Monday, June 12, 2017

ஊரின் வாஸ்து - தொகுப்பு பத்து

ஊரின் வாஸ்து - தொகுப்பு பத்து
ஊரின் ப்ரதான கோவிலில் வருடத்திற்கு இரண்டு திருவிழாக்கள் நடத்தப்படும். ஒரு திருவிழா உத்தராயணத்திலும் (தை முதல் ஆனி வரை ) இன்னொன்று தக்ஷிணாயத்திலும் (ஆடி முதல் மார்கழி வரை) நடத்தப்படும். 

உத்தராயணத்தில் நடத்தப்படும் விழா மக்களுக்கானது. தக்ஷிணாயத்தில் நடத்தப்படும் விழா தேவதைகளுக்கானது.

ஊரின் கிழக்குக் கடைசியில் ஏதேனும் ஒரு அம்மன் ஆலயமோ அல்லது ஏதேனும் ஒரு காவல் தெய்வமோ இருக்கும். அந்த கோவிலுக்காகவே தக்ஷிணாயன திருவிழா நடத்தப்படும். 

தக்ஷிணாயன திருவிழாவின் போது எட்டுத் திக்கிலிருக்கும் தேவதைகளுக்கும் பிரதான தெய்வம் விருந்து கொடுப்பதாக ஐதீகம். 

நாளாவட்டத்தில் இரண்டு திருவிழா ஒரு திருவிழாவாக சுருங்கி இப்போது சில கோவில்களில் இதுவும் நடப்பதில்லை. 

புஷ்ப யாகம்:
புஷ்ப யாகம் என்றவுடன் அனைவரும் புஷ்பத்தினாலேயே ஹோமம் - யாகம் செய்வார்கள் என நினைக்கலாம். ஆனால் புஷ்ப யாகம் என்றால் பூக்களினாலேயே பிரதான தேவதைக்கு அதனுடைய நக்ஷத்ரத்தின் போது அபிஷேகம் செய்வது. உதாரணமாக இந்த பிரதான தேவதை பெருமாளாக இருந்தால் திருவோண நக்ஷத்ரத்தன்று  நடைபெறும். மிக மிக முக்கியமான விஷயம் - கோவிலுக்கு சம்பந்தபட்டவர்கள் யாரையும் விடாமல் இந்த யாகத்திற்கு அழைக்க வேண்டும். அப்படி இல்லாத பக்ஷத்தில் தேவதை திருப்தி கொள்ளாது.



தொடரும்...

No comments: