Wednesday, October 10, 2012

புரட்டாசி சனிக்கிழமை - பாகம் நான்கு

அன்பின் உள்ளம் கொண்ட அனைவருக்கும் வணக்கம். 

மிகுந்த உற்சாகமாகவும் எழுச்சியுடனும் புரட்டாசி மூன்றாம் வார ஸகஸ்ரநாம பாராயணம் பூஜை இனிதே நிறைவுற்றது. எல்லாம் வல்ல திருச்செந்திலதிபன் ஸ்ரீசுப்ரமணிய ஸ்வாமியின் கிருபா கடாக்ஷத்தாலும்,  மிகுந்த பணிச்சுமைகளுக்கிடையிலும் கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதற்காக பல முன்னேற்பாடுகள் செய்து, பலரின் உதவியுடன் இனிதே நிறைவுற்றது. முதலில் இந்த வாய்ப்பை நமக்கு நல்கிய நமது இறைவனுக்கும், அம்மைக்கும், எங்களது முன்னோர்களுக்கும், எல்லா
குருமார்களுக்கும் நன்றிகள் பல. 

இந்த நேரத்தில் முதலில் நமக்கு உதவிய எங்களது பெற்றோர் ஸர்வசாதகம் ஸ்ரீசுப்ரமணியன் ஜோஸ்யர் - உமா அவர்களுக்கும், எங்களது தாய் வழி சித்தப்பா திருச்செந்தூர் ஸ்ரீசங்கர நாராயணன் - ஜெயந்தி அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும்,  எங்களது உடன்பிறவா சகோதரன் புதுக்கோட்டை திரு.பார்வதிநாதன் கார்த்திக் அவர்களுக்கும் நன்றியை காணிக்கையாக்குகின்றேன்.

அக்டோபர் 6ம் தேதி மிகுந்த கூட்டம் இருந்தாலும் நாம் கூறியபடி திருச்செந்தூர் முருகன் கோவிலுக்குள் இருக்கும் ஸ்ரீரங்கநாதர் சன்னிதியில் பாராயணமும், அர்ச்சனையும் செய்யலாம் என்ற எண்ணத்துடன் இருந்தோம். ஆனால் சரியான கூட்டமாக இருந்த காரணத்தால் நம்மால் கோவிலுக்குள் எதுவும் செய்ய இயலாமல் போயிற்று. ஆனாலும் நமது வேண்டுகோளை ஏற்று அர்ச்சனை மட்டும் செய்து கொடுத்தார்கள். அதன் பின் அங்கிருந்த ஒரு மடத்தில் ஸகஸ்ரநாம பாராயணம் செய்ய 18 பேரை ஏற்பாடு செய்திருந்தோம். (6 வேதியர்கள் + 6 சுமங்கலிகள் + 3 பிரம்மசாரி குழந்தைகள் + 3 கன்னியா குழந்தைகள்). 50 பேருக்கு சாப்பாடும் ஏற்பாடுகள் செய்திருந்தோம். எல்லாமே இறைவன் அருளால் நன்றாக நடந்தது. வந்திருந்த 18 பேருக்கும் தேங்காய் வெற்றிலை பாக்கு தாம்பூலம் (பெண்களுக்கு ஜாக்கெட் பிட், புஷ்பம்) என ஒவ்வொரு செட்டாக கொடுத்தோம். மேலும் அங்கிருந்த 6 பிச்சைக்காரர்களுக்கு பிக்ஷாவந்தனமும் செய்தோம். அனைவரும் இன்முகத்துடன் வாங்கிக் கொண்டு நம்மிடம் அர்ச்சனைக்கு கொடுத்தவர்களை ஆசீர்வாதம் செய்தார்கள். மின்வெட்டு மிகுந்த பிரச்சனைகள் கொடுத்தது. அந்த வேளையில் நாம் ஏற்பாடு செய்திருந்த
ஜெனரேட்டரும் வேலை செய்யாமல் போகவே அருகிலிருந்த ஸ்டூடியோவில் இருந்த நண்பரிடம் சொல்லி வேறொரு டிஜிட்டல் கேமராவில் அனைத்தையும் பதிவு செய்தோம்.

