனால் தீட்டு ஏற்படும். அதனை நீக்குவதற்காக ஊரைச் சுற்றியிலும் எட்டு திசைகளிலும் இருக்கும் காவல் தெய்வங்களுக்கு அக்னி ரீதியாக சுத்தம் செய்வார்கள்.
ஊரின் பிரதான கோவிலின் கொடியேற்றத்தின் போது ம்ருத்ஸங்கிரணம் - அங்குரார்ப்பணம் என ஒரு விழா செய்வார்கள். ம்ருத் என்றால் வடமொழியில் மண் என்று பொருள்.





இதில் செய்யக்கூடிய விஷயங்கள்:
பஞ்சபூதங்களை வணங்குவது. முதலில் அந்த ஊரிலுள்ள ஏதேனும் ஒரு நீர்நிலையிலிருந்து மண் எடுத்து வருவார்கள். அடுத்ததாக ஊரின் பிரதான நீர் நிலையிலிருந்து நீர் எடுத்து கும்ப கலசம் ஸ்தாபிப்பார்கள். பின் அக்னியை ஹோமத்தில் மூட்டி வேண்டுவார்கள். அடுத்ததாக அந்த அக்னியின் மூலமாக ஏற்படக்கூடிய புகை காற்றுடன் கலக்கும் போது காற்றினை வேண்டுவார்கள். ஹோமத்திலிருந்து ஏதாவது ஒரு ரூபத்தில் (ஓலை அல்லது தீச்சட்டி) அக்னியை எடுத்து ஊரின் எல்லைகளை வலம் வருவார்கள். இந்நிகழ்ச்சி முடிந்தவுடன் கடைசியாக ஒரு கும்பத்தை எடுத்துக் கொண்டு கோபுரம் அல்லது விமானத்தில் ஏறி ஆகாய தேவதையை வேண்டுவார்கள்.



தொடரும்.....

No comments: