Tuesday, October 2, 2012

இன்றைய ராசிபலன் - 02.10.2012

பன்னிரு ராசிகளுக்குண்டான் இன்றைய பொது ராசிபலன்கள்


 

மேஷம்: பொதுவாக அன்றாடப் பணிகளை கவனித்துக் கொண்டு மிகவும் நிதானமாக இருக்க வேண்டிய நாள். பெரியோர் சொல்படி நடந்து கொண்டால் தொல்லைகளைத் தவிர்க்கலாம். பலவிதமான சூழ்நிலைகளில் உங்களுடைய சாதுர்யத்தால் சமாளிப்பீர்கள்.

ரிஷபம்: எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் சச்சரவுகளை நீக்கலாம். ஆசையைக் குறைத்துக் கொண்டு அன்றாடப் பணிகளை சரிவர செய்து வந்தாலே நல்லவிதமான அனுகூலங்கள் உங்களை வந்து சேரும். தாம்பத்தியத்தில் சிக்கல்கள் தீரும். ரோகின் நக்ஷத்திரகாரர்களுக்கு யோகமான நாள்.

மிதுனம்: அகலக் கால் வைத்தால் அவதி நிச்சயம். ஆனாலும் தேவைக்கேற்ற பணவரவு உங்களை வந்து சேரும். எதிர்காலத்திற்குத் தேவையான உபயோகமுள்ள பயணம் ஒன்றை மேற்கொள்வீர்கள். பகைவர்கள் உங்களுக்கு பணியக்கூடிய சூழ்நிலைகள் உருவாகும். வீடு நிலம் இருந்தால் அது வெற்றி பெறும் முகநிலை உருவாகும்.

கடகம்: மனோதிடம் பளிச்சிடும் நாள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த குறிப்பிட்ட நன்மை நடக்கும் நாள். எதிர்பாராத வகையில் பணம் வந்து சேரும். சில தொல்லைகள் தவிர்க்க முடியாமற் போகும். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபட்டால் தொல்லைகள் குறையும்.

சிம்மம்: சுக்ரனுடைய முழுபலமும் கிடைக்க வாய்ப்புகள் உண்டு. பொருளாதார சங்கடங்கள் உருவாகது. அன்றாடப் பணிகள் சரிவர நடைபெறும். உற்சாகத்துடன் இந்த நாளை கழிப்பீர்கள். கொடுக்கல் வாங்கலில் இடர் ஏற்பட இடமுண்டானதால் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

கன்னி: நன்மைகளை அனுபவம் மூலமாக கிடைக்கப் பெறுவீர்கள். உறவினரால் ஒரு தொல்லை ஏற்படலாம். மேலதிகாரிகளில் கண்டிப்புக்கு ஆளாக நேரிடலாம். கலைத்துறை சுறுசுறுப்பாக அமையும். தாம்பத்தியம் சகஜநிலையில் இருந்து வரும்.

துலாம்: அவ்வப்போது சின்னச் சின்ன வாக்குவாதங்கள் ஏற்பட்டாலும் மிகவும் சாதுர்யமாக சமாளிப்பீர்கள். வெளி இடங்களில் எதிர்ப்புகள் அதிகமாக இருக்கும். முக்கிய ஆசாமிகளால் பல பாதிப்புகள் ஏற்பட்டாலும், பணத்திற்குப் பற்றாக்குறை ஏற்படாது.

விருச்சிகம்: கல்வியில் புதிய மாற்றம் உருவாகும். அரசாங்க அனுகூலம் ஏற்படும். வாகனங்கலைப் பிரயோகப்படுத்தும் போது மிகவும் கவனம் தேவை. செய்யும் உத்தியோகத்தில் இடமாற்றமோ அல்லது பணி நிரந்தரமோ ஏற்படலாம்.

தனுசு: பணப்புழக்கம் அதிகரிக்கும். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடியும். மதிப்பு மரியாதை சிறப்படையும். செல்வாக்கு ஓங்கும். குடும்பத்தில் குதூகலம் ஏற்படும். தம்பதிகளிடையே அன்பு மேலோங்கும். பிரிந்த குடும்பம் ஒன்றுசேரும்.

மகரம்: பொதுவாக நற்பலன்கள் கூடுதலாக கிடைக்கும். எதிலும் சிறிதளவு ஆதாயம் ஏற்படும். முன்விரோதம் காரணமாக சில சங்கடங்கள் உருவாகலாம், என்றாலும் அவற்றை சமாளிக்கும் வழிகள் உங்களுக்கு புலப்படும். இயந்திரங்களைப் பிரயோகிக்கும் பணியாளர்கள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்களில் ஈடுபடவும் வாய்ப்புகள் உண்டு.

கும்பம்: தொழிலில் சிக்கல்கள் உருவாகாது என்றாலும் சிற்சில வாக்குவாதங்கள் இருக்கும். எதிலும் அளவோடு ஈடுபட்டு வந்தால் தொல்லைகள் இராது. அடுத்தவர்களுடைய விவகாரங்களில் வீணாக தலையிட வேண்டும். பகைவர்கள் பணிந்து போகவும் வாய்ப்புகள் உண்டு.

மீனம்: விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். உறவினர், நண்பர் களுடன் மனத்தாங்கல் வரும்.யாருக்கும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். வியாபாரத்தில் வேலை யாட்களால் பிரச்னைகள் வரக்கூடும். உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் வந்து நீங்கும். போராடி வெல்லும் நாள்.

குறிப்பு:
 இங்கு கொடுக்கப்பட்டிருப்பது பொதுவான பலன்களே. இவை திசாபுத்தி பலன்களை பொறுத்து மாறுதலடையலாம்.

1 comment:

VSK said...

திசாபுத்தி அல்லது தசாபுத்தி??????