வரும் கடைசி வாரம் பெரிய அளவில் ஹோமம் செய்து அர்ச்சனை செய்ய ஏற்பாடுகள் செய்து வருகிறோம். பிரஸாதம் வேண்டும் அன்பர்கள் Rs.100/- அனுப்பி வைக்கவும். பூஜைக்கும் தங்களால் முடிந்தவரை உதவிகள் செய்யலாம். உங்களுக்கு எத்தனை சிவப்பு கயிறு வேண்டும் என்ற விவரத்தையும், ஹோமத்தில் இடப்பட்ட காசுகள் எத்தனை எண்ணிக்கை வேண்டும் என்பதையும் தெரியப்படுத்த வேண்டுகிறோம். ஆனால் ஒருவருக்கு ஸ்ரீசக்ர டாலர் 3 வரை மட்டுமே நம்மால் கொடுக்க முடியும் என்பதையும் தெரியப்படுத்துகிறோம். பணம் அனுப்பி விட்டு எங்களுக்குத்
தெரியப்படுத்தவும்.

நாங்கள் ஏற்கனவே கூறியபடி பணம் என்பது இரண்டாம் பக்ஷம் முதலில் உங்களுக்கு நல்லது நடக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம். எங்களது முகவரியையும், எனது பேங்க் விபரங்களையும் இங்கே கொடுத்திருக்கிறோம்.

கடைசி வார சனிக்கிழமைக்கும் அர்ச்சனைக்குக் கொடுக்காத உங்கள் நண்பர்கள், உறவினர்களையும் பங்கேற்க சொல்லுங்கள். நன்றி.

புகைப்படங்கள் கீழே கொடுத்துள்ளேன்.


மூன்று கோபுரங்கள் பின்னால் தெரிவது கம்பீரமான ராஜகோபுரம், இடப்பக்கம் தெரிவது பந்தல் கோபுரம், வலப்பக்கம் தெரிவது திருவாவடுதுறை ஆதீனம் சார்பில் கட்டப்பட்ட ஷஷ்டி மண்டபம்.



கம்பீரமான ராஜகோபுரம்
என்னதான் பெருங்குளம் ராமகிருஷ்ணன் ஜோஸ்யரிடம் பார்த்தாலும்.......
அன்பர்கள் எடுத்த சங்கு
அன்பரின் பெண் கொடுக்கும் போட்டோ போஸ்
நாழிக்கிணறுக்கு செல்லும் வழி
பூஜை ஆரம்பிக்கும் முன் சாக்கில் உள்ள தேங்காய்கள்
சம்பாவனை கொடுக்கும் முன் தனித்தனியாக பிரித்து வைக்கப்படுகிறது
சம்பாவனை கொடுக்க ஆரம்பிக்கப்படுகிறது.

ஸ்ரீராம ராம ராமேதி என முழங்கிய சுகன்யா

மடத்தில் மின்வெட்டானாலும் சிரித்த முகத்துடன் இருந்த அன்பர்களின் குடும்பங்கள்


மிகுந்த உற்சாகத்துடன் சொல்லிய தம்பி நம்பி

எங்கள் அண்ணா

மின்வெட்டின் கோரம்...

சுமங்கலிகளுக்கு எங்களுடைய சித்தப்பா தம்பதியினர் கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.






எங்களது சகோதரனின் தம்பதியினர் வேதியர்களுக்கு கொடுக்க ஆரம்பிக்கிறார்கள்.



மனநெகிழ்ச்சியுடன் நமது அன்பர்களை ஆசீர்வதிக்கும் வேதியர்.

கண்ணீர் மல்க சம்பாவனை வாங்கும் வேதியர்.



பாம்பன் ஸ்வாமிகள் அருளிய குமாரஸ்தவம்

திருச்செந்தூரின் காவல் தெய்வம் பைரவர், நயினார், முண்டன் ஸ்வாமிகள்

திருச்செந்தூர் கடல் தூரத்தில் தெரிவது அய்யா கோவில்

கோவில் யானை வள்ளி

பந்தல் மண்டப கோபுரம், கோபுரத்தில் அறுமுகன்.

பிக்ஷாவந்தனம் கொடுக்கும் போது போட்டோ எடுக்கவில்லை.

1 comment:

இராஜராஜேஸ்வரி said...

நேரில் தரிசித்த திருப்தி தந்த படங்களுக்கும் பகிர்வுகளுக்கும் மனம் நிறைந்த இனிய நன்றிகள்..