Saturday, October 6, 2012

இன்று - 06.10.2012

இன்று - 06.10.2012


நந்தன வருஷம்
புரட்டாசி மாஸம் 20ம் தேதி - அக்டோபர் 06 2012
தக்ஷிணாயனம்
வருஷ ரிது
சனிக்கிழமை
திதி: கிருஷ்ணபக்ஷம்(தேய்பிறை) ஷஷ்டி இரவு 7.29 வரை பின் ஸப்தமி
நக்ஷத்ரம்: மிருகசீரிஷம் (நாள் முழுவதும்)
யோகம்: வியதிபாதம் நாழிகை 15.56
கரணம்: கரஜி நாழிகை 1.19
சூரிய உதயம் 06.10
அஸ்தமனம்: மாலை மணி 06.04
அஹசு: நாழிகை 29.39
லக்ன இருப்பு: கன்னி காலை மணி 06.53
இராகு காலம்: காலை 09.11 முதல் 10.41 வரை
எமகண்டம்: மதியம் 01.41 முதல் 3.11 வரை
குளிகை: காலை 06.11 முதல் 7.41 வரை
சூலம்: கிழக்கு
பரிகாரம்: தயிர்
நல்லநேரம்:
காலை 7.41 - 09.11
மாலை 4.41 - 6.11

குறிப்பு:
[1] சந்திராஷ்டமம்: அனுஷம்
[2] நக்ஷத்திர யோகம்: சித்தயோகம்
[3] மஹாவியதீபாதம்
[4] ஸ்ரீவில்லி சமீபம் சின்னத்திருவண்ணாமலை ஸ்ரீஸ்ரீனிவாஸப் பெருமாள் கெருட வாகனத்தில் பவனி
[5] திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவான் சிறப்பு ஆராதனை
[6] இன்று கெருட தரிசனம் செய்தால் நன்று.
[7] காக புரிஷம் நடந்தால் ஸ்நானம் செய்துவிட்டு காரியத்தை தொடர்தல் நன்று.
[8] சமநோக்கு நாள்

-----------------------------
இன்றைய ராசிபலன் 

மேஷம்: மகிழ்ச்சியின் மிகுதியால் அலட்சியமாகப் பேசுவதை தவிர்ப்பது நல்லது. நாவடக்கம் மிகத்தேவை. கேளிக்கை வினோதங்களில் அதிகமாக ஈடுபட்டு உடலைக் கெடுத்துக் கொள்ள நேரிடலாம்.

ரிஷபம்: குடும்பத்தில் எந்தவிதமான சங்கடங்களும் இராது. கணவன் மனைவியிடையே நல்லுறவு நீடிக்கும். அடிக்கடி மறதி ஏற்படலாம், கவனம் தேவை. ஆதலால் ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்து முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டும்.

மிதுனம்: கூடிய மட்டும் நெடுந்தூர பயணங்களை திட்டமிட்டு செய்வது நன்மை. கலைத்துறையினர் மேன்மை பெறுவார்கள். வரவேண்டிய பணபாக்கிகள் வசூலாகும். வியாபாரிகள் எச்சரிக்கையாக நடக்க வேண்டிய காலகட்டமிது.

கடகம்: இல்லாதவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நகைக்கடை, துணிக்கடை வியாபாரிகள் நிறைய சம்பாதிப்பார்கள். ஒன்றிற்கு மேற்பட்ட துறைகளில் இருப்பவர்களுக்கும் பொன்னான காலமிது. கலைத்துறையினருக்கு நன்மைகள் கூடும் காலமிது. சினிமா, நாடகம், நாட்டியம் துறைகளை சார்ந்தவர்களுக்கு புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.

சிம்மம்: நன்மை, தீமைகள் என இரண்டுமே ஏற்படும். அலுவலகத்தில் பொறுப்பும், சுமையும் அதிகரிக்கும். சகிப்புத் தன்மையுடன் உழைக்க வேண்டியிருக்கும். சோம்பலால் கடமையைப் புறக்கணித்தால் நஷ்டம் ஏற்படலாம். கலைத்துறையினருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இனங்களில் வரவேற்பு கிடைக்கும்.

