தனுசு:
எதிலும் நேர்மையுடனும் விடாமுயற்சியுடனும் செயல்பட்டு முன்னுதாரணமாக வாழும் தனுசு ராசி அன்பர்களே நீங்கள் அனைத்து பிரச்சனைகளையும் உங்கள் வாக்கு சாதுர்யத்தால் சமாளீப்பீர்கள். ஆனால் எந்தக் காரியத்தையும் தள்ளிப் போடுதல் கூடாது என்பதனை கவனித்துக் கொள்ள வேண்டும்.
எப்படி இருக்கப் போகிறது இந்த விஜய வருஷம்:
கிரகநிலை:
இந்த விஜய வருஷ புத்தாண்டில் உங்கள் ராசிக்கு பஞ்சமபூர்வ ஸ்தானத்தில் கேதுவும், ராசிக்கு 6ம் இடத்தில் ராசிநாதன் குருவும், லாபஸ்தானத்தில் சனி ராகுவும் இருக்கிறார்கள். கள்த்திர சப்தமஸ்தானத்திற்கு குரு மே மாதம் 27-ம் தேதி மாறுகிறார். இனி பலன்களைப் பார்க்கலாம்.
செய்தொழிலில் உங்களை முன்னிலைப்படுத்திக்கொள்ளும் சந்தர்ப்பங்கள் உருவாகும். எதிர்பாராத நபர்களிடமிருந்து நல்லாதரவு கிடைக்கும். இன்முகத்துடன் வலம் வருவீர்கள். உங்களுக்கு கீழ் வேலை செய்பவர்களின் சிறுசிறு தவறுகளைக் கண்டுகொள்ள மாட்டீர்கள். பெற்றோர் பெருமைபடத் தக்க வகையில் குடும்ப ஒற்றுமையைப் பேணிக் காப்பீர்கள். எல்லா விஷயங்களுக்கும் உடனடி தீர்வைக் காண்பீர்கள். நண்பர்களிடம் தன்னம்பிக்கையை ஏற்படுத்துவீர்கள். பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்னைகள் அகலும். அவற்றிலிருந்து வருமானம் வரத்தொடங்கும். பிள்ளைகளின் நலனில் அக்கறை செலுத்துவீர்கள். எதிரிகள் தானாகவே அடங்கி விடுவார்கள். செய்தொழிலை விரிவுபடுத்துவதற்காக அடிக்கடி வெளியூர் பயணங்களை மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். எதிரிகளையும் நண்பர்களாக்கிக் கொள்வீர்கள். வெளியில் கொடுத்திருந்த கடன் வட்டியும் முதலுமாகத் திரும்பி வரும். உங்களின் சொந்தக் காலில் நின்று வெற்றி பெறுவீர்கள். தெய்வ பலத்தைப் பெருக்கிக்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி நிறையும். உறவினர்களை எக்காரணம் கொண்டும் சந்தேகப் பார்வை பார்க்க வேண்டாம். எந்த வியாதி என்று அறிய முடியாமல் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தவர்கள் சட்டென்று குணமடைந்துவிடுவார்கள். மரியாதை நிமித்தமாக உயர்ந்தோரை சந்தித்து பெருமையடைவீர்கள். சிலருக்கு இந்த ஆண்டு விசாலமான இல்லங்களுக்கு மாறும் யோகம் உண்டாகும். கூட்டு வியாபாரத்தில் உள்ளவர்கள் புதிய நண்பர்களைச் சேர்க்கும்போது எச்சரிக்கையுடன் இருக்கவும். ஏனெனில் தகுதியில்லாதவர்களால் வில்லங்கம் வரலாம். மற்றபடி நஷ்டம் வரும் தொழில்களிலிருந்து பக்குவமாக விலகிவிடுவீர்கள். பணப்புழக்கத்தில் பின்னடைவுகள் ஏற்படாது. எவருக்கும் முன் ஜாமீன் போட வேண்டாம். உங்கள் பெயரில் கடன் வாங்கித் தர வேண்டாம். உத்யோகஸ்தர்கள் கவனமாகப் பணியாற்றி உழைப்புக்கேற்ற பலன்களைப் பெறுவீர்கள். உங்களுக்குக் கீழ் பணியாற்றுபவர்களால் சில பிரச்னைகள் ஏற்படும் என்பதால் கவனமாக நடந்துகொள்ளவும். அவர்களின் குறைகளை உடனுக்குடன் தீர்த்து