Thursday, October 18, 2012

சக்தி பீடங்கள் - தொடர் - பாகம் ஒன்று

அனைவருக்கும் வணக்கம்.

தனம்தரும் கல்விதரும் ஒருநாளும் தளர்வுஅறியா
மனம்தரும் தெய்வவடிவும்தரும் நெஞ்சில் வஞ்சமில்லா
இனம்தரும் நல்லனஎல்லாம்தரும் அன்பர் என்பவர்க்கே
கனம்தரும் பூங்குழலாள் அபிராமி கடைக்கண்களே. 



 நம் அனைவருக்கும் பெருமாளின் 108 திவ்யதேசங்கள் தெரியும். 274 பாடல் பெற்ற சிவாலயங்கள் தெரிந்திருக்கும். இதேபோல உமையம்மைக்கும் 51 சக்தி பீடங்கள் இருக்கிறது. 

வரலாறு:
முன்னொரு காலத்தில்  தக்ஷப்பிரஜாபதி  ஒரு வேள்வியில் இறைவனை அவமதித்தான். உமையம்மை தன் கணவருக்கு ஏற்பட்ட அவமானத்தைத் தாங்காமல் யோக முறையில் தன்னைத்தானே அழித்துக் கொண்டாள். இதைக்கண்ட இறைவன் அம்மையின் உடலை தன் தோளில் சுமந்து பித்துப் பிடித்தவன் போல் அலைந்தார். இதன் காரணமாக சப்தலோகங்களும் நடுக்கத்திற்கு ஆட்கொண்டன. லோகத்தில் உள்ளவர்களின் வேண்டுகோளுக்கிணங்க பெருமாள் உலகின் அமைதிக்காக அம்மையின் உடலை இறைவனிடம் இருந்து பிரிக்க எண்ணினார். அவர் மிகவும் பலமான ஸ்ரீசுதர்ஸன சக்கரத்தால் அம்மையை அறுத்தார். அது 51 பாகங்களாக சிதறி விழுந்து அவைகள் சக்தி பீடங்களாக அருள் பாலிக்கின்றன. 

குறிப்பு:

தேவிபாகவதம், ஸ்கந்த புராணம், பத்ம புராணம் ஆகிய நூல்களில் அம்மைக்கு 70 முதல் 108 வரை  சக்தி பீடங்கள்  இருப்பதாகத் தெரிவிக்கிறது.

இந்தியாவில் 42ம், பாகிஸ்தானில் ஒன்றும், பங்களாதேஷில் 4ம், நேபாளத்தில் 2ம், இலங்கையில் ஒன்றும், திபெத்தில் ஒன்றுமாக 51 இடங்களில் அம்மை அருள்கிறாள்.

தொடரும்.....

1 comment:

சுபத்ரா said...

அருமை.. தொடருங்கள் :)