கன்னி: வரவேண்டிய பொருள் வராமல் கால தாமதமாகும். முக்கியமான தருணத்தில் முறையாகப் பேசமுடியாத ஒரு தடை ஏற்படலாம். இதனால் காரியத்தடை ஏற்படக்கூடும். மஹாலக்ஷ்மி வழிபாடு விமோசனம் தரும்.

துலாம்: உஷ்ணாதிக்கம் ஏற்படலாம் கவனம் தேவை. நிலபுலன்களால் ஆதாயம் உண்டு. பொறியியல் துறையில் ஏற்றம் தரும். விவசயிகள் நற்பலன்கள் அடைவார்கள். சுரங்கங்கள், ஆலைகளில் பணிபுரிவோர் மற்றும் தொழிலாளர்களுக்கு நற்காலமிது.

விருச்சிகம்: உழைத்த உழைப்பு வீண் போகாது. வாகன கஷ்டம் ஏற்படலாம். குடும்பத்தில் சுபகாரியங்கள் நிகழும். கலைத்துறையில் உள்ளவர்களுக்கு பணியில் உள்ள போது விபத்துகள் நேரிடலாம் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு வெற்றிக்கனியைப் பறிக்கும் காலகட்டமிது.

தனுசு: மனநிலை சீராக இருக்கும். மக்கள் நலம் சிறப்பாக இருக்கும். பெற்றோர் நலத்தில் அக்கறை செலுத்த வேண்டியிருக்கும். கலைத்துறையினர் சிறப்பு பெறுவார்கள். குறிப்பாக நட்சத்திரங்கள், சங்கீத வித்வான்கள் ஆகியோருக்கு புகழ் ஓங்கும். மக்கள் தொடர்பு கொண்டிருப்பவர்கள், சிறப்பான பாராட்டைப் பெறுவார்கள்.

மகரம்: வெளிநாட்டு பயணம் ஆதாயம் தரும்.  ஓரிரு பெரியவர்கள் எதிர்பாராத வகையில் சன்மானம் வழங்குவார்கள். மருத்துவர்களுக்கும் பேராசிரியர்களுக்கும் விஞ்ஞானிகளுக்கும் ஏற்ற காலகட்டமிது. புதிய முயற்சிகளில் ஈடுபடலாம். பொருளாதாரச் சூழ்நிலைகள் செழிப்பாக மாறும்.

கும்பம்: ஏழைகள் மீது கருணை கொண்டு உதவிகள் செய்தால் இறைவனின் அருள் உங்களுக்கு கிட்டும். குரு வழிபாடும் நன்மையைத் தரும். ஆற்றலும் ஐஸ்வர்யமும் கூடும். துணிவும் தன்னம்பிக்கை உள்ளவர்கள் நீங்கள். இப்போதும் அதற்கு பங்கமில்லை. 

மீனம்: ஓரளவு சோதனைகளும் இருக்கும். முன்னோர்கள் வழிபாடு மிகவும் முக்கியம். நம்பிக்கையுடன் செய்யும் இந்த வழிபாட்டால் நேர்மறையான செயல்கள் அனைத்திலும் வெற்றிகள் கிட்டும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும்.

------------------------------

நன்றி.
---
ஜோதிடம் எங்களது தொழிலல்ல...
எங்களது உயிர்.

அடியேன் தாஸன்
பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யர் MCA, MA(Ast)
நவதிருப்பதி ஸ்தலம் பெருங்குளம் கோவில், கிராமம் பரம்பரை ஜோதிடர்
இருப்பு:சென்னை.
ஜோதிடம்: http://kuppuastro.blogspot.com/

1 comment:

Anonymous said...

Thanks a ton for stating your opinions. Being a writer, I am always in need of unique and different solutions to think about a topic. I actually uncover fantastic creativity in doing this. Many thanks