வைக்கவும். பிரச்னைகளை வளரவிட வேண்டாம். ஊதிய உயர்வு சிறப்பாக அமையும். மேலிடத்தின் நம்பிக்கைக்கு உரியவர் என்ற பெயரை வாங்குவீர்கள். வியாபாரிகள் வியாபாரத்தில் முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்களின் எண்ணங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய முதலீடுகள் செய்வதற்கு பழைய முதலீடுகள் கைகொடுக்கும். போட்டிகள் சற்று கடுமையாக இருந்தாலும் அவற்றை சாதுர்யத்துடன் சமாளித்து வெற்றி பெறுவீர்கள். கொடுக்கல், வாங்கல் விஷயங்கள் சாதகமாக முடியும். கூட்டாளிகளின் ஒத்துழைப்பைப் பெற்று செயல்பட்டால் உங்களின் முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். விவசாயிகளுக்கு கொள்முதல் அதிகரித்தாலும் லாபம் குறைவாகவே கிடைக்கும். அதனால் உபரி வருமானத்தைப் பெருக்க காய்கறிகள், கிழங்குகள் போன்றவற்றை பயிரிட்டு பலனடைவீர்கள். சந்தையில் போட்டிக்குத் தகுந்தவாறு விலையை நிர்ணயம் செய்து விற்றால் நஷ்டங்களைத் தவிர்க்கலாம். அரசியல்வாதிகளுக்கு சமூகத்தில் மதிப்பு, மரியாதை உயரும். கடந்த காலத்தில் ஒதுக்கி வைத்திருந்த திட்டங்களை செயல்படுத்த முனைவீர்கள். கட்சிப் பணிகளில் ஆர்வத்துடன் ஈடுபடுவீர்கள். கட்சியில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிக்க வேண்டாம். தற்போது உள்ள நிலைமையைப் பயன்படுத்தி கட்சி மேலிடத்திடம் நல்ல பெயர் வாங்க முயற்சிக்கவும். சமுதாயத்தில் உங்கள் கௌரவமும், புகழும் உயரும்.
கலைத்துறையினருக்கு விருதுகளும் பாராட்டுகளும் கிடைக்கும். கால தாமதம் ஏற்பட்டாலும் புதிய ஒப்பந்தங்களைச் செய்வீர்கள். சக கலைஞர்களில் நம்பகமானவர்களைக் கலந்தாலோசித்த பிறகே முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். தொழிலில் நிலவிய போட்டி, பொறாமைகள் குறையும். பல நாட்களாக வராமல் இருந்த தொகை உங்கள் கையைத் தேடி வரும். புதிய தொழில் நுட்பத்தை அறிந்துகொள்வீர்கள். பெண்மணிகளுக்கு கணவரிடம் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் சந்தோஷம் நிறையும். உங்களின் பொறுப்புகளை சரியாக நிறைவேற்றுவீர்கள். சகோதர, சகோதரி உறவில் ஏற்பட்ட விரிசல்கள் மறையும். உடல் ஆரோக்யத்தில் பெரிய பாதிப்புகள் ஏற்படாது. மாணவமணிகள் நல்ல முறையில் படித்து மதிப்பெண்களைப் பெறுவீர்கள். விளையாட்டுகளில் ஈடுபட்டு உற்சாகம் அடைவீர்கள். உங்களின் வருங்காலக் கனவுகள் பலிப்பதற்கான அறிகுறிகள் தென்படும்.
பரிகாரம் : வியாழன்தோறும் அருகிலிருக்கும் சிவன் கோவிலுக்குச் சென்று ஸ்ரீகுருபகவானை வணங்கி வரவும். தினமும் முன்னோர்களை வணங்கவும்.
சொல்ல வேண்டிய மந்திரம்: தினசரி காலை சிவபுராணம் படிக்கவும். தேவாரம் தெரிந்தவர்கள் அதனை பாராயணம் செய்யவும்.
மலர் பரிகாரம்: வியாழகிழமைதோறும் வினாயகருக்கு அருகம்புல்லை அணிவித்து வழிபட்டு வர உங்கள் பொருளாதார நிலைமை படிப்படியாக மூன்னேற்றம் ஏற்படும்.

No comments:
Post a